குயவன் கைபட்ட மண்ணாய் - உன்
குரலில் வளைகிறேன் பெண்ணே
வயலின் நெல்மணிப் பொன்னாய் - உன்
விழியில் வளர்கிறேன் கண்ணே
புயலை எதிர்கொள்ள வேண்டும் - உன்
பொங்கு புன்னகை போதும்
துயரில் வெடித்ததென் காலம் - உன்
துணையில் பூத்ததே யாவும்
சின்னச் சின்னதாய்ப் பேசு - என்
சிந்தை நனைவதைப் பாரு
வண்ண வண்ணமாய்ப் பாடு - மனம்
வழிந்து மொழிவதைக் கேளு
முன்னம் இருக்குமோ பந்தம் - உன்
முகமும் சொல்லுதே சொந்தம்
எண்ணம் ஒருபட்ட நெஞ்சம் - அது
இறைவன் ஏந்திடும் மஞ்சம்
1 comment:
அடுக்கடுக்காய் அற்புதக்கவிதைகள்!
அன்றும் இன்றும் என்றும்!
கொட்டியது!கொட்டுகிறது!கொட்டும்!
Post a Comment