புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா

கணவனை அவன் தேவைகளை
மனைவியால் புரிந்துகொள்ள முடியுமா?

மனைவியை அவள் தேவைகளை
கணவனால் புரிந்துகொள்ள முடியுமா?

கொஞ்சம் முடியலாம்
முழுமையாய் முடியாது.
அதுதான் உண்மை

ஆக...
கணவனும் மனைவியும்
புரிந்துகொள்ள முடியாது
என்பதைப் புரிந்துகொண்டு
அபரிமிதான அன்பு செலுத்தினால்
அதுதான் உண்மையான
புரிந்துணர்வு

என் மனைவிக்குப் பிடித்தனை
அவள் செய்யட்டும்
அதில் எனக்கு விரோதம் இல்லை.
என் கணவனுக்குப் பிடித்ததை அ
வன் செய்யட்டும்
அதில் எனக்கு உடன்பாடுதான்.
ஏனெனில்,
நாங்கள் இருவரும்
உயிருக்குயிராய் நேசிக்கிறோம்.

அதாவது
விட்டுக்கொடுப்பது
தொடர்ந்து விட்டுக்கொடுப்பது

சகிப்பது
தொடர்ந்து சகிப்பது

மன்னிப்பது
தொடர்ந்து மன்னிப்பது

பெற்ற பிள்ளைக்கு
விட்டுக்கொடுக்கிறோம்
சேட்டைகளைச் சகிக்கிறோம்
தொடர்ந்து மன்னிக்கிறோம்

வேறு என்ன புதிய மந்திரம் தேவையிருக்கிறது
இன்பமான மணவாழ்விற்கு?

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்பார்கள்
அன்பு செலுத்துவோம், விட்டுக் கொடுப்போம் மன்னிப்போம்
அருமை நண்பரே

சசிகலா said...

விட்டுக்கொடுப்பதிலும் சகிப்புத் தன்மையிலுமே இன்பமான வாழ்வு நிலைக்கும் என்பதை அருமையான சொன்னீர்கள்.