15

மௌனத்தின் இதழ்களில்
ஓயாத பேச்சுகளாய்
நீயும் நானும்

சந்திக்கும்போது
நம் இதழ்கள் பொழியும் பேச்சு மழையோ
மையப்புள்ளியை நனைத்துவிடாமல்
ஓரடியேனும் தள்ளிப் பொழிவதிலேயே
கவனமாய் இருக்கின்றது

தூரத்தில்தான் மழையென்றாலும்
சாரலும் தவறிவிழும் சிறு தூறலும்
இதயம் நனைக்காமலா போகும்

நனைந்தும்
நனையாததுபோன்ற கள்ளத்தனத்தில்
ஆடுமிந்த கண்ணாமூச்சி
உயிர்ப்புடையதாய்ச் சிலிர்த்துச் செல்கிறது
நகரும் நாட்களைத்
தேன்வழியும் புதுப்பூந் தேரோட்டமாக்கி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

புன்னகையரசன் said...

தூரத்தில்தான் மழையென்றாலும்
சாரலும் தவறிவிழும் சிறு தூறலும்
இதயம் நனைக்காமலா போகும்



அது நனைத்து போனதால தான் காதல் தீ பற்றி எரியுது ஆசான்....

அருமை அருமை.. பின்னூட்டம் எழுத இனி வார்த்தைகள் தேட வேண்டும்

--
பிரார்தனைகளுடன்...
M.I.B

பூங்குழலி said...

மௌனத்தின் இதழ்களில்
ஓயாத பேச்சுகளாய்
நீயும் நானும்
சந்திக்கும்போது
நம் இதழ்கள் பொழியும் பேச்சு மழையோ
மையப்புள்ளியை நனைத்துவிடாமல்
ஓரடியேனும் தள்ளிப் பொழிவதிலேயே
கவனமாய் இருக்கின்றது

அழகாக இருக்கிறது

ஆயிஷா said...

//மௌனத்தின் இதழ்களில்
ஓயாத பேச்சுகளாய்
நீயும் நானும்///


மெளனத்தின் பாசை எதுவோ????

///சந்திக்கும்போது
நம் இதழ்கள் பொழியும் பேச்சு மழையோ
மையப்புள்ளியை நனைத்துவிடாமல்
ஓரடியேனும் தள்ளிப் பொழிவதிலேயே
கவனமாய் இருக்கின்றது///

கடமையே கண்.



///தூரத்தில்தான் மழையென்றாலும்
சாரலும் தவறிவிழும் சிறு தூறலும்
இதயம் நனைக்காமலா போகும்///


நனைந்ததனால் தானே படு பாடுபடுகின்றது மாய மனம்.


///நனைந்தும்
நனையாததுபோன்ற கள்ளத்தனத்தில்
ஆடுமிந்த கண்ணாமூச்சி
உயிர்ப்புடையதாய் சிலிர்த்துச் செல்கிறது
நகரும் நாட்களைத்
தேன்வழியும் புதுப்பூந் தேரோட்டமாக்கி///


சுவாரஸ்யம்.

அன்புடன் ஆயிஷா