33

கடுந்தாகச் செவிவிழுந்து
நடுநாசி முற்றமேறி

கனவுக் கனல்வீசித்
தீய்ந்த என் விழிகளுக்குள்
தமிழமுதாய்ச் சிதறி

நாவடித் தேனூற்றுகளை
அதிரடியாய் உடைத்து

பட்டமரத் தேகமெங்கும்
பனிப்புல்லாய்ச் சிலிர்த்து

துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய் இறங்கி

வளர்முத்தத் தவிப்பு கொட்டும்
உயிர் வெள்ள நயாகரா

உன் குரல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

புன்னகையரசன் said...

அட டட டட டாடாடாடா


துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய் இறங்கி

வளர்முத்தத் தவிப்பு கொட்டும்
உயிர் வெள்ள நயாகரா


அருமை ஆசான்...

சாந்தி said...

அழகு அருமை செழுமையாய்..

பூங்குழலி said...

வளர்முத்தத் தவிப்பு கொட்டும்
உயிர் வெள்ள நயாகரா
உன் குரல்

அருமை

ஆயிஷா said...

இந்தக் கவிஞர்கள் எப்படியெல்லாம் பொய் சொல்கின்றார்களப்பா.
கவிதை நல்லாருக்கு ஆசான். 05 முறை படித்தேன் உள்ளிழுத்துக் கொள்ள.
அன்புடன் ஆயிஷா