குர் ஆனில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று பெரும்பாலான முஸ்லிம்களுக்குத் தெரியவே தெரியாது என்பதே உண்மை
*
>>>மத நல்லிணக்கமென்றால்
பிறமதத்தவர் முசுலிமாக
மாறுவது,<<<
உங்களை மதம் மாறச் சொல்லி நான் கேட்டேனா? ஏன் இப்படி வயதுக்கு ஏற்பகூட கதைக்கமாட்டேன் என்கிறீர்கள்?
உங்கள் வயதுக்கு நீங்களாவது மரியாதை தரலாமே?
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழவில்லை. கனடாவில் வாழ்கிறேன்.
பரிசுத்தமான இஸ்லாமியர்களாகவே எல்லோரும் வாழ்கிறோம்.
பரிசுத்தமான இந்துக்களாகவே எல்லோரும் வாழ்கிறோம்
பரிசுத்தமான கிருத்துவர்களாகவே எல்லோரும் வாழ்கிறோம்
எங்களிடம் இணக்கம் இருக்கிறது 99%
எங்களிடம் வன்முறை கிடையாது 99%
இங்கே அறவாழ்வுதான் 99 சதவிகிதம்.
நல்ல ஒழுக்கங்களோடு உயர்வாக வாழ்கிறோம் 99%
நான் லஞ்சம் வாங்கியதில்லை லஞ்சம் கொடுத்ததில்லை இங்கே.
திருடியதில்லை திருட்டுக்கொடுப்பதும் இல்லை 99%
இப்படியாய் மதங்கள் சொல்லும் அறம் அனைத்தையும் கொண்டவர்களாய் நாங்கள் இருக்கிறோம்.
நான் இங்கே மணிக்கணக்காய் கணினிமுன் அமர்ந்து எழுதுவது எனக்காக அல்ல. உங்களுக்காக.
அதை ஒரு நொடியேனும் உணர்ந்துபாருங்கள். இன்னமும் அறிவில்லாமல் இணக்கமில்லாமல் குதர்க்க குணத்தோடு அலையாதீர்கள்
>>>வன்முறையற்ற இணக்கமான சமுதாயம் வளர்க்க என் பங்கினை சிறப்பாகச் செய்வேன்.
அது இந்த உலகத்துக்கு அவசியமானது.
அதையே ஒவ்வொரு கவிஞனும் செய்ய வேண்டும்.
செய்யாவிட்டால் அவன் கவிஞனே அல்ல!<<<
இதில் துளியும் மாறாமல் பாரதி இருந்தான். ஆக உங்களுக்கு பாரதியையும் தெரியாது
உங்கள் பெயரில் ஏன் சாதிப் பெயர் என்று கேட்டேன் உங்கள் பதில் வரவே இல்லை
உங்களுக்கு இணக்கமாய் இருப்பது பிடிக்காதா என்றேன் பதிலில்லை
வெறுமனே வெறுப்பைக் கொட்டுகிறீர்கள்
அன்பும் தெரியவில்லை அதன் அவசியமும் புரியவில்லை. உங்களைக் கொண்டு இந்த சமுதாயம் அடையும் துயர் மிக அதிகமானது. உங்களின் பிறவி சாத்தானின் பிறவியாய் இருக்கிறது
காலையில் அமர்ந்து இப்படிக் கடுமையாய் எழுதுவதை நான் ஆழமாய் வெறுக்கிறேன். ஆனால் நீங்கள் அர்த்தமற்ற வெறுப்பின் பாராங்கல். உங்களை அசைக்க முயல்வது பரிசுத்தமான அறம் என்பதலால் இப்படி எழுதுகிறேன்
*
Mohamed Imran Bin Issadeen உங்களுக்கு பதில் சொல்லும்முன் உங்களிடம் சில கேள்விகள். அந்த கேள்விகளுக்கான பதில் உங்களிடமிருந்து வந்தபின் நான் பதில் சொன்னால்தான் அது உங்களைச் சரியாகச் சென்றடையும் என்பதால் மட்டுமே இந்தக் கேள்விகள்.
1. குர் ஆன் ஹதீது இவற்றுக்கான ஒற்றுமை என்ன வேற்றுமை என்ன?
2. குர் ஆன் தொகுத்த வரலாறு என்ன ஹதீத் தொகுத்த வரலாறு என்ன?
3. ஹதீதுகள் எந்தக் காலகட்டத்தில் தொகுக்கப்பட்டன யாரால் தொகுக்கப்பட்டன?
4. ஹதீதுகள் மொத்தம் எத்தனை, அவற்றுள் அங்கீகரிக்கப்பட்டவை எத்தனை? ஏன்?
5. ஹதீதுகள் சுன்னாக்களிடம் மட்டும்தான் இருக்கிறதா அல்லது சியாக்களிடமும் உள்ளனவா?
இந்தக் கேள்விகள் போதும். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். இது சிறப்பான உரையாடலாக அமைய இறைவன் துணை நிற்பானாக!
*
Padmanabhamn Sivathanupillai என் ஜாதிப்பெயரை இணைத்தவன் நானல்ல.அதைக்கடவுளின் பெயரால் செய்தவன் மனு
இன்றுவரையிலுமென்றில்லை காலாகாலத்திற்கும் பாரதநாட்டில் நிலையாய் நீடித்திருக்கும்படிச் செய்
திருப்பவன் நவீன மனு
என்றறியப்படும் அம்பேத்கர்
>>>>>>>
சிவதானு என்பதோடு நிறுத்திக்கொள்ள உங்களுக்கு ஒரு நிமிடம் போதுமே ;-)
என் தந்தை பெயரை அசன்பாவா ராவுத்தர் என்று எழுதினார்கள்.
நான் அன்புடன் புகாரி என்று எழுதுகிறேன்
புகாரி அசன்பாவா ராவுத்தார் என்றா எழுதுகிறேன்?
>>>Gnana Suriyan தான்னைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என எண்ணுவதில் எனக்கு உடன்பாடு இல்லை
மேலும் அவரது சாதி அடையாளம் என்ன குற்றம் செய்தது
அவரது பெயர் சாதியைக் குறித்து நிற்பது போலவே தான் அப்துல் கலாம் என்பதில் மதம் குறிக்கப்படுகிறது
சாதி மதம் பேதங்களின் ஊற்று எனவே கலாம் பெயரை மாற்ற வேண்டும் என எண்ண வேண்டுமா என்ன
எம்மைப் பொருத்தவரையில் அவரது பெயரில் உள்ள சாதி என்னை உறுத்தவில்லை அவரை அப்படியாகவே நான் ஏற்கிறேன்<<<<
சாதியை பெயரில் ஏந்திப் பிடிப்பதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது.
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று சொல்லும் அரசியல்.
மதத்தில் அப்படியல்ல. இது உயர்ந்த மதம் இது தாழ்ந்த மதம் என்று எதையும் சொல்லிவிடமுடியாது.
சிவப்பிள்ளை என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
குருசாமி ஐயர் என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
சீனிவாசன் பறையன் என்று எழுதிப் பார்த்ததில்லை
முருகேசன் சக்கிலியன் என்று எழுதிப் பார்த்ததில்லை
கணபதி தோட்டி என்று எழுதிப் பார்த்ததில்லை.
ஆகவேதான் பாரதியைப் போல பெரியாரைப் போல பாகுபாடுகளை உரத்துச் சொல்லும் சாதியின் பெயரை ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டேன்.
(நான் பிறமதம் தாக்கிப் பேசுவதில்லை. இங்கேயும் அப்படித்தான். என்னிடம் வந்த கேள்விக்கான பதில் மட்டுமே இது. நான் இணக்கம் பாராட்டுபவன். நான் எல்லா மதங்களையும் அள்ளி அனைப்பவன். எல்லா உயிர்களையும் என்னுயிர் போல எண்ணுபவன். வன்முறை விரும்பாதவன்.)
*
சாதியை பெயரில் ஏந்திப் பிடிப்பதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது.
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று சொல்லும் அரசியல்.
மதத்தில் அப்படியல்ல. இது உயர்ந்த மதம் இது தாழ்ந்த மதம் என்று எதையும் சொல்லிவிடமுடியாது.
சிவப்பிள்ளை என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
குருசாமி ஐயர் என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன்
சீனிவாசன் பறையன் என்று எழுதிப் பார்த்ததில்லை
முருகேசன் சக்கிலியன் என்று எழுதிப் பார்த்ததில்லை
கணபதி தோட்டி என்று எழுதிப் பார்த்ததில்லை.
ஆகவேதான் பாரதியைப் போல பெரியாரைப் போல பாகுபாடுகளை உரத்துச் சொல்லும் சாதியின் பெயரை ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டேன்.
(நான் பிறமதம் தாக்கிப் பேசுவதில்லை. இங்கேயும் அப்படித்தான். என்னிடம் வந்த கேள்விக்கான பதில் மட்டுமே இது. நான் இணக்கம் பாராட்டுபவன். நான் எல்லா மதங்களையும் அள்ளி அனைப்பவன். எல்லா உயிர்களையும் என்னுயிர் போல எண்ணுபவன். வன்முறை விரும்பாதவன்.)
*
திருக்குறளுக்கு ஏராளமான உரைகள் உண்டு. அதில் கலைஞர் கருணாநிதியின் உரை அவர் சார்ந்த பெரியார் இயக்கத்தை ஒட்டியே விளக்கம் தரப்பட்டு வரும்.
இன்னொரு விளக்கம் அதீத பக்தியுடையவரின் விளக்கம், அது மதம் சார்ந்து சொல்லிப் போகும்.
வள்ளுவரே சொல்வதுபோல, மெய்ப்பொருள் காண்பது மட்டுமே அறிவு