60

எதுவுமே இல்லாதபோது
தனிமையின் வெறுமை குத்தும்
முள்ளின் வலி

காதல் வந்து
ரத்தத்தில் சித்தாடும்போது
அதைக் காதலியிடம்
எப்படிச் சொல்வதென்று தவிக்கும்
நெருப்பு வலி

ஒருவழியாய்க்
காதல் உறுதி செய்யப்பட்டபின்
எப்போதும் அவளுடனேயே
இருக்க வேண்டுமே என்ற
உறங்கா வலி

ஒன்றுசேர முடியாத
கையாளாகாதத் தனங்கள் முகாரிபாட
தொட்டதை விடமுடியாமல் துடிக்கும்
தாங்கவே முடியாத
தொடர் வலி

எங்கிருந்தாலும் வாழ்க என்று
பேரன்புக் காதல் மனத்தோடு
வாழ்த்தி வழியனுப்பி வைத்தாலும்
உள்ளுக்குள் உயிர் போகும்
மரண வலி வலி வலி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

5 comments:

சீனா said...

வலியும் ஒரு வகை சுகம்தான்

ஆனால் இவ்வலிகள் முள் - நெருப்பு - உறக்கமின்மை - தொடர்வது - இறுதியில் மரணம்

காதலிப்பவர்களே - கவனமாய் இருங்கள்

பிரசாத் said...

அதற்காக காதலிப்பவர்கள் அனைவரும் மரண வலியை அனுபவிப்பதில்லையே...
இருந்தால் கவனமாய் இருத்தல் காதலில் அவசியம் தான்...

அன்புடன் மலிக்கா said...

வலியும் வேதனையும் ஒருதனி சுகம் அதை அனுபவிக்கும் விதத்தை பொருத்தே

அருமை ஆசான் வலியின் கவி

ஆயிஷா said...

இதைத் தான் சுகமான சுமைகள் என்பரோ????????

அன்புடன் ஆயிஷா

சிவா said...

லைட்டா வலிக்குது ..