வட அமெரிக்கத் தென்றலில்


கவிதைப் பந்தலில் ஆசிரியர் கவிஞர் மதுரபாரதி
இதழ்: ஆகஸ்ட் 2004

கனடாவில் வசிக்கும் புகாரியின் கவிதைகளை மின்னிதழ்கள் மடற்குழுக்கள் என்று இணையமெங்கும் பரவலாகக் காணலாம். நா.பா. தனது 'தீபம்' இதழில் தொடர்ந்து இவரது பல கவிதைகளைப் பிரசுரித்துள்ளார். 1986-ல் அதில் வெளிவந்த இவரது 'உலகம்' கவிதையை இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை தனது ஆண்டுமலரான 'வார்ஷிகி-86' இல் இந்தியில் பிரசுரித்தது.

தொகுப்புகள்: வெளிச்ச அழைப்புகள் (2002), அன்புடன் இதயம் (2003), சரணமென்றேன் (2004), பச்சை மிளகாய் இளவரசி (அச்சில்). இதில் 'அன்புடன் இதயம்' தொகுப்பு தமிழ் உலகம் மடற்குழுவின் மூலம் மாலன் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது ஒரு புதுமை. தனிக்கவிதைகளுக்காகவும் நூல்களுக்காகவும் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 'தென்னங்கீற்றுகளைப் போல் வாரி வகிடெடுத்த" ஊரான ஒரத்தநாட்டைச் சேர்ந்த புகாரி, கனடாவில் வானொலிச் சேவைகள் மூலமும் தமிழ்மணம் பரப்புகிறார்.



கவிதைப்பந்தலில் ஆசிரியர் மணி மு.மணிவண்ணன்
இதழ்: ஆகஸ்ட் 2003

கவிஞர் புகாரி கனடாவாழ் கவிஞர். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில், மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்ற கேள்விக்கு இவர் விடை இசைக்கவிதை. இவருடைய கவிதைகள் பெரும்பாலும் சந்தத்தின் சத்தத்தோடுதான் வலம்வருவன. அண்மையில் இரண்டு கவிதைத் தொகுதிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட்டவர். 1. வெளிச்ச அழைப்புகள் 2. அன்புடன் இதயம். முதல் புத்தகம் சிறப்பாக விற்பனையாகி, பரிசும் பெற்றிருக்கிறது.

No comments: