கோரஸ்: அல்லாஹு அக்பர்....
பாலைவனம் பால்பொழிய ஏற்றம் வைத்தானே
பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தானே
- என்றும்
ஏழைகளைச் செல்வருடன் சேர்த்து வைத்தானே - தொழும்
ஏகனவன் பள்ளியிலே பேதம் கொன்றானே
மாநபிகள் நாயகத்தை மண்ணில் ஈந்தானே
ஹீராவில் சூராக்கள் ஓதச் சொன்னானே -
அவரோ
ஓரெழுத்தும் கற்றிடாத உம்மத்து நபியே - குர்-ஆன்
வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஊக்கம் தந்தானே
தனக்கான தேவை இல்லாதவன்
நம் தேவை தீர்க்கும் வல்லோனவன்
வழி காட்டும் வரமாக அவன் தொழுகை தந்தான்
நம் நன்றியே அதுதான்
கோரஸ்: அல்லாஹு அக்பர்....
பெண்ணென்றால் போகப்பொருள் என்ற பூமியில்
பெண்ணுரிமை கொண்டுவாழ சட்டம் தந்தானே
- அரபியர்
அடிமைகளைக் கொடுமைசெய்த கோர நாட்களில் - எங்கும்
அடிமைகளே இல்லையென்று விலங்குடைத்தானே
மக்கத்தின் வீதிகளில் கொடுமை எழுந்ததால்
குறைஷிகளின் அகங்காரம் விஷத்தை உமிழ்ந்ததால்
- மதினா
நகர்நோக்கி பயணமாக கட்டளை இட்டானே - எளிய
முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கருணை ஈந்தானே
நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்
நம் நீதி நாளின் அதிபதியே அவன்
ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்வபவன் இல்லை
நம் பிறப்பும் அவன் கருணை
கோரஸ்: அல்லாஹு அக்பர்....
No comments:
Post a Comment