அழிக்கவொண்ணாத் தமிழின்பம்

#தமிழ்

இதோ இன்னும் ஒரு சொல்லடுக்கு.

இப்படியான சொல்லடுக்குகளை மேடைகளில் உதிர்க்கும்போது, பொன்னுதிர்வதைப் போல் புன்னகைகள் உதிர்வதைக் காண்கிறேன்.

இழக்க வேண்டுமா என்ன அழிக்கவொண்ணா இத்தமிழ் இன்பத்தை?


கண்ணேறிக் கருத்தேறிக்
        கற்பனைத்தேர் கவிகளேறி
எண்ணேறி எழுத்தேறி
        ஏட்டுத்தேன் கூடுகளேறி
சொல்லேறிச் சுவையேறி
        சொல்லழகுச் சொர்க்கமேறி
எந்நாளும் நீந்துகின்றேன்
         காதல் தமிழ்க் கடலேறி

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

த்ங்கள் எழுத்துக் கடலேறி நீந்தினேன்
இன்ப வெள்ளத்தில் மூழ்கினேன்
நன்றி நண்பரே