19

கண்கள் உயிரெழுத்து
பொட்டுநிலா மொட்டுவிட்ட
நெற்றி மெய்யெழுத்து

இதயம் மெல்லெழுத்து
இளங்காலைப் பனிப்பந்தல்
இதழ்கள் இடையெழுத்து

அடியே அழுத்தக்காரி
உந்தன் ஆசைகள்தானடி
வல்லெழுத்து

குரலில் தெறிக்குதடீ
குயிலெழுதும் பொன்னெழுத்து
உன் குற்றாலச் சிரிப்புத்தான்
உயிர் விரிக்கும் பூவெழுத்து

மௌனம் ஆய்த எழுத்து
மனமத்தியில் புதுவாசப்
புயல் அவிழ்க்கும் மல்லிகை மாநாடே
என் அகங்காரி உனைச் சேராமல்
மாறாதடீ என் தலையெழுத்து

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சாந்தி said…
என்ன ஒரு அழகுதமிழ்?...
சீனா said…
அன்பின் புகாரி

இத்தனி எழுத்துகள் இருக்கின்றனவா - ம்ம்ம் - கவிஞர்கள் கண்டு பிடிப்பாளர்கள.

இளங்காலைப் பனிப்பந்தல் இதழ்கள் இடைஎழுத்து
ஆசைகள் வல்லெழுத்து
குற்றாலச் சிரிப்பு பூவெழுத்து
மன்மத்தியில் பூவாசப் புயல்

அகங்காரி - மாறாத தலைஎழுத்து

அருமை அருமை புகாரி - கவிதை அருமை - காதலிகள் படுத்துகிறார்களா - காதலர்கள் பாவம் அல்லவா

நன்று நன்று நண்பா நல்வாழ்த்துகள்
என் சுரேஷ் said…
அன்பு புகாரி,

இந்த கவிதையை வாசிக்க எங்கள் தலையில் எழுதியுள்ளது தமிழ் எழுத்து!!

அன்புடன் என் சுரேஷ்
துரை said…
வார்த்தையில்லை ஆசானே
வாழ்த்தி எழுத .....

என்னவானது
என் கையெழுத்து ??/
வாணி said…
வாவ்வ்!!..
உங்க அடுத்த கவிதை நூலில் இந்த கவிதையை கண்டிப்பா
முதலாவதாய் போடுங்க...
கவிதையில் தலைப்பு, சொல்லாடல் & உவமைகள் அருமை!!!
அன்புடன்...
வாணி
//உன் குற்றாலச் சிரிப்புத்தான்
உயிர் விரிக்கும் பூவெழுத்து//

ச்வீட் :) பிடித்ததில் பிடித்த வரிகள் :)

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்