01 இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அல்லது இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

நான் ஒரு கணிஞன். கணினியில் நிரலிகள் எழுதும் துறையில் உயர் ஆலோசகனாக கனடாவில் வேலை செய்கிறேன். Senior Consultant DW/BI/SQL. எனக்கு இன்றைய நாட்களில் நிரந்தரம் என்று சொல்லப்படும் வேலையில் விருப்பம் இல்லை. அதை மறுதளித்து ஒப்பந்தப் பணிகளையே ஏற்றுக்கொள்வேன். அதில் பலன்கள் அதிகம் என்பதலால். ஆனால் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துவிட்டு ஓய்வுக்காக தவமிருக்கவும் நேரமில்லாமல் வேலையில் மூழ்கிக் கிடப்பேன்.


Equal Opportunity, Hire and Fire என்றெல்லாம் சொல்லப்படும் சம வேலை வாய்ப்புகள், எடு-விடு கொள்கைகளைக் கொண்ட வட அமெரிக்க பணிக் கொள்கையில் நிரந்தரப் பணி என்பது நிரந்தரம் அல்ல. நம்மை எப்போது வெளியேற்றுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஒப்பந்தப் பணி என்றால் நமக்கு ஒரு வசதி உண்டு. எப்போது ஒப்பந்தம் முடியும் என்று முன்பே தெரியும். ஆனால் ஒப்பந்தப் பணி செய்பவர்களுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். கணினித் துறையில் இருந்தால் வாய்ப்புகள் அதிகம்.

என் தற்போதைய ஒப்பந்தப்பணி டொராண்டோவின் சிறப்பு மருத்துவமனை ஒன்றில். மார்ச் 2014ல் தொடங்கினேன், ஓய்வே இல்லாமல் தவித்ததால் ஒரு வாரம் விடுமுறை விண்ணப்பித்து இருமுறை அது மறுக்கப்பட்டு இறுதியாக ஜூலை 25 லிருந்து ஆகஸ்ட் 4 வரை எனக்கு விடு தலை/முறை கிடைத்தது.

அவசர அவசரமாக ஓர் உல்லாச சொகுசு கப்பல் பயணத்திற்கு ஏற்பாடு செய்தேன். செலவு அதிகம்தான் என்றாலும் நான் இதுநாள் வரை சொகுசு கப்பல் பயணம் சென்றதே இல்லை. சின்னச் சின்ன (Ferry) கப்பல் பயணங்கள்தான் செய்திருக்கிறேன்.

பயணச்சேவையாளரின் உதவியுடன் விரைந்து ஒரு சொகுசு கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்துவிட்டேன்.

அதெல்லாம் சரி, அதற்கும் இந்தக் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?

அதென்ன இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பாருங்கள். ஏதாவது குறிப்பு கிடைக்கிறதா என்று சொல்லுங்கள்.

நாம் இந்த இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியாவை என்னவென்று பார்த்துவிடலாம்

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

mohamedali jinnah said...

ரோம் பார்த்துள்ளேன் / உங்கள் இட்டாலியில் ஸ்வீட்ட வெச்ச பிரயாணம் பார்க்க விருப்பம்
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது!

சென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் ரோம் நகர விமான தளத்தில் தரை இறங்கியது, அதில் எனக்கு மட்டும் அங்கு ஒரு நாள் தங்குவதற்கும் ரோம் நகரத்திற்குள் செல்லவும் தற்கால அனுமதித் தாள் (Temporary visa)கொடுத்ததோடு, ரோம் நகர விமான தளத்தில் வேலை செய்யும் ஒரு அதிகாரி நான் தங்குவதற்கு வசதி செய்துக் கொடுக்க தனது காரில் அழைத்துக் கொண்டு போனார். நான் அவருடன் பேசிக் கொண்டிருப்பதனை அவர் விரும்பியதால் 'விடுதிக்குப் பிறகு போகலாம் அதற்குள் ரோம் நகரத்தினை உங்களுக்கு காட்ட விரும்புகின்றேன்' எனக் கூறி தொடர்ந்தார் .அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது . நான் இந்தியா (பம்பாய் ,சென்னை) ,மலேசியா,சிலோன் மற்றும் பல நாடுகளில் எனது பணியை செய்துள்ளேன் ஆனால் சென்னை,மலேசியா மற்றும் சிலோன் நாடுகளில் பணி செய்த காலங்கள் எனக்கு மிகவும் மன நிறைவைத் தந்தது அதற்கு முக்கிய காரணம் அங்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது அதிலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை பேணுவதில் மிகவும் அக்கறையுடன் இருப்பதுடன் குடும்ப உறவையும் சிறப்பாக அமைத்துக் கொள்கின்றார்கள்' என பெருமிதத்துடன் சொல்லி விட்டு மேலும் தொடர்ந்தார். 'ஆனால் அந்த குடும்ப வாழ்க்கையை அதிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை வளர்ந்த மேலை நாடுகளில் பார்க்க முடியாது.அந்த நாடுகளில் ஒரு சில ஆண்டுகள் நாங்கள் வாழ்ந்தபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஒரு பிடித்தம் உண்டாகியது' என்று மகிழ்வோடு சொன்னார். 'இதனை எனது மனைவி பலரிடம் சொல்லி பெருமையடைகின்றாள். அத்துடன் தனது வாரிசுகளுக்கு அந்த நாட்டிலிருந்துதான் திருமண தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புகின்றாள்' என அவர் சொன்னபோது நான் ஒரு இஸ்லாமியனாகவும் மற்றும் இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன். இந்த குடும்ப உறவின் நேசம் தொடர நாம் முயல்வோம்.