ராசாத்தீ


அடீ
வெள்ளை ராசாத்தீ
உன் கூந்தலில் நான் என்
மோக விரல்களால்
நெருப்புப் பூச்சூட்டினேன்

அதற்காகவே என் பிரியமே
நீ எனக்கென உன்னை
அணு அணுவாயிக் கரைத்து
அழிந்தே போனாய்

அழிந்தும்
என்னைப் பிரிய விரும்பாமல்
என்னையும் உன்னுடன்
அழைக்கிறாய்
அந்த மேலுலகிற்கே

நியாயம்தான் என்றாலும்
உன் மீதுள்ள என் காதல்
என் உயிரையே துறக்குமளவிற்கு
அப்படி ஒன்றும்
புனித நீராடி வந்ததல்ல

ஆம் அன்பே
நான் உன் விசயத்தில்
தேவதாஸ் அல்லதான்
என்னை விட்டுவிடு
சிகரெட்டே

Comments

Siva said…
நியாயம்தான் என்றாலும்
உன் மீதுள்ள என் காதல்
என் உயிரையே துறக்குமளவிற்கு
அப்படி ஒன்றும்
புனித நீராடி வந்ததல்ல

நல்ல வரிகள் ஆசான்... இப்படி நினைத்து தான் நானும் அந்த வெண்ணிற காதலியை விட்டேன்
--

அன்புடன்
சிவா...
Anonymous said…
இப்படி நினைத்து தான் நானும் அந்த வெண்ணிற காதலியை விட்டேன்
--
enakku aasai...innum innum niraiya vaaliparkal... intha punithamillatha kaathalai kai vida vendukiraen
nalla karutthai kavithaiyaka vaarthai alangarathudan korthu irukireerkal.. paarppom..

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்