Between 13th and 19 th century there are huge changes in tamil script, which we have accepted as evolution. Between now and 25th century, if there's further evolution to write க ங ச ஞ as "k" "n" "cha" or as क ण च or anything else, who is to say it won't happen.. -Sathis Toronto
சதீஸ், இந்து இந்தி இந்தியா என்ற திசையில் செல்லும் உங்கள் பேராசை அப்பட்டமாய்த் தெரிகிறது.
தமிழன் தமிழ் தமிழ்நாடு என்பதை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாற்ற முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விரைவில் புரிந்துகொள்வீர்கள்.
இந்த க ங ச ஞ வும் சரி क ण च வும் சரி எல்லாம் திசை மாறி abcd என்ற 26 எழுத்துக்குள் முடங்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம்.
அதற்குக் காரணம் பிஜேபி போன்றவர்களின் மொழி வெறியாட்டங்கள்தாம்.
இரண்டுபேர் அடித்துக்கொள்ளும்போது மூன்றாவது அறிவாளிதான் பயன்பெறுவான். இதை தமிழ்க் குழந்தைகளுக்கான கதை ஒன்றில் அழகாகச் சொல்லி இருப்பார்கள். குரங்கு பூனை அப்பம் கதை இங்கு எவருக்காவது தெரிந்திருக்கலாம்.
இந்தி ஒரு மூலையில் வாழட்டும் தமிழ் ஓரு மூலையில் வாழட்டும் தெலுங்கு ஒரு மூலையில் வாழட்டும் கன்னடம் ஒரு மூலையில் வாழட்டும் என்று மத்திய அரசு என்று உறுதியாய் முடிவெடுக்கிறதோ அன்றுதான் மாநில மொழிகள் எல்லாம் சிறப்படையும் பாதுகாக்கப்படும் மக்களாலும் உணர்ந்து போற்றி பயன்பாட்டில் நிலைக்கும்.
இந்திக்கும் தமிழுக்கும் இந்திக்கும் மலையாளத்திற்கும் இந்திக்கும் தெலுங்குக்கும் இந்திக்கும் பஞ்சாபிக்கும் சண்டை என்றால் அன்று வெள்ளைக்காரன் வந்ததுபோல இன்று ஆங்கிலம் உள்ளே வருகிறது.
இந்தியர்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் வேறென்ன நடக்கும்?
அன்புடன் புகாரி
No comments:
Post a Comment