ஒரு மொழி வாழவேண்டும் என்றால் அது மக்கள் மொழியாய் இருக்க வேண்டும்.
அந்த மொழியால்தான் அவர்கள் பல்துலக்குகிறார்கள் பசியாறுகிறார்கள் கற்பனை செய்கிறார்கள் காதல் கொள்கிறார்கள் மொத்தத்தில் வாழ்கிறார்கள்.
தமிழர்களின் மரபணுக்களில் தமிழ் மொழி பல்லாயிரம் வேர்கள் பரப்பி விரிந்து கிடக்கிறது.
சமஸ்கிருதம் மக்கள் மொழி இல்லை. அது தேவ மொழி என்று அவர்களால் சொல்லப்பட்ட தெய்வ மொழியாகிவிட்டது. அதுவே அதற்கான கேடாகவும் ஆகிவிட்டது.
சமஸ்கிருதத்தை மிக உயரமான இடத்தில் உயர்த்தி வைக்க வந்தேறிய வடவர்கள் அரும்பாடு பட்டார்கள். வந்து சேர்ந்த அந்த மொழியைக் கொண்டு மண்ணின் வாசம் வீசும் மண்ணோடு வேர்களாய் வாழும் மொழியான தமிழைச் சிதைக்க அழிக்க வேரில் தீவைக்க அரும்பாடு பட்டார்கள்.
ஆனால் அவர்கள் மிக உயரத்தில் ஏற்றிவைத்து உச்சிமுகர்ந்து தேவமொழி என்று உயர்த்திச் சொன்னதே அந்த மொழிக்கு மகா தீங்கினைச் செய்தது.
கோவில்களில், புரோகிதர்களிடம், பண்டிதர்களிடம் இருந்தது சமஸ்கிருதம், ஆனால் சாதாரண மக்களிடம் அது இல்லாமலேயே போனது.
நான் புலம்பெயர்ந்து வாழும் கனடாவுக்கும் ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்வேன், தமிழைக் காக்க வேண்டுமென்றால், அதன் சங்க இலக்கியங்களை உயர்ந்த பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கானதாய் ஆக்குவதால் அது நிகழப் போவதில்லை.
மூன்று முக்கியமான விசயங்களால் மட்டுமே தமிழ் என்றென்றும் வாழும். அழிக்கவே முடியாததாய் இன்றுபோலவே நிலைக்கும்.
1. தமிழன் தமிழில் பேசவேண்டும்
2. தமிழன் தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
3. தமிழனின் வாழ்வாதாரம் 50 விழுக்காடாவது தமிழிலேயே இருக்க வேண்டும்
*
>>>இரண்டும் அடிப்படையில் தூரத்து உறவுமொழிகளே, இரண்டுக்கும் இடையில் பல சொற்கள் மயக்கமான முறையில் உள்ளன,அதன் மூலம் தமிழா சமஸ்கிரதமா என அறிவது கடினம், ஏனெனில் இரண்டும் ஆபிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களால் அபிவிருத்தி செய்யப்பட்டதே. பேசப்பட்ட மொழிகளே. <<<
தமிழ் ஆப்பிரிக்க மொழியல்ல! அப்படியாயின் இன்று ஆப்பிரிக்காவில்தான் அதிகம் தமிழர்கள் இருக்க வேண்டும்.
தமிழ் பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் மொழி. தம்மொழி தமிழ்மொழி!
அதை எத்தனைச் சுருக்கியும் அதைத் தென் இந்தியப் பரப்பைவிட்டு நீக்க முடியவில்லை.
தமிழிலிருந்து பிறந்த தென்னிந்திய மொழிகளில் சமஸ்கிருதம் தன் கைவரிசையை வெகுவாகக் காட்டி இருந்தாலும், தமிழ்நாட்டை அத்தனை தூரம் அழிக்க முடியவில்லை.
கடைசியாக சமஸ்கிரத்தை ஏற்றி எற்றி தமிழிலிருந்து மலையாளம் பிரித்தார்கள். அது நடந்தே ஆயிரம் ஆண்டுகள் இருக்கும்.
சிலப்பதிகாரம் எழுதிய தமிழன் இன்றைய கேரளக்காரன்தானே?
சமஸ்கிருதம் வந்தேறிய மொழி. அதை வாழ்ந்த மொழியாம் தமிழோடு ஒப்பிடுதல் கூடாது.
மொழி என்ற நிலைப்பாட்டில் எல்லா மொழிகளையும் அள்ளி அணைக்கலாம். ஆனால் வேரில் தீ வைக்க வந்த மொழி என்றறிந்தால் அது இயலுமானதாக ஆவதில்லை.
சமஸ்கிருதம் ஈரானியர்களின் பெர்சியாவின் ஈரோப்பியர்களின் மொழி. அதற்கும் தமிழுக்கும் அனைத்து அமைப்பிலும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டென அறிஞர்கள் சொல்வார்கள்.
Sanskrit is a member of the Indo-Iranian subfamily of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Avestan and Old Persian.
*
>>>யப்பான் மற்றும் தாய்லாந்த மொழிகளில் திராவிட அல்லது தமிழின் கலப்பு இருக்கிறது என அறிஞர்கள் கூறுகிறார்கள். <<<
தமிழ், சைனாவிற்கும் ஜப்பானுக்கும் கொரியா தாய்லாந்து இந்தோநேசியா என்று பலநாடுகளுக்கும் பயணப்பட்ட மொழி.
அன்றைய தமிழர்கள், அறிவியல், வர்மக் கலை, சித்தமருத்துவம் என்று மிகவும் அறிவார்ந்தவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருந்தார்கள்.
ஆகவே தமிழ் தமிழன் செல்லும் இடமெல்லாம் பயணப்பட்டது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் சொல்கிறான் என்றால் அவன் எங்கெல்லாம் தமிழைக் கொண்டு சென்றிருப்பான் என்று சொல்லத் தேவையில்லைதானே?
*
Defend Snowden அன்பினிய முகமூடியாரே நீங்கள் சொல்வதெல்லாம் ஏற்கிறேன் ஆனால்
>>>தமிழும் இனி மெல்லச்சாகும் என்பது அசைக்க முடியாது இயங்கியல் விதியாகம்.<<<
இதை மட்டும் ஏற்பதற்கில்லை.
தமிழ்மீது பற்றால் மட்டுமே மகிழ்வோடு வாழும் மக்கள் இருக்கும்வரை அது மாண்டுபோகாது.
அப்படியான மக்கள் எந்நாளும் இருப்பார்கள் என்று நான் இன்னமும் காண்கிறேன்.
தமிழ் *போஜன* மொழியாக இல்லாவிட்டாலும் உயிரின் உரத்துக்கான மொழியாக இருப்பதால், தமிழர்கள் ஈரமுள்ளவர்களாக இருப்பதால் தமிழுக்கு இறப்பில்லை!
*