எண்ணங்கள் மாறலாம், இறைவன் மாறமாட்டான்

கடவுள் இருக்கிறாரா? கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்.
விஞ்ஞான பூர்வமாக மறுக்கிறார்கள். எல்லாம் சரி. ஆனால்,
இந்தப் பிரபஞ்சத்தின் மூலம் என்று எதைச் சொல்கிறார்கள்?

இறைவன் என்ற பெயருக்குப்பதில் இயற்கை என்பார்கள்.
எப்படித் தோன்றியது என்றால் தானே தோன்றியது என்பார்கள்.
எப்போது முடியும் என்றால் மாற்றமே கொள்ளும் முடியாது என்பார்கள்.

ஆக, வரையறைகள்தானே மாற்றம். சக்தி ஒன்றுதானே?
அதை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன?
கடவுள் என்று சொல்லவேண்டாம். மூலம் என்றே சொல்லுங்கள்.
யார் யாருக்கு எது சரியோ அதை அவர்கள் அப்படியே எடுத்துக்கொள்வார்கள்.

உண்மையான நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று சொல்வதில்லை.
ஆத்திகர்கள் சொல்லும் வரையறைகளின் படி கடவுள் இல்லை என்பார்கள்.

கடவுள் இருக்கிறார் என்று ர் போடுவது பழக்கம் காரணமான.
கடவுளை ஆண் என்றோ பெண் என்றோ சொல்வது முதலில் சரியாகுமா?
கடவுளை அது என்றும் சொல்லமுடியுமா?

கேள்விகள் சாகும்போதும் தீராது. கேள்விகள் இல்லாமல்
மூளையின் பங்கு ஒன்றுமே இல்லை.

நாம் தெளிவாகத் தெரிந்த விசயங்களில்தான் விவாதம் செய்யமுடியும்.
தெளிவில்லாத இம்மாதிரி விசயங்களில் சிந்தனை ஆடலே செய்யமுடியும்.
பதில்களெல்லாம் யூகங்கள்தான் பெரும்பாலும்.

பலரும் பழைய யூங்களே போதும் என்று இருந்துவிடுகிறார்கள்.
புதிதாக எவரேனும் பேசினால், நாத்திகவாதி என்று சொல்லிவிடுகிறார்கள்.
நீங்கள் கடவுளைப் பற்றி எண்ணியிருப்பதல்ல கடவுள் என்று தொடங்கினால்
அரைகுறை ஆத்திகவாதி என்றுவிடுகிறார்கள்.

பூமி சுற்றுகிறது. ஏன் சுற்றவேண்டும் அப்படியே இருக்கலாமே? இது கேள்வி....
சரி பூமிமட்டுமா சுற்றுகிறது என்று பார்த்தால், பிரபஞ்சத்தில் எல்லாமே
சுற்றுகிறது. திட்டம்போட்டுச் சுற்றுகின்றனவா திட்டம் போடாமலெயே
சுற்றுகின்றனவா என்பது பிறகு. ஏதோ ஓர் ஒழுங்கு அங்கே காணப்படுவது
உண்மைதானே?

மனித உடலின் கட்டமைப்பு எத்தனை அதிசயம். இரத்த ஓட்டத்துக்கு
இதயம் இயங்குவதும், மூச்சுக்கு நுரையீரல்கள் இயங்குவதும்,
கழிவுகளுக்கு சிறுநீரகங்கள் இயங்குவதும், உணவுக்கு இரைப்பையும்
குடல்களும் இயங்குவதும், அறிவுக்கு மூளை இயங்குவதும் எத்தனை
வினோதம். யார் இந்த நுணுக்கமான அமைப்புகளைக் கட்டிமுடித்தவர்?
யாருக்குத் தெரியும்?

ஆனால் ஒன்றுமட்டும் தெரியும், எல்லாம் ஓர் ஒழுங்கில் இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் மாற்றி மாற்றி ரேகைகள்... ஆச்சரியம்.
இதன் ஒழுங்கு பிரபஞ்சத்தின் சக்தி.

பிரபஞ்சம் ஒரு சக்தி. அந்த சக்திக்கு என்ன பெயரிட்டால் என்ன?
அது சக்திதானே?

நம் கேள்விகளுக்கும் எல்லைகள் இல்லை.
நம் அறிதல்களுக்கும் எல்லைகள் இல்லை.

நாளை நாம் புதிதாக அறிந்துகொள்ள நிச்சயம் எப்போதும் ஒன்று
உண்டு என்பதே நிஜம். அறிவியலின் வளர்ச்சியே அதில்தான் இருக்கிறது.
இனி கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று உறங்க அறிவியலுக்கு
வழியே இல்லை.

ஒரு முழுமையைத் தேடிச் செல்லும் அறிவு தன்னைச் செதுக்கிக்
கொண்டேதானே இருக்கும். அதில் தவறொன்றும் இல்லை.

அறிந்தவரை அறிவியல். தான் சொன்னதே சத்திய வாக்கு என்று
அறிவியல் சொல்லிக்கொண்டும் உலவவில்லை.

மதங்கள்தான் இதுதான் பூரணம் இதுதான் முழுமை இதுதான் எல்லாம்
மற்றதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறுகின்றன.
அறிவியல் ஒருபோதும் அப்படிக் கூறுவதில்லை.

மதங்களின் பெயரால் மனிதர்கள் வகுத்த வரையறைக்குள்
கடவுள் வந்து சிக்குவாரா?

பிரபஞ்சம் மொத்தமும் கடவுள்தான் என்று ஓர் அனுமானமுண்டு எனக்கு.
நீங்கள் நான் புழு பூச்சி காகிதம் சருகு கல் மண் எல்லாம் எல்லாம்.

யாவும் ஒன்றிலிருந்து இன்னொன்றாய் மாறும் ஒரே பொருள்!
அதன் பெயரே கடவுள். அதன் பெயரே பிரபஞ்சம்.

என் அனுமானம் தவறாய் இருக்கலாம்.
ஆனால் தவறென்று உறுதியாய்ச் சொல்ல எவரால் இயலும்?

நம்மை மீறி நடக்கும் விசயங்களுக்கு விளக்கம் தெரியாதபோது
நம்மைச் சூழ்வது பயம்....

பயத்தை மூலதனமாய் வைத்து வளர்ந்தவை எத்தனை எத்தனை?
பயம்தானே மூடநம்பிக்கைகளின் வேர்

மனிதனைப் படைத்தது இறைவன் என்றால்
இறைவனைப் படைத்தது யார் என்ற கேள்வி சரியானதுதான்!

அதே சமயம்,
மனிதனைப் படைத்தது இயற்கை என்றால்
இயற்கையைப் படைத்தது யார் என்ற கேள்வியும் வரத்தானே செய்யும்?

ஒரு கேள்வியைக் கேட்கும்போதே
அதனுள் இன்னொரு கேள்வியும் எழுகிறதல்லவா?
இது முடிவடையாமல் சென்றுகொண்டே இருக்கிறதல்லவா?

எனவேதான் எதுவும் எதனிடமிருந்தும் வரவில்லை என்று கொள்ளவேண்டும்.
எல்லாம் அப்படியே எல்லையற்று இருக்கின்றன என்று கொள்ளவேண்டும்.
ஏனெனில், அது மட்டுமே இப்போதைக்கு நம்மால் இயலும் :)

இருப்பவை எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன
என்பதை நாம் அறிவோம்.

தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டதுதான் பிரபஞ்சம்
என்று கொண்டால் ஓரளவு தெளிவு பிறக்கும்.

அது எப்படி தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டது என்று கேட்டால்
நம்மால் என்ன சொல்ல முடியும்?

பிரபஞ்சம் என்று அந்தச் சக்தியைச் சொன்னாலும் சரி
இறைவன் என்று சொல்லிக்கொண்டாலும் சரி.
எல்லாம் ஒன்றுதான்.

எல்லையற்ற பிரபஞ்சத்தையும்
இறைவனையும் பிரிப்பதை ஏற்பதற்கில்லை.

கடவுள் ஒருவன்தான் என்ற நம்பிக்கை வேண்டும்.
மதங்கள்தாம் அந்த எண்ணத்திற்கு ஊறுவிளைக்கிறதோ என்பதைப்
பல நடப்புகளில் அறிய நேர்கிறது.
எனவே அதன்மீது ஒரு வெறுப்பு வருவது இயற்கை.

இறைவன் பொதுவானவன், மதம் அப்படியா?
மதங்கள்தாம் இறைவனை வேறு வேறானவன் என்று
எல்லோருக்கும் சொல்லிக் கெடுக்கிறது!

எண்ணங்கள் மாறலாம், இறைவன் மாறமாட்டான்
என்ற என் எண்ணம் தவறாகாது என்று நம்புகின்றேன்.

மதம்கடந்து மனிதம் பார்த்து, தெய்வம் ஒன்றே ஒன்றுதான்
என்று நம்பினால், உலகில் 99% பிரச்சினைகள் தீரும்!

ஜாதி மதமெல்லாம் சிறிய விசயங்கள். கடவுள் என்பது
பெரிய விசயம். அது அனைவரையும் அனைத்தையும்
உள்ளடக்கியதாய் இருந்தால் மட்டும்!

கல்லும் கடவுளும்

கேள்வி:

பிரபஞ்சம்தான் கடவுள். பிரபஞ்சத்திலிருந்து கல்லைப் பிரிக்காதீர்கள். கண்முன் பிரபஞ்சம் விரிந்து கிடக்கும்போது பார்வையைச் சுருக்காதீர்கள் என்று கல்லைக் கடவுளாக நினைக்கும் நண்பரிடன் கூறினேன். அதற்கு அவர் ”இல்லையே....பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் டெலெஸ்கோப்பின் மூலம் காண்பதுபோல் நான் கல்லின் மூலம் காண்கிறேன்.எங்கும் விழும் சூரிய ஒளியை ஒரே இடத்தில் கான்சன்ட்ரேட் செய்ய குவி ஆடி தேவைப்படுகிறதல்லவா?அந்த மாதிரிதான்.” என்றார்

பதில்:

இதிலுள்ள சிக்கல்களைக் கூறுகிறேன் கேளுங்கள்:

1. விஞ்ஞானிகள் டெலஸ்கோப்பின் மூலம் பார்ப்பது பிரபஞ்சத்தை அல்ல. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியைத்தான். பிரபஞ்சத்தை முழுதாக எவராலும் பார்க்க இயலாது.

2. பிரபஞ்சத்தை நாம் பிரபஞ்சத்துக்குள் இருந்துகொண்டுதான் பார்க்க முடியும். ஏனெனில் பிரபஞ்சத்துக்கு வெளி என்று அதாவது ஓடு என்று அதாவது எல்லை என்று எதுவும் கிடையாது. எனவே நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு விச்யத்தைக் கற்பனை செய்ய முயன்று முயன்று அதிசகிக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டவன் அத்தனை பெரியவனா என்று ஆச்சரியம் நிரந்தரமாய் நிற்கும்.

3. கல்லைக் காண்கிறேன் என்று நீங்கள் கல்லைக்காணவில்லை. கல் வீதிகளில் நிரம்பிக் கிடக்கிறது. நீங்கள் அவற்றைக் காண்பதில்லை. அவற்றை வணங்குவதில்லை.

4. கல் என்ற பெயரில் நீங்கள் காண்பது ஒரு உருவத்தை. அதுவும் மனித உருவத்தை. மனதில் மனிதனே தெய்வமென்று பதிவாகும். மனிதர்களுள் சக்திவாய்ந்த எவராலும் வெல்லமுடியாத ஒரு ஹீரோவைக் கடவுள் என்று தவறாக எடுத்துக்கொள்வீர்கள்.

5. இறைவனை இப்படியாக சுருக்கி அவமானப்படுத்தக் கூடாது. அவன் மிகப்பெரியவன். நிகரற்றவன். எல்லைகள் இல்லாதவன். முதலும் முடிவும் இல்லாதவன்.

6. வாழ்ந்து செத்துப்போன மனிதர்களைக் கடவுள்கள் என்று சொல்வது மிக மிகப் பழைமையானது. செத்தொரெல்லாம் தெய்வங்கள் என்று நம்பித் திரிந்தது அறிவு வளர்ச்சியடையாத கற்காலத்துக்கும் முற்காலத்தில்.

6. இறைவனை நாம் இறைவனாகவே பார்ப்போம். அப்படிப் பார்த்தால்தான். நாம் கோவில் கட்டமாட்டோம். அங்கே சென்றுதான் கும்பிட வேண்டும் என்று எண்ண மாட்டோம். கோவில் வாசலில் உண்டியல் வைக்க மாட்டோம். பத்து காசு போட்டு பத்துகோடி லாட்டரி விழவேண்டும் என்று மூடநம்பிக்கை கொள்ளமாட்டோம்.

7. கல்லில் பலப்பல மனித உருவங்களை ஆணாகவும் பெண்ணாகவும் செய்து அங்கங்கே வைத்து வழிபட்டால், கடவுள் ஒருவன் என்ற உண்மை உள்ளங்களைச் சென்றடையாது. உயிரில் கலக்காது. கடவுள் தவறாகவே அறியப்படுவார். கடவுள் இல்லை என்று நிரூபிக்க இது ஒன்றே போதுமானதாகிவிடும்.

8. கடவுள் மறுபபாளர்கள் உண்மையில் கடவுளை மறுக்கவில்லை. கடவுள் என்ற பெயரில் உள்ள மூட நம்பிக்கைகளைத்தான் மறுக்கிறார்கள்.

9. எல்லா மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், புல் பூண்டு தாவரங்களுக்கும், கல் மண் என்ற அனைத்துக்கும் ஒன்றே ஒன்று இருந்தால்தான் அது கடவுள். இல்லாவிட்டால் அது வகை வகையான கடைச்சரக்குகளாகிவிடும். ஆளாலுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எது உசத்தி என்று சண்டை பிடிப்பார்கள்.

10. நாமிருக்கும் பிரபஞ்சம் எதனுள் இருக்கிறதோ என்று யாருக்குத் தெரியும். எதனுள் என்ற அது இன்னும் வேறு எதனுள் இருக்கிறதோ யாருக்குத் தெரியும். இப்படியாய் அது எத்தனை லட்சம் அடுக்குகளோ யாருக்குத் தெரியும். இப்படியாய் கற்பனை உயர உயர கடவுளின் தோற்றம் எத்தனை பிரமிப்பைத் தரும். அதன் முன் நாம் எத்தனை சிறு தூசு என்று தெரியும். அதைவிட உயர்வாய்க் கடவுளைப்பற்றி ***அறிவுப்பூர்வமாய்*** எண்ண முடியுமா?

உயிரைச் சுமக்கும் ஒரே உயிர்

பெண்ணே உலகின் ஆதாரம்
அவளற்ற ஆண் வெறும்
தளமற்ற கட்டிடம்

உள்ளத் தவிப்புக்கு மருந்தும்
உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்
பெண்ணே இன்றி
பெறுவதுதான் எப்படி

கலையா கணினியா
இலக்கியமா இராணுவமா
நாட்டுத் தலைமையா
விண்வெளிப் புரட்சியா
எங்கே இல்லை அவள்

சொல்லுங்களேன்
உயிரைச் சுமக்கும்
ஒரே உயிர்
உலகில் பெண்தானே

துவண்ட மனதுக்கு
மடிதந்து தலைகோத
ஒரு பெண்ணற்றுப் போயின்
மனித இனம் மொத்தமும்
சுடுகாட்டுப் பிணங்கள்தானே

எல்லாச் சுகங்களும்
எங்கும் கிடந்தாலும்
ஒரு பெண்ணில்லா பூமியில்
சிறு பொழுதேனும் நகருமா

அந்தப் பூமியும்
ஓர் அழகுப் பெண்ணல்லவா

நிலவா மலரா
கடலா காற்றா
காண்பதெல்லாம் 
பெண்ணல்லவா

சுகங்களின் இருப்பிடம் அவள்
சொர்க்கத்தின் பொருளும்
அவளேதான்

ஓராயிரம் ஓட்டைகளும்
உருப்படாத துடுப்புமாய்
நடுக்கடலில் விடப்பட்ட
ஆசை ஓடங்கள்தானே
மனித மனங்கள்

ஒரு பெண்ணின் துணையின்றி
வாழ்வெனும் கரைசேர
வாய்க்குமோ கனவிலும்

அவளின் அன்பின்றி
ஆயுள் ரேகைக்கு
ஆயுள்தான் ஏது

அழப்பிறவா
மனிதருண்டோ

ஓரெட்டில் அம்மா
ஈரெட்டில் தங்கை
மூவெட்டில் காதலி
நாலெட்டில் தாரம்
ஐயெட்டில் மகளென்று
சாவெட்டு வரும்வரை
நம் கண்ணீர் நிறுத்தி
அமைதியின் மடிகிடத்த
தம் கண்ணீர் பொழியும்
கருணை மேகங்களல்லவா
பெண்கள்

அறிவுரைக்கோ
ஆயிரம் நாவுகளுண்டு
ஆறுதலுக்கு
அவளன்றி வேறு வழியுண்டோ

பெண்கள்
உயிர்களைப் பிரசவிக்கும்போது
ஆண்கள்
அணுகுண்டுகளைத்தானே
பிரசவிக்கிறார்கள்

பெண்களே விதைகள்
இந்தப் பிரபஞ்சத்தின்
வேர்கள்

- அன்புடன் புகாரி

இல்லறம்

ஆண் பெண் இருவரும் மல்யுத்த வீரர்களாய் நின்றால் வாழ்க்கை குத்துப்பட்டே செத்துப்போகும். வீரத்தால் சாதிப்பது எதுவும் நிலைக்காது. அன்பால் சாதிப்பது மட்டுமே என்றென்றும் தொடரும்.

ஆண் பெண்ணைச் சார்ந்து இருத்தலும் பெண் ஆணைச் சார்ந்து இருத்தலுமே இல்லறம். சார்ந்திருப்பதே காதல். சார்ந்திருத்தலே தாய் பிள்ளை பாசம். சார்ந்திருத்தலே உலக உறவுகளின் ஆணிவேர். சார்ந்திருப்பது அடிமைத்தனமல்ல தூய்மையான அன்பு.

தன் வலிமையையெல்லாம் மீறி நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன் என்று சொல்லுமிடத்து எத்தனை உயர்வான காதல் எழுந்து நர்த்தனம் ஆடுகிறது.

தொட்டதற்கெல்லாம் நீ உயர்வா நான் உயர்வா என்று வீரம் பேசினால் வாழ்க்கை வாடி வதங்கி செத்து சுண்ணாம்பாகிவிடும்

பெண்ணுரிமை

குளிரும்போது
பாதம் தேடி ஓடும்
நீர்தான்
கொதித்ததும்
வானம் ஏறுகிறது
*ஓரினச்சேர்க்கையும் ஒரு பதினாறு அதிரடிக் குறிப்புகளும்*

1. ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் வாயிலாக மனித இனத்திலிருந்து இன்னொரு இனம் பிரிக்கப் படுகிறது. சாதிகள் மூன்றொழிய என்று அவ்வையைத் திருத்தி எழுதவேண்டும் ;-) அந்த மூன்றாம் சாதிக்குள்ளும் ஏழு சாதி இருக்கிறதாம் அது வேறு கதை.

2. தன் மகன் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை எந்த பெற்றோரும் ஏற்பதில்லை. எந்த உறவுகளும் அங்கீகரிப்பதில்லை. அதனாலென்ன? உறவு என்று சொல்லிக்கொள்ள பிள்ளைகளே பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு உறவுகள் என்பது ஒரு பொருட்டா  என்ன?  ;-)

3. உலகில் இனப்பெருக்கமே இல்லாத ஓர் இனம் ஓரினச்சேர்க்கையர் இனம்தான். பறவைகள் விலங்குகள் புழு பூச்சிகள்கூட இவர்களைவிட மேல்தான் ;-)

4. விலங்குகளிலும் ஓரினச்சேர்க்கை இருக்கிறது அதனால், மனிதர்களுக்கும் அது ஏற்புடையது இயற்கையானது என்று சொல்கிறார்கள். அப்படிச் சொன்னால் விலங்குகளில் உடலுறவுக்குப் பின் ஆணை பிரியாணியாய்த் தின்று தீர்த்துவிடும் விலங்குகள் உண்டு. இவர்கள் எப்படி? ;-)

5. நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று வெளியில் சொல்ல ஒரு தைரியம் வேண்டும். அது அசிக்கமாகத் தெரியாத அவர்கள் நிச்சயம் வேறினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி. எனவே அவர்களுக்கு அந்த அங்கீகாரம் வழங்குவது சரிதான் ;-)

6. இந்த சட்டத்தால் பெற்றோர்களின் பீதி பன்மடங்காய் வளர்ந்துவிடும். முன்பு தன் மகன் எவளை இழுத்துக்கொண்டு வந்துவிடுவானோ என்று கவலைப்பட்ட பெற்றோர், இப்போது எவளையாவது தாராளமாக இழுத்துக்கொண்டுவா, எவனையாவது இழுத்துக்கொண்டு வந்துவிடாதே என்று கெஞ்சுவார்கள் ;-)

7. பெண்களுடன் பழகும் ஆண் பிள்ளைகளை இனி பெற்றோருக்கு ரொம்பப் பிடிக்கும். நண்பன் என்று ஒரு பையனை வீட்டுக்கு அழைத்துவந்தால், பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்வார்கள் ;-)

8. ஆண்டவன் படைப்பில் தவறு என்று ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றி இனி யாரும் கூறமாட்டார்கள். ஆண்டவன் சரியாகத்தான் படைத்திருக்கிறான். நாம்தான் பாகுபாடுபடுத்தத் தெரியாமல் இருந்துவிட்டோம் என்று நம் தவறை உணரலாம் ;-)

9. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தனியே ஐ.டி கார்டு வழங்கப்பட்டுவிட்டால், நம் வீட்டுப் பெண்பிள்ளைகளை அவர்களோடு எங்குவேண்டுமானாலும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். அதைவிட பாதுகாப்பு வேறு எதுவும் இருக்க முடியாது ;-)

10. ஓரினச்சேர்க்கையாளர்களிடம் ஒரு வசதி. வரம் வாங்கி வந்தவர்கள். ஆண் பெண் உறவு என்றால். ஒரு பூட்டு ஒரு சாவிதான். அடிக்கடி திறந்தால் அலுத்துப்போகும். ஓரினச்சேர்க்கையாளர்கள் அப்படியல்ல. இரண்டு பூட்டு இரண்டு மாஸ்டர் சாவி. இந்த உறவில் சுவாரசியம் அதிகம் ;-)

11. மனைவியை பிரசவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்துவிட்டு கவலையோடு அலைய வேண்டிய அவசியம் இல்லை ;-)

12. மனைவியை ஆடிமாதத்தில் பிரிந்து ஆடிப்போய் நிற்கத் தேவையில்லை ;-)

13. கர்ப்பத்தடை மாத்திரைகள் மருந்துகள் சாதனங்கள் என்று எதுவும் தேவையில்லாத இன்ப வாழ்வு ;-)

14. கல்யாணமாகி இவ்ளோ வருடங்களாகியும் குழந்தை இல்லையா என்று யாரும் அனுதாபப்படமாட்டார்கள் ;-)

15. மலடி என்ற சொல் இந்த இனத்தவருக்கான அகராதியில் அர்த்தமிழந்து நிற்கும் ;-)

16. இந்த புதிய இனத்தின் கவிஞர்கள், ”பின்னழகே பின்னழகே பின்னுகிறாய் பின்னழகே” என்ற ரீதியில் எழுதித் தள்ளுவார்கள் ;-)

அன்புடன் புகாரி
20030810
*நன்னீர் தேடும் நச்சு வேர்கள் - ஓரினச்சேர்க்கையாளர்கள்*

உலக அருவருப்புகளெல்லாம் ஒன்றாய்க் கூடி அருவருப்புகளின் அணிவகுப்பு நடத்தினால் எப்படி இருக்கும்?

புழக்கடையில் புரளும் இந்தப் புழுக்களின் அருவருப்பைக் காதோரம் கேட்கும்போதே கோடி கோடி கம்பளிப் பூச்சிகள் உடுத்தாத உடலில் ஊர்வதைப்போல கூசிச்சாகிறது மனசு.

இன்றைய பொழுதுகளில் துரிதமாய் வளரும் நாச வேலைகளுள் மிக முக்கியமானதாய் இருப்பது அருவருப்புகளின் உச்சக் கரைகளையும் உடைத்தெறிந்த ஓரினச்சேர்க்கையே.

மண்ணில் மனிதர்களாய்ப் பிறந்த பலரும் இதுபற்றிப் பேசுவதற்கோ கேட்பதற்கோ அருவருப்புப் பட்டுக்கொண்டு கூச்ச ஓடங்களாய் நாகரிகக் கரைகளில் ஒதுங்கிவிடுகிறார்கள்.

ஆனால் இதன் வளர்ச்சி பற்றிய அறிவு அவர்களிடம் போதுமானதாக இல்லாவிட்டால், அது அவர்கள் வீட்டுக் கதவுகளையே லாவகமாய்த்தட்டி சட்டென்று உள்நுழைந்துவிடும் பேரபாயம் இருக்கிறது.

ஒரு நோயைப் பற்றி அறியாமல் அந்த நோயைத் தடுக்க முடியுமா?

இது ஒரு தொற்று நோயாய் உலகமெங்கும் நச்சு வேர் விரித்து வளர்கிறது.

அருவருத்து ஒதுங்கும் அவசரக் கால்கள் மட்டும் போதாது இதுபற்றிய கவனக் கண்களும் தேவை நம் மூளைக்கு.

ஓர் ஆண் ஒரு பெண்மீது காதலோ காமமோ கொள்ளாமல், இன்னொரு ஆண்மீதே காமம் கொள்கிறான்.

பெண்களைக் கண்டால் ஒரு சுண்டைக்காய் அளவுக்கும் காதலோ காமமோ கொள்ளாத அவன் இன்னொரு ஆணைக் கண்டால் மட்டும் சுறாமீனாய்ப் பாய்கிறான்

பூட்டுகளுக்கான
சாவிகளைக் கோத்துத்
தனியே வைத்திருந்தேன்
ஒரு கொத்து

கொத்துகளுக்குள்
ஒரே கூத்து

பூட்டுகளைத் திறந்திட
அதிசய மறுப்பு
வீடெங்கும் விளைந்தது

கூரை கொள்ளா
அருவெருப்பு

எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை மின்னணு வேகத்தில் பரப்பி நிற்கும் இவர்கள் உலகத்தையே சுடுகாடாய் அழித்தொழிக்க சட்டப்படி முழு உரிமை கேட்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் தலையாய முதல் அவலம் எதுவென்றால் அது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சில வெள்ளையர் நாடுகள் சட்டப்படி திருமண அனுமதி வழங்கியதுதான்.

நெதர்லாந்தே 2001ல் அந்தப் பாவச்செடிக்கு நீரூற்றியது முதலில். அதைத் தொடர்ந்து 2003ல் பெல்ஜியம் பின் 2005ல் கனடாவும் ஸ்பெயினும் அனுமதிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி இருக்கின்றன.

இது மனித இனத்தையே அலுங்காமல் குலுங்காமல் அப்படியே பாடைகட்டும் போக்கு, இதை அறிய நேர்ந்த இதயங்கள் அரிவாளால் அரியப்பட்டதைப்போல் துடித்தன.

நெல்சனும் பீட்டரும்
ஜான்சனைத்
தத்தெடுத்தான்கள்
பிள்ளையாக

அம்மாவும் ஆண் என்று
கொண்டாட்டம்
ஜான்சனுக்கு

மேற்கின்
மயானக்கரைகளெங்கும்
மத்தாப்புத் தோரணங்கள்

கிழக்கின்
கர்ப்ப அறைகளில்தான்
கலாச்சாரக்
கதிரவன் பிறக்கிறான்
எப்போதும்

செத்தே
பிறந்துவிடுவானோ
அங்கும் என்று
பதட்டமாய் இருக்கிறது

என்று கவிதை எழுதினேன் நான்.

வலையேற்றுவதற்காக அதை பதிவுகள் மின்னிதழுக்கு அனுப்பிவைத்தேன்.

"தந்தை-தாய், ஆண்-பெண் முறையிலான குடும்ப உறவுகளை, தொடர்புகளையே நானும் இயற்கையானதாகக் கருதுகின்றேன். ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறு இல்லையென்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன். அவர்களது உரிமைகளையும் மதிக்கின்றேன்." என்று எனக்குப் பதில் இட்டுவிட்டு, கவிதையையும் வலையேற்றினார் அதன் ஆசிரியர் கிரிதரன்.

"தொழுநோய்முதல் எய்ட்ஸ்வரை அனைத்தும் யதார்த்தங்கள்தாம். அவற்றை நம்மால் விரும்பி ஏற்க முடியாது. அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படலாம். அது மனிதப்பண்பு. மனோவியாதி யதார்த்தம் என்றாலும் அது குணமாக்கப்படவேண்டிய ஒன்றுதானே தவிர போற்றுதலுக்குரியதன்று.

உடல் ஊனமுற்றோர்கள் யதார்த்தங்கள்தாம். இவர்களே நம்மால் அரவணைக்கப் படவேண்டியவர்கள். அலிகள் யதார்த்தங்கள்தாம். நம் பரிதாபத்திற்குரியவர்கள். விலக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

இயற்கையை அழிக்கவல்ல இயற்கைக்கு எதிரான அனைத்திற்கும் கவிஞனின் குரல் ஒரே போலவே ஒலிக்கும். போர் என்றால் நிறுத்து என்பான். காதல் என்றால் துவங்கு என்பான். மதவெறி என்றால் விலகு என்பான். மனிதம் என்றால் போற்று என்பான்.

ஓரினச்சேர்க்கையையாளர்களின் உரிமைகளை மதிப்பது மனிதம் போற்றுதல் அல்லவா என்ற கேள்வி எழலாம். மனித இனத்தையே அழிக்கக்கூடிய செயலை எப்படி நம்மால் மனிதம் போற்றுவதாய்க் கொள்ளமுடியும்?

குணப்படுத்தப்படவேண்டிய இம்மாதிரி நோயாளிகளை, மனோ வியாதிக்காரர்களைப் பார்த்துப் பாவப்படுகிறேன். அதைக் கொண்டாடும் கூட்டத்தைப் பார்த்துக் கோபப்படுகிறேன்" என்று நான் மறுமொழி தந்ததையும் இணைத்தே கிரிதரன் என் கவிதையை வலையேற்றினார்.

அத்தனை ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், கனடியர்களும் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறார்கள் என்று யாரும் தவறாக நினைத்துவிடாதீர்கள்.

அதிபர் ஜார்ஜ் புஷ் தேர்தலில் வென்றதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அவர் ஓரினச்சேர்க்கையை எதிர்த்ததுதான் என்றொரு கருத்து உண்டு. மிகச் சிறுபான்மையினரே வெள்ளையர் நாடுகளில் இதனை ஆதரிக்கிறர்கள்.

உலகின் எல்லா மூலைகளிலும், ஒன்று அல்லது இரண்டு சதவிகித மக்களே இப்படி ஓரினச்சேர்க்கை என்ற மனம் மற்றும் உடல் கோளாறுகள் கொண்டு மிருகங்களாய் அலைகிறார்கள்.

மூளைச் சிதைவுடன் பிறக்கும் குழந்தைகளைப்போல, உடல் ஊனங்களுடன் பிறக்கும் குழந்தைகளைப்போல இவர்களும் தப்புத் தப்பாய்ப் பிறந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் மனித உரிமை என்ற பெயரில் இவர்கள் சட்டமன்றங்களுக்கு அங்கீகாரம் கேட்டு வருகின்றனர்.

எங்கள் உரிமைக்குப் போராடுவோம் என்று கூறிக்கொண்டு ஆண்களை ஆண்களே நடுவீதிகளில் காமம் வழியக் கட்டிப்பிடித்து உதட்டோடு உதடுவைத்து நச்சு முத்தம் கொடுத்துக் கொண்டு காரி உமிழ்ந்த கக்குவான் எச்சில்களாய் இவர்கள் இந்நூற்றாண்டில் மிதமிஞ்சிப் புறப்பட்டிருக்கிறார்கள்.

கீழை நாடுகளில் உள்ளவர்களைப்போல் இவர்கள் இதற்கெல்லாம் நாணப்படுவதில்லை, ஆனால் இவர்களைப் பார்த்து வெள்ளையரின் உலகமும் முகம் சுழிக்கிறது.

இவர்கள், தங்களின் தகாத இச்சைகளைச் செயலாக்க எத்தனை வழிகளுண்டோ அத்தனையையும் முயன்றுபார்க்கிறார்கள்.

தாங்கள் செய்வது தவறல்ல என்று நிறுவுவதற்காக நெறிகெட்டு வாதிடுகிறார்கள்.

இவர்களுள் மெத்தப் படித்த மேதாவிகளும் சிலர் உண்டு. அவர்களே இந்த நாசவேலையின் செயல் ஊற்றுகளாகச் செயப்படுகிறார்கள்.

மிருகங்களுக்கிடையேயும் பறவைகளுக்கிடையேயும், ஓரினச்சேர்க்கை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, எனவே நாங்கள் செய்வதில் என்ன தவறு என்கிறார்கள்.

சில மிருகங்கள், பெற்றடுத்த குட்டிகளை அப்படியே லபக்கென்று விழுங்கிவிடுகின்றன. சில மிருகங்கள், பிற மிருங்களை ஒரே வாயில் விழுங்கிவிட்டு மாதக்கணக்கில் அசையாமல் கிடக்க்கின்றன.

ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டையுமே ஒரே உடலில் சில புழுக்கள் பெற்றிருக்கின்றன. இவை போல் இன்னும் எத்தனையோ வினோதங்கள் மிருகங்களில் உண்டு.

நாமோ ஆடை உடுத்துவதையும் அகற்ற முடியாத நாகரிக மனிதர்களல்லவா?

அவர்களும் மனிதர்கள்தாம், அவர்களின் உணர்வுகளையும் மதிப்பதுதான் மனிதாபிமானம், அவர்களுக்கு அதுவே இயற்கை, அவர்களுக்குப் பெண்களைக் கண்டால் பிடிப்பதே இல்லை ஆணகளையே விரும்புகிறார்கள், என்ன செய்யமுடியும் என்கிறார்கள் சிலர்

12 வருடங்களுக்கு முன் கனடாவில் ஒரு 24 வயது வாலிபன் 4 வயது பெண் குழந்தையை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்திக் கொன்றேவிட்டான்.

சகோதரன் சகோதரிக்கு இடையில் காம உறவு ரோமாபுரி மன்னன் ஒருவனிடம் இருந்தது.

தாய்-மகன், தந்தை-மகள் என்று தகாத உறவுகள் ஆங்காங்கே நிகழ்வதாக அவலத் தகவல்கள் உண்டு.

இவர்களும் மனிதர்கள்தாம், இவர்களின் உணர்வுகளையும் மதிப்பதுதான் மனிதாபிமானம், இவர்களுக்கும் இதுவே இயற்கை என்று விடமுடியுமா?

இவர்கள் எல்லோரும் மனோவியாதிக்காரர்கள். உண்மையாகவே ஊனமுற்றவர்கள், அனுதாபப்படவேண்டிய குற்றவாளிகள், குணப்படுத்தப்படவேண்டிய நோயாளிகள்.

பெண்வாடையற்றுக்கிடக்கும் யுத்தமுகாம்களில் தோன்றிய கேடுதான் இந்த ஓரினச் சேர்க்கை.

யுத்தம் வளர்வதைப் போல் இதுவும் வளர்ந்து வளர்ந்து உலகை நாசம் செய்ய விசுவரூபம் எடுத்திருக்கிறது.

யுத்த்தத்தையும் இதையும் தடுத்தே ஆகவேண்டும்.

குடும்பத்தைப் பிரிந்து வெகுகாலம் ஆண்கள் மட்டுமே தனித்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சிலரும், இந்தச் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் உங்களை என்ன செய்துவிட்டார்கள்? அவர்கள் பாட்டுக்கு யாருக்கும் பாதிப்பில்லாமல் ஏதோ செய்துகொண்டு போகட்டுமே, நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்களேன், அவர்கள் சுதந்திரத்தை ஏன் கெடுக்கிறீர்கள் என்கின்றனர் சிலர்.

தம் அடிக்கவும் தண்ணியடிக்கவும் சில மலரும் மழலையர் அலைகிறார்கள்.

கஞ்சா அபின் என்று கலங்கிப்போக சில விடலைப் பருவத்தினர் அலைகிறார்கள்.

விருப்பம்போல தற்கொலை செய்துகொள்ள சில விரக்தி மன்னர்கள் அலைகிறார்கள்.

அவர்கள் பாட்டுக்கு வீதிகளில் எதையோ செய்துகொண்டு சில பைத்தியங்கள் அலைகிறார்கள்.

நடுச்சாலையில் அம்மணமாய் அலைய விரும்புகிறார்கள் சில இயற்கை விரும்பிகள்.

முச்சந்தியில் எல்லாவற்றையும் களைந்துவிட்டு உடலுறவு கொள்ளத் தவிக்கிறார்கள் சில நாகரிகக் காப்பாளர்கள்

எல்லோரும் பார்க்கும்படியான இடத்தில் சில சுதந்திர உரிமையாளர்கள் மலம் கழிக்கிறார்கள்

அண்ணன்-தங்கை, அம்மா-மகன், அப்பா-மகள், மாமியார்-மருமகன், தாத்தா-அம்மா என்று உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள் சில விசித்திரப் பிறவிகள்

இவர்களெல்லாம் உங்களை என்ன செய்துவிட்டார்கள்? இவர்கள் பாட்டுக்கு யாருக்கும் பாதிப்பில்லாமல் ஏதே செய்துகொண்டு போகட்டுமே, நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்களேன், இவர்கள் சுதந்திரத்தை ஏன் கெடுக்கிறீர்கள் என்றால் சரியா?

எய்ட்ஸ் என்பதென்ன சாதாரண நோயா? எய்ட்ஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் மூலம்தான் விரைந்து பரவுகிறது என்கிறார்கள். அவர்கள்தாம் அதை உருவாக்கியும் இருக்க வேண்டும் என்ற ஐயமும் அறிவியலில் வலிமையாக இருக்கிறது.

இவர்களுள் ஒரு வினோதமும் உண்டு. நான் அப்பா நீ அம்மா என்று இரு ஆண்கள் சொல்லிக்கொண்டு ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க குழந்தைகள் கேட்டு ஆசிரமம் ஆசிரமமாய் விண்ணப்பிக்கிறார்கள்.

குழந்தைபெற்றுக் கொள்ளும் இயற்கை நியதியையே வேரோடு அழிக்கும் இவர்களுக்குக் குழந்தைப் பற்றும் குடும்பப் பற்றும் எங்கிருந்து வருகிறது என்றுதான் தெரியவே இல்லை.

எல்லோரும் இவர்களைப் போலவே மாறிவிட்டால், பின் குழந்தைகளை எங்கிருந்துதான் தத்தெடுப்பார்கள் என்றும் விளங்கவில்லை.

மலம் தின்பவன், தன் தொடைக்கறியை வெட்டி தானே சமைத்து உண்பவன், ஓரினச் சேர்க்கையாளன், இவர்களுள் என்ன வேற்றுமையைக் கண்டுவிடமுடியும்?

அருவருப்புகளுள் மற்றைய இருவரையும்விட மூன்றாமவரே மிதமிஞ்சிப் போனார்களல்ல்லவா?

மலம் ஒரு மனிதனின் உடல் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படுவது. புழுக்களும் பூச்சிகளும் கும்மாளம் போடும் நரவல் அது? இவர்களுக்கு அதில் அருவருப்பே இல்லையென்றால், இவர்கள் தலையில் இருப்பதும் மலமாகத்தானே இருக்க வேண்டும்.

உணவின் கழிவுப்பாதைகளில் காமம் தேடுபவர்கள் முற்றிப்போன மனோவியாதிக்காரர்களே என்பதில் எரியும் நெருப்பு நடுவே கிடக்கும் பஞ்சளவுக்கும் சந்தேகமில்லை.

ஓரினச்சேர்க்கை என்பது மனிதனின் கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், பெண்மை, ஆண்மை போன்ற புனிதங்கள் அனைத்தையும் சுடுகாட்டுக்கு இழுத்து வந்து ஏலம் போடுகிறது.

ஆண் பெண் என்ற இயற்கையின் அதி முக்கிய மூலாதார வேறுபாட்டிற்கே வேட்டு வைக்கிறது, காதல் கழிந்து புலன்களின் சுயப் பண்புகளற்ற மூர்க்கக் காமமே மேலோங்கி வெறி கொள்கிறது.

ஒரு பெண்ணுக்குப் பிறக்காமலா இவர்கள் பிறப்பெடுத்தார்கள்? கெட்டழியும் இவர்களைப் பார்த்து இவர்களின் தாய்மார்கள் எப்படி எப்படியெல்லாம் துடிதுடித்துப் போவார்கள்?

இவர்களைக் குணப்படுத்தியே ஆகவேண்டும். உலகம் அதற்காக முழுமையாகச் செயப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது.

இவர்களே மெல்ல மெல்ல அழிந்துவிடுவார்கள் என்று நம்பியதில் இனியும் பொருள் இல்லை.

சிறப்பு மருத்துவமனை திறந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டியது இன்று உலகுக்கு மிக மிக அவசியமான ஒன்று.

போதை மருந்தில் அடிமையாகிப் போனவர்களைக் காப்பதைவிட இவர்களைக் காப்பதே இன்று மிக முக்கியம்.

அதற்குமுன் நாம் நம்மை இவர்களிடமிருந்து அக்கறையாய்ப் பாதுகாக்கவும் வேண்டும். ஓரினச்சேர்க்கையாளர்கள், தாமே வளரமுடியாது. ஏனெனில் அவர்களால் சந்ததியினரைப் பெருக்கமுடியாது. அதற்காக அவர்கள் இரு வழிகளைக் கையாள்கிறார்கள்.

ஒன்று பிள்ளைகளைத் தத்தெடுப்பது.

இரண்டாவது சந்திப்பவர்களை யெல்லாம் ஆசைகாட்டித் தங்கள் வலைக்குள் இழுப்பது.

இவை இரண்டுமே ஆபத்தானவைதாம். குழந்தைகளிடமும், விடலையர்களிடமும் மும்முரமாக ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டுகிறார்கள்.

சிறந்த மனோதத்துவ முறையில் இவர்கள் இளையவர்களை அனுகுகிறார்கள்.

இவர்களிடமிருந்து, இன்றைய இளைய தலைமுறை கண்டிப்பாகக் காப்பாற்றப் படவேண்டும்.

ஆண் பெண் உறவுகளில் தேவையில்லாத அடக்குமுறை தளர்த்தப்படுவதும் இதனால் அவசியம் ஆகிறது.

வளர்ந்துவரும் சூழ் நிலையில் இது மெல்ல மெல்ல கைகூடி வருகிறது என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் மேலும் மேலும் தளர்வுகள் தேவை.

சிறைச்சாலை செல்பவர்கள், மனைவி குழந்தைகளைப் பிரிந்து நெடுங்காலம் வாழ்பவர்கள் போன்றோரைக் காப்பதற்கு அரசுகள் ஆவன செய்யவேண்டும்.

ரோஜா கிடைக்காத தாகங்களால் முட்களில் சிக்கி ரத்தம் கொட்டுகின்றன சில தன்னந்தனிப் பறவைகள்.

மிகுந்த சோகத்திலும், வாழ்க்கைத் தோல்விகளிலும் இருப்பவர்களை இவர்கள் எளிதில் வளைத்துவிடலாம் என்று யுத்த கவனமாய்க் காத்திருக்கிறார்கள்.

இவர்களிடமிருந்து நம் நண்பர்களை, சகோதரர்களை, பிள்ளைகளை நாம் காத்திடல் வேண்டும்.

அதற்கு இவர்களின் நடவடிக்கைகளை நாம் முழுதாய் அறிந்திருக்க வேண்டும்.

இவர்களுக்கென்று தனி ஆடைகள் உண்டு. தனி உணவு விடுதிகள் உண்டு. தனி தங்கும் இடங்களும் உண்டு. பத்திரிகைகள் நடத்துகிறார்கள். பத்திரிகைகளில் கவர்ச்சியாய் அழைப்புகள் விடுக்கிறார்கள்.

இவர்களின் அட்டூழியங்களைக் கண்ட ஓர் அமெரிக்கத் தமிழர் இப்படிச் சொன்னார்:

என் மகன் சாதி மதம் இனம் தாண்டி, ஏழை பணக்காரன் என்ற ஏற்றங்கள் தாண்டி, உறவு பகை என்ற நிலைகள் தாண்டி, யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமாலாலும் திருமணம் செய்யட்டும். ஆனால் அது ஒரு பெண்ணாக மடும் இருக்கட்டும். அது எனக்குப் போதும்!

-0-

*எப்படி வந்தது ஓரினச்சேர்க்கை?*

ஓரினச்சேர்க்கை வளர்ந்தது அடக்குமுறையால்தான் என்பதில் நிறைய உண்மை இருக்கிறது.

சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் கிடந்தவர்கள் வேறு வழியற்று இப்படி கீழ்த்தரமானார்கள்

குடும்பம் இல்லாமல் தனியே வெளிநாடுகளுக்குச் சென்று பல ஆண்டுகள் ஆண்களுடனேயே வாழ்ந்தவர்கள் இதில் தள்ளப்பட்டார்கள்

அரபு நாடுகள் போல பெரும் பணம்கொடுத்து திருமணம் செய்யமுடியாமல் வாழ்ந்தவர்களும் இந்தியா போன்று வறுமை காரணமாக திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர்களும் இதில் வீழ்ந்தார்கள்

அன்றைய ரோமாபுரியில் இளைஞர்களைத் திருமணம் செய்யவிடாமல் பெண்வாசனையே இல்லாமல் இருக்க அரசு சட்டங்கள் பிரப்பித்தது. அப்போதுதான் தன் ஆட்சி உலகெலாம் பரவும் என்று போர்க்கொள்கை கொண்டிருந்தது. அதனால் இதில் வீழ்ந்தவர்கள் வெகு அதிகம்.

ராணுவங்களில் பணியாற்றச் சென்றவர்கள் இதற்கு பலியானார்கள்

பெண் உறவுகளே இல்லாமல் பள்ளி கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் ஆர்வக் கோளாறினால் இதைப் பழகினார்கள்

துறவு வாழ்க்கைக்குப் போகிறேன் என்று ஓடியவர்கள் கஞ்சா மருந்து என்று அடித்துவிட்டு இதில் விழுந்தார்கள்

இவை அத்தனையிலுமே அடக்குமுறை பிரதானமாய்த்தான் இருக்கிறது.

ஆண் பெண் உறவுகள் தடை செய்யப்படும் சமூகம் இதை ஓரளவுக்கு வளர்க்கிறது என்றே கூறலாம்.

அன்புடன் புகாரி
20020810

விவாதமும் கருத்தாடலும்

குழுமங்களில் எதிர் எதிர் நிலைப்பாட்டில் நின்று உரையாடுவதை
விவாதம் என்று கூறுக்கூடாது

கருத்தாடல் என்றுதான் அழைக்கவேண்டும்

காரணம்...

விவாதம் என்றால் பட்டிமன்றப் போக்கு.
தன் பக்கம் நியாயம் இல்லை என்றாலும் வலிந்து போரிடுவது
ஏற்புடைய கருத்துக்களையும் ஏற்பதில்லை.
வெல்ல வேண்டும் என்ற ஒறே குறிக்கோளுடன் இடைமறித்தே பேசுவது.

கருத்தாடல் என்பது
என் கருத்தை நான் முன் வைக்கிறேன்
உன் கருத்தை நீ எடுத்துவா
ஏற்புடையது என்று ஆகும்போது நான் ஏற்கிறேன்
அதை சபையில் அறிவிப்பேன்
அப்படியே நீயும் இரு

அதோடு நமக்குள் தனிமனிதக்கீறல் நிகழவே கூடாது
அதுவே கருத்தாடலின் பண்பு

ஆணும் பெண்ணும்

பெண் எப்படிப் படைக்கப்பட்டாளோ அப்படியே அவள் இருக்கிறாள்
ஆண் எப்படிப் படைக்கப்பட்டானோ அப்ப்டியே அவன் இருக்கிறான்.

80 வயதுவரைகூட காமம் தளராளம் இருப்பது ஆணின் படைப்பு
40க்குள்ளேயே காமம் ஒடுங்கிப்போய்விடுவது பெண்ணின் படைப்பு

ஒரு வருடத்தில் ஒரு பிள்ளை பெறுவது பெண்ணின் படைப்பு
ஒரே வருடத்தில் 365க்கு மேலும் பெற்றுக்கொள்ள முடிவது ஆணின் படைப்பு.

அவளிடம் கருவறை இவனிடம் சாவி அதுதான் இனப்பெருக்கத்தின் வழி.
அதுதான் இயற்கை. அதனால்தான் இந்தப் பிரபஞ்சம்.

ஆணிடம் பெண்தேடல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை
அப்படிப் பெண்தேடல் இல்லாத ஓரினச்சேர்க்கையாளர்களால் பிரபஞ்சமே அழிந்து போகும்

ஆண் பெண்ணைத் தேடவேண்டும்
பெண் ஆணைத் தேடவேண்டும்

பிள்ளைகள் பிறந்தபின் பெண்ணின் நிலைப்பாடு
தேடுதலிலிருந்து சற்றே விலகிவிடும்
ஆனால் ஆணின் தேடல் தொடரும்.
இது அடிப்படை, இயற்கை, வாழ்வியல் தத்துவம்.
சட்டங்களால் அழிக்கமுடியாத சாசுவதம்!

நம் சமூகத்தில் ஏன் ஒரு பெண்ணை அடிமுட்டாளாகவே சித்தரிக்கிறார்கள்
என்று தெரியவில்லை.

ஆணின் மேதாவித்தனம் பெண்ணை இப்படி அடிமையாகவே பார்ர்கிறது.

தானே சுயசிந்தனை உள்ளவன் என்ற அகம்பாவம்.
பெண் பின்புத்திக்காரி என்று காலகாலமாய்ச் சொல்லும் அவலம்.

18 வயதை எட்டிய பெண் தன் எண்ணங்களில்
தன் தேவைகளில் தெளிவாகவே இருப்பாள்.
அந்த வயதில் அவளுக்குக் கிடைப்பதுதான் வாழ்க்கை.
அவள் வாழ்க்கையை வாழ நம் சமூகம் அனுமதிப்பதே இல்லை

அவளைச் சுதந்திரமாக விட்டால் போதும்.

சும்மா இரு உனக்கு ஒன்றும் தெரியாது என்று
தகப்பன் தாய் அண்ணன் தம்பி என்று எல்லோரும்
அவள் விருப்பதைச் சாகடித்து அடிமையாக்குவதே வழக்கமாகிவிட்டது.

அவளின் அந்தந்த வயது தேவைகளை அவளே முடிவுசெய்யட்டும்.
அவளை அவள் சுதந்திரத்தில் விட்டுவிடவேண்டும்.

அதுதான் உண்மையான சம உரிமையின் முதல்படி!

கடவுளின் மடிகள்

அறுபட்ட நரம்புகளில்
விடுபட்ட உறவுகளின் மிச்சம்
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட
எது அழிந்து எப்படிப்போனாலும்
என்றும் அழிந்துபோகாத
பசி மட்டும் சுயநினைவைச் சூறையாட
விழுந்துகிடக்கிறது கிழம்
குப்பைத் தொட்டியில்

குப்பைத் தொட்டிகள் கடவுளின் மடிகள்
இன்று மலர்ந்த தளிர்களும்
நாளை உதிரும் சருகுகளும்
அந்த மடிகளில்தான் இப்போதெல்லாம்

மனிதநேயம் நாளுக்கு நாள்
தாயம் விளையாடப்பட்டு
பாம்பு கொத்தி பாம்பு கொத்தி
விசப்பல் அச்சுகளோடு மட்டும்
குப்பைத் தொட்டிகளில்

வேண்டாதவற்றைக்
கொட்டத்தானே
குப்பைத்தொட்டிகள்

இளைஞனே
இது உனக்கு
நல்லதோர் எச்சரிக்கை

நீதானே நாளைய கிழம்
இன்றே சுதாரித்துக் கொள்
உன் முதுமை வாழ்வுக்கு
சில்லறைகளைச் சேமித்துக்கொள்

இன்று நீ எறிந்ததைவிட
நாளை உன்னைத்
துரிதமாய்த் தூக்கியெறிவான்
உன் பிள்ளை

இப்போதே
கொஞ்சம் சில்லறையை
எவரும் தொடாத இடத்தில்
பதுக்கி வைத்துக்கொள்

அது
எதைப் போக்காவிட்டாலும்
அற்பப்
பசியையாவது போக்கும்

இணையப் பேரரசு

அகிலத்தை
அள்ளியெறிந்து விளையாடும்
கூடைப்பந்தாட்ட வீரனாக

அண்டவெளியெங்கும்
தகவல் ரத்தம் பாய்ச்சும்
பைனரி
நரம்பு மண்டலமாக

ஆகாய உள்ளங்கையின்
அடையாள
ரேகை ஓட்டமாக

விசும்பும் ஏகாந்த உயிரை
விரும்பிய திசையில்
விருப்பம்போல் செலுத்த
நாநோ நொடிதோறும்
திறந்தே கிடக்கும்
மந்திர வாசலாக

பள்ளிகளும் தள்ளி நிறுத்த
அனாதையாய் அழுத தமிழைக்
கெட்டிப் பாலூட்டி
தட்டச்சு மடிகளில்
தட்டிக் கொடுத்து வளர்க்கும்
கணிவலைத்தாயாக

வணிகமொழி
களவாடிக்கொண்ட
இதயமொழி எழுத்தாளர்களை
இழுத்துவந்து
ஈர்ப்பேற்றி
இலக்கியமழை பொழியவைக்கும்
நிலவான சூரியனாக

உருப்படாத ஊடகங்கள்
உதறியெறிந்து
முடக்கிய அருங்கலைகள்
அனைத்தையும்
உச்சிமோந்து உயர்த்திப் பிடிக்கும்
வலைப்பூக் கரங்களாக

வேற்றுக்கோள் தமிழனோடும்
ஊற்றெடுக்கும் பசியோடு
ஒன்றாய்த் தமிழுண்ண
மின்னிலையிட்ட வலைப்பந்தியாக

நாதோன்றும் முன்னரே
சொல் தோன்றி
வளர்ந்த தமிழை
மின்கலை ஊற்றி வளர்க்கும்
நவீன தமிழ்ச்சங்கமாக

இணையம்
என்ற பேரரசு

இன்னொரு ஜென்மம்

பச்சையிலை மாநாட்டில்
பனிவிழும் பூக்காட்டில்
வேர்நரம்பும் விட்டுவிடாமல்
விதைகளுக்கு உள்ளேயும்
தேடினேன் தேடினேன்

ஏழு வண்ணமா என் வண்ணமா
என்ற கேள்வியழகோடு
அன்றலர்ந்த ரோஜா ஒன்று
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் கவர்ச்சி வனப்பில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

நீண்டு நிதானமாய் நன்னீர் சுழித்தோடும்
நதியினுள் குதித்துத் துழாவித் துழாவித்
தேடினேன் தேடினேன்

வெள்ளிச் செதிள் சிவக்க
விளையாடும் செங்கண் சிரிக்க
கெண்டை மீனொன்று
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் ஒய்யார ஆட்டத்தில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

ஆழக் கடல் தொட்டு அடிச்சென்று மூச்சடக்கி
அகண்ட கண் விரித்து அதுவீசும் சுடரொளியில்
தேடினேன் தேடினேன்

குட்டிப் பவளப் பேழைகளாய்க்
கொட்டிக் கிடக்கும் சிப்பிகளின்
கதவு திறந்த முத்தொன்று
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் ஒளிரும் கர்வத்தில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

மெத்து மெத்தென்ற மேகக் கூட்டங்களை
முன்னும் பின்னுமாய் இழுத்திழுத்து விலக்கித்
தேடினேன் தேடினேன்

வானத்தின் வெண்பொட்டு
வயதேறா குமரி மொட்டு
வட்டநிலா ஓடிவந்து
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் பகட்டுப் பேரழகில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

அண்டப் பெருவெளியில் அயராத ராட்டினத்தில்
இங்கும் அங்குமாய் இமை கழித்த விழிகளோடு
தேடினேன் தேடினேன்

சில்லென்ற மேனியதிரச் சுற்றிவரும் தித்திப்பாக
செய்வாய்க் கோள் வந்து
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் புதிரான விளையாட்டில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

தேடினேன் தேடினேன்
அண்டவெளி எங்கிலும் அக்கினியாய்த் தேடினேன்
அகப்படா நிலையிலென்
ஆழுயிர்த் துடித்தே வாடினேன்

அத்தனைக் காற்றும் ஓய்ந்தே போனதோ
அத்தனை ஓசையும் ஒடுங்கியே போனதோ
அத்தனை ஒளியும் ஒழிந்தே போனதோ
நம்பிக்கை யாவும் நஞ்சுக்குழி விழுந்து
சுட்ட பிணங்களாகின

தேடித் தவித்த விழிகள்
இமைச் சுமை தாண்டி இதயச் சுமை தாண்டி
உயிர்ச் சுமையாகி உதிர்ந்து உடைந்தன

தேடும் தவம் துறந்து தேடா வரம் பெற்று
ஊனமுற்ற நாட்களுக்குள் உயிர்ப்பளு ஏற்றிக்கொண்டு
விந்தி விந்தி நடக்கையிலே

கிழிந்த விழிகளை மூடிக்கிடக்கும்
என் நைந்த இமைகளின் மேல்
ஒரு துளி உப்புக் கண்ணீர்

அடடா
என் கண்களுக்குள் நீர் வற்றித்தான்
நெடுநாட்கள் நகர்ந்துவிட்டனவே
இதென்ன இது உள்ளிருந்து வாராமல்
வெளியிலிருந்து விழிநீர்
அதுவும்
உள்விழி நீரின் அதே அடர்வு உப்போடு

யார் உகுக்கும்
கருணை நீர் இது

ஒரு பூர்வ ஜென்ம வாசனை
என் நாசிக் குகைக்குள் நர்த்தனம் ஆடுகிறது
நான் பிறந்த போதே இழந்துவிட்ட
என் பிறப்பு வாசனையல்லவா இது

ஓர் இளஞ்சூட்டு ஈரம்
என் இதழ்தொட்டு மூடுகிறது
அப்பப்பா காயங்கள் காயங்களோடு
ரணங்கள் ரணங்களோடு ரகசிய ஒத்தடங்கள்
படபடப்பாய்ச் சிறகடிக்கின்றன

காதுகளில் ஒரு கானம்
இதுவரை இசைக்கப்படாத
எனக்கான தாலாட்டாகத் தழுவுகிறது
உணர்வுக்குள் உணர்வுகள் உட்கார்ந்து
உரையாடுகின்றன
உயிருக்குள் உயிர்கள் எழுந்து
ஓடிவிளையாடுகின்றன
நானென்ன கனவு காண்கிறேனா

ஏக்க விழிகளுக்குக் கிடைக்கும்
செங்கோலும் சிம்மாசனமும்
கனவுகள்தானே

படக்கென
இமைகள் வெடிக்கிறேன் நான்
ஓ நீதான் நீதான்
அது நீயேதான் என்கிறேன்
உயிருக்குள் மௌனித்துக்கிடந்த
உள்ளுயிர்க் குரலில்

ம்ம்ம்..
நான் தேடியபோதெல்லாம் வராமல்
தேடாதபோது ஏன் வந்தாய் என்றேன்

'தேடிக்கொண்டிருந்தேன்' என்ற பதில்
எனக்குள் இன்னொரு ஜென்மத்தைப்
பொசுக்கென்று விதைத்தது

(மனதுக்கே ஜென்மங்கள் உடலுக்கல்ல)

அன்புடன் புகாரி

அறப்போரில் எழுவோம்

உச்சிச் சூரியன்மீது எறியப்படும்
பச்சையிலைப் பனித்துளிகளாய்
நிமிடங்கள்தோறும் உயிர்கள்
அழிந்ததும் அழியப்போவதும்
அழிந்துகொண்டிருப்பதும்
குருதி நிறைத்து மிதக்கும் கண்களில்
அப்பட்டமாய்த் தெரிந்தும்

செய்வதேதும் அறியாமல்
செய்வதற்கேதும் சிக்காமல்
ஈனக் கதறல்களை மட்டுமே
ஓங்கி உயிர்கிழித்துச்
செய்ய முடிந்தது

நரக எரிமலைக் குழம்புகளால்
பறித்துச் செல்லப்படும்
கால்களுமற்ற எறும்புகளாய்
அப்பாவி உயிர்களங்கே
எப்படியெல்லாம் எரிந்தெரிந்து
துடிதுடித்துச் செத்திருக்கும்

அப்பப்பா அக்கொடுமை
எவ்வொரு நொடிப்பொழுதும்
இனி எமக்கும் எவருக்கும்
வேண்டவே வேண்டாம்

திண்மை நெஞ்சோடும்
தொய்வழித்த நடையோடும்
உயிர்த்தீ உயர்த்திப் பிடித்துப்
போராடுவோம்

உரிமைகளை
உள்ளங்கைகளில் பெறுவோம்
உயிர்களைப்
பொத்திப்பொத்திக் காப்போம்

ஆயுதப்போரழிப்போம்
உயிர்களே
அறப்போரில் எழுவோம்

மனிதத்தையும்
மனித உயிர்களையும் தாண்டி
போற்றுதலுக்குரியதென்றோ
புனிதமானதென்றோ
பிரபஞ்சத்தில் வேறேதும்
இல்லை இல்லை இல்லவே இல்லை

அழிவில் வாழ்வா


கலவரம்
அது இங்கே தினம் வரும்

அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா
திடீர்த் துவேசம் உன்னைத்
துண்டாடித் துண்டாடி
வெறியின் பசிக்குத் தீனியாக்கிவிட்டதா

முதலில் என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நான் நீட்டுகின்றேன்

இது ஓரிரு நிமிடங்களில்
காய்ந்துபோகும் ஈர ஒத்தடம்தான்
இதனால் உன் உயிருக்குள்
கொதி கொதித்துக் குமுறும் நெருப்பு ஊற்றுகள்
நிச்சயமாய் நிற்கப்போவதில்லைதான்

ஆகையினாலேயே
நிரந்தர நிவாரணத்தின் விடியல் கீற்றாய்
இந்தக் கவிதை உருவாக வேண்டும்
என்ற உயிர்த் தவிப்போடு
என் வார்த்தைகளை உருக்கி உருக்கி
உன்முன் வார்க்கிறேன்

நீயோ -
இன்றைய வெறிச் சூறாவளியில்
வெற்றிகண்ட இனத்தின்
துவம்ச வதைகளால் குதறப்பட்ட
தளிர்க்கொடியாய் இருக்கலாம்

அல்லது -
தோல்விகண்ட இனம் துவைத்துக் கிழித்து
துயரக் கொடியில் தொங்கவிட்ட
நைந்த ஆடையாய் இருக்கலாம்

நீ யாராய் இருந்தாலும்
என் கரிசனம் மட்டும்
உனக்கு ஒன்றுதான் சகோதரா

இன்று நான்
உனக்குச் சொல்லும் சேதியை
உன் மூளையின் மத்தியில்
ஓர் சுடராக ஏற்றிப்பார்

இங்கே
கண்ணீரை முந்திக்கொண்டோடும்
உன் இரத்த அருவியை
நாளை அங்கே ஓடும்
மரண காட்டாறாய் மாற்றிவிட
நீ குறிவைத்து வெறிகொள்வதில்
நிச்சயம் நியாயம் இருக்கிறதுதான்

தன்மானமென்பது கடைப்பொருளல்ல
அது உன் உயிர்ப் பொருள்தான்
உன்னத உணர்வுகளின் கருப்பொருள்தான்

கருகிக் குவிந்து கிடக்கும்
கணக்கற்ற சடலங்கள்
உன் சுற்றமும் நட்புமல்லவா
நொறுங்கி நீராகிக் கிடப்பது
உன் உடலும் உள்ளமுமல்லவா

ஆயினும்
என் அன்புச் சகோதரா
உன்னிடம் எனக்கொரு கேள்வியுண்டு

உன் நிதான நிமிடங்களின்
நிழல்மடி அமர்ந்து
எனக்கொரு பதிலைச் சொல்

வெற்றி என்பது என்ன சகோதரா

முட்டாள் கரமெடுத்து
மூர்க்க அரிவாள் வீச்சில்
மூடத் தலைகளை
முடிவற்று வெட்டிச் சாய்ப்பதா

இல்லை சகோதரா
இல்லை

தலைகள் எடுப்பதால்
உன் தலையும் ஓர் நாள்
குறி வைக்கப்படுகிறது
என்பதை நீ மறக்கலாமா

இன்று தப்பலாம் உன் தலை
அது என்றும் தப்புமா சகோதரா

இன்றும் கூட
உன் தலைக்குப் பதிலாய்
இங்கே உருண்டோடிய உன்
இனத்தின் தலைகள்தாம் எத்தனை எத்தனை

வாழ்வில்
அழிவு வரும்தான்
ஆனால் -
அழிவில் வாழ்வு வருமா

சரித்திரம் பார் சகோதரா
வந்தபின் ஒத்தடம் அறிவீனமல்லவா
வருமுன் வேரறுப்பதே வெற்றியல்லவா

ஒருமுறை
அந்த இரத்தக் காட்டேறி
நம்மை நசுக்கி அரைத்து
நகைப்புக் காட்டி நகர்ந்துபோய்விட்டது
மீண்டும் அதையே வரவேற்று நீ
சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா

என்னருமைச் சகோதரா
இனி நீ செய்யச் சிந்திக்கவேண்டிய
காரியமென்ன தெரியுமா

மூட வெறியர்களின் மூர்க்க வேட்டுகள்
முற்றும் துளைக்காத கேடயமாய்
உன்னை நீ உருவாக்கு

கையரிவாள்களை
கண்தொடா குழிக்குள் கடாசிவிட்டு
உன் மனோ பலத்துடன் மீண்டு வா

எது கேடயம் என்று நீ கேட்டுத் தவிப்பது
எனக்குத் கேட்கிறது சகோதரா

கேள்

பொருளாதார மேன்மை
மனோதிடச் செல்வம்
பேரறிவுப் பெருநெருப்பு

இவையே
எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத
பூரண அரண்கள் உனக்கு

அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக் கேடயங்களல்லவா உனக்கு வேண்டும்

எந்த நாய் நரியும் உன்
அழுக்கையும் தொடத் துணியாத
உயர் நிலையை உன் உள்மூச்சடக்கித்
தவமிருந்து உனதாக்கு

வெட்டிக் கொண்டு சாவதை
வீர மரணம் என்று
முட்டாள் கோஷம் போடாதே

ஒப்புகிறேன்
வீடு புகுந்து நம் பெண்களின்
முந்தானை இழுக்கும் மூர்க்கக் கரங்களை
முழுதாய்க் கொய்வது முறையான செயல்தான்
சகோதரா

அதில் மரணம்
உன் மண்ணின் பெருமைக்கும்
தன்மான உணர்வுக்கும்
மனிதகுல இனத்திற்கும்
மகத்தான தொண்டுதான்

ஆனால்
நடந்து முடிந்த களத்தில்
வீரம் கொள்வதென்பது
இனி வரும் சந்ததிப் பெண்களின்
முந்தானையையும் இழுக்கக் கொடுக்க
இன்றே கையப்பமிடும் சாசனமல்லவா

'வெட்டு' என்பது
என்றும் விட்டுப் போகும் விசயமா
வெட்டாமையே பேரறிவல்லவா

சாவதா வாழ்க்கை
வாழ்வதன்றோ வாழ்க்கை

வீசியெறிந்த விதை
விழுந்த இடம் முளைக்கும்
வெட்டிச் சரிந்த கிளை
தரை தொட்டதும் துளிர்க்கும்
உலகின் உயிர்கள் வாழ்வதற்கே
அதை உணர்த்தும் இயற்கையை
உற்றுப்பார் சகோதரா

வெறியரின் தலைகளை வெட்டிச் சாய்ப்பது
உனக்கு வெற்றியா தோல்வியா

தொடரும் அழிவுகள் என்பது
எக்காலத்தும் எவர்க்கும்
தோல்விதானே சகோதரா

அன்று
அணுகுண்டால் அழிந்தது ஜப்பான்
இன்றோ அது தன் உழைப்பின் வெற்றியோடும்
பொருள்வளப் பெருக்கோடும்
அறிவுச் சுடர் ஏற்றி உள்ளத் திண்மை பூட்டி
உலகை வென்றே உலா வருகிறதே
அந்தப் பேரெழில் கண்டாயா

அதுவன்றோ வெற்றி
அதுவன்றோ வீரம்
அதுவன்றோ வாழ்வு

மீண்டும் ஓர்
அணுகுண்டுப் போரென்று
அடிபட்ட ஜப்பானும் தாழ்ந்து போனால்
புல்லும் பூண்டும் கூட எங்கும் மிஞ்சுமோ

என் அன்புச் சகோதரா
இரத்தப் பாளமான உன் நெற்றியை
அறிவென்னும் நெருப்புக் கோடுகள்
அழுத்தமாய்ப் பதிய
சுருக்கிச் சுருக்கிச் சிந்தித்துப் பார்

இன்றின் அவலம் மற
மூட வெறிக்கு முக்கியத்துவம் தராதே

நாளையேனும்
நல்வாழ்வு என்னும் நெடிய சுகம் தேடி
உன் நெஞ்சோடு போராடு
நல்ல விடையோடு எழு

வாழ்க்கை ஒருமுறைதான்
அதை மூடருடன் முட்டிக்கொண்டு
முடித்துக்கொள்ளல் அறிவீனம்

காயங்களைச் செப்பனிட்டு
உன் கேடயங்களைத் தேடு

அந்த அறிவு வெளிச்சம்
உனக்குள் பட்டுத் தெறிக்க
சின்னதாய் ஒரு தீ மொட்டையேனும்
பூக்கவைத்தால் மட்டுமே

இது ஒரு கவிதை
சகோதரா

கல்லெறிதல்

காய்த்த மரம்தான்
கல்லடிபடும்

கற்களுக்கு
வலிப்பதும் இல்லை
ஆனால்
அடிபட்டும்
புன்னகைப்பதேன்
கனிகள்

என்னை
உண்டாவது
அறிவு பெற்றுக்கொள்
என்ற ஞானத்தாலா

அல்லது
என் காயங்களில்
இருப்பவை
உன் முகவரிகள்தான்
என்ற ஏளனத்தாலா

எது
எப்படியாயினும்
காலைத்தூக்கும் நாய்க்கு
முட்டிக்கொண்டு நிற்கும்
உபாதைதான் முக்கியமாகிறது

மைல் கல்லா
மையல் சிற்பமா
என்பதல்ல

காலம்
நிதானமாய்ப் பொழியும்
நியாய மழைத் துளிகளால்
சிற்பம் கழுவப்படும்தான்

ஆனாலும்
அந்தக் கவலையெல்லாம்
இல்லையே நாய்களுக்கு

வாழ்க்கை அகதி

கடல் கண்டுகொள்ளாத
அலை நான்
மேகத்தில்
ஏறிக்கொண்டேன்

மேகம் மறுதலித்த
மழைத்துளி நான்
நிலத்தின்
மடி வீழ்ந்தேன்

நிலம் நிராகரித்த
நீர் நான்
காற்றில்
தொற்றிக்கொண்டேன்

வீசும் காற்றுடன்
அலைந்தேன்
திரிந்தேன்

காட்டு மரம் ஒன்றில்
கருங்கல் பாறை ஒன்றில்
மூங்கில் கிளைகளில்

பேய் உறங்கும்
பழைய மாளிகைச்
சுவற்றில்

கொடிக்கம்பு
நுனியில்

பாய் மரத்தின்
விளிம்பில்

வேப்பமர
இலையில்

குஞ்சுகள் வெளியேறிய
அனாதைக் கூட்டில்

துருவேறிய
கம்பிகளில்

கொம்பில் விழுந்த
பறவையின் எச்சத்தில்

ஒட்டிக்கிடக்கின்றன
என் இரத்தத் திசுக்கள்

புரியாத கவிதைகள்


உள்ளேறி உசுப்பும்
உன்னதங்களை
ஊரேறி உரைக்கும்
உள்ளுரமுமின்றி

சொல்லேறிச் சுடரும்
சுயவானம் வரையாது
எழுத்தாணி மூடும்
நிம்மதியுமின்றி

சுற்றிச் சுற்றியே
தொடுதூரப் புள்ளிகளை
வெற்று
வட்டமடிக்கிறார்

புள்ளியும் சிக்காமல்
வட்டமும் வசப்படாமல்
புதிர்புதிராய் நிறைகின்றன
புரியாத கவிதைகள்

நட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு மிக முக்கியமானதுதான்.
இருவரும் ஒன்றாகவே நட்பு பாராட்டுகிறார்கள்

ஆனால் காதல் என்று வந்துவிட்டால்
நட்பு ஒருபடியாவது கீழே இறங்கிவிடுகிறது
ஏனெனில் காதலின் நெருக்கம் மனம் + உடல்
இரண்டையும் ஆட்சி செய்கிறது
தனக்கே என்பதில் அதிக சுயநலமானது

கல்யாணம் என்று வந்துவிட்டால்
காதல் சில படிகள் கீழே இறங்கிவிடுகிறது
என்பது நடைமுறை உண்மை
உரிமைகளும் பொறுப்புகளும் வந்ததும்
காதல் வெளிக்காட்ட நேரமின்றி தடுமாறுகிறது
உடல்கள் பழகியபின் ஈர்ப்பில் அலட்சியம் புகுந்து
அதிகாரங்கள் உயர்ந்து காதல் காயப்படுகிறது
ஆனாலும் உண்மையான வேர்க்காதல்
உள்ளே ஒளிந்துகொண்டுதான் இருக்கும்

குழந்தைகள் என்று வந்துவிட்டால்
ஆண்களின் காதல் மனைவியிடம் அப்படியே இருக்கும்
ஆனால் பெண்ணின் காதல் பிள்ளைகளுக்கு மாறிவிடும்
அதுதான் பெண்ணின் படைப்பு
பெண் அப்படிப் படைக்கப்படவில்லை என்றால்
இனவிருத்தி உயிரின பெருக்கும் எல்லாம்
இல்லாமல் அழிந்துபோகும்


*

நட்பு முதலாக

ஆண் பெண் நட்பு
24-7 திறந்துகிடக்கும் சொர்க்க வாசல்
நட்பு நாடும் ஈர்ப்பில்
இருவருமே இமயங்கள்
காதலென மாறின் நட்பு
ஒருபடியேனும் கீழிறங்கும்

மனம் + உடல் என்ற
இரு பெரும் வாழ்வுச் சக்திகளை
தனதாட்சிக்குள் கவர்ந்து
தனக்கே தனக்கென்பதில்
சுயநலம் மிகுத்து
பேருறுதிகொள்வது காதல்

கல்யாணம் என்றாகிவிட்டாலோ
சன்னமாய்ச் சில படிகள்
கீழிறகிப் போய்விடுவதே
காதல்

உரிமைகள் பொறுப்புகள்
பழகியபின் வரும்
உடல் ஈர்ப்பு அலட்சியங்கள்
தொடரும் மனவெளி வெறுமைகள்
அதிகார உயர்வால் காதல் காயங்கள்
என்று துரிதகதியில் நீர்த்துப்போனாலும்
உண்மை வேர்க்காதல்
உள்ளின் உள்ளே ஒளிந்தே கிடக்கும்

குழந்தைகளென்று
உறவுவான் விரிந்துவிட்டால்
ஆண் காதல் பெண்ணிடம்
அப்படியே அப்பிக்கிடந்தும்
பெண் காதல் பிள்ளைகளுக்கென்று
புலம்பெயர்வதைத் தடுப்பதற்கில்லை

அவ்வண்ணமாய்ப் பெண்
படைக்கப்படவில்லையெனில்
இனவிருத்தி உயிர்ப்பெருக்கம்
என்பவையாவும் கழிந்து
பிரபஞ்சம் உடைந்தழியும்

ஆண்பெண் நட்பு - காதல்

ஆண்பெண் நட்பு - காதல்

உண்மையான நட்புக்கும் உண்மையான காதலுக்கும்
இடையில் எந்த வித்தியாசமும் இல்லை
ஒன்றே ஒன்றைத்தவிர...

உடல் காரணமாக வரும் சலனங்களையும் உணர்வுகளையும்
வரவிடாமல் தடுத்துக்கொள்ளப் பார்க்கும் நட்பு
தங்களை மீறிவரும் உணர்வுகளையும் சலனங்களையும்
உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு நாகரிகமாக பழகும் நட்பு

காதல் அப்படிச் செய்யாமல் அப்படியான
உணர்வுகளைத் தூண்டிவிட்டுக்கொள்ளும்
அதுதானே காதலுக்கான தீனி

அதோடு நட்பிலும் காதலிலும் தனக்கே நெருக்கம் வேண்டும்
என்ற சுயநலம் இருந்தாலும் காதலில் அது பலமடங்கு அதிகம்

*

திருமணத்திற்குப்பின் ஆண் பெண் நட்பு திருமணத்திற்கு முன்பு இருந்ததுபோல் இருக்க முடியாது.

அதாவது முன்பு தொட்டுப் பேசியவர்கள் இப்போது தொடுவதில்லை
முன்பு கட்டியணைத்தவர்கள் இப்போது கட்டியணைக்க மாட்டார்கள்
முன்பு தனியறையில் ஒன்றாக தங்கியவர்கள் இப்போது மாட்டார்கள்

திருமணம் அல்லது காதல் ஆண்பெண் தொட்டுப்பழகும் நட்பை பிரித்துவிடுகிறது.

அதாவது ஆண் பெண் நட்பு திருமணம் அல்லது காதலுக்குப்பின்
வேறு ஒரு புதிய நிலையை அடைந்துவிடுகிறது. மனதோடு மட்டும்
அல்லது சந்திக்கும்போது உரையாடுவது அல்லது நல்லது கெட்டதற்கு
சில நண்பர்களை மட்டும் அழைப்பது என்பதோடு நின்றுவிடுகிறது.

என்றால், ஆண்-பெண் இடையிலான காதல் என்றால் என்ன நட்பு என்றால் என்ன?

தனக்கென ஒரு காதல் அல்லது கல்யாணம் அமையும்வரை
ஒத்திகை பார்த்துக்கொள்வதா ஆண் பெண் நட்பு?

தனக்கென ஒரு காதல் அல்லது கல்யாணம் அமையும்வரை
தேடுதல் நடத்திக்கொள்வதா ஆண் பெண் நட்பு?

அப்படித்தான் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில்
நடக்கின்றன. அதுதான் இன்று ஊருக்கும் வந்துவிட்டது

*

நட்பு காதல் கணவன்

நட்பைவிட காதல் ஒருபடியேனும் அதிக நெருக்கம் தரும். ஏதோ புரிந்துணர்வில் இடறல் இருப்பதுபோல் தெரிகிறது. காதலன் வந்து சமாதானம் சொல்லும்போது அந்த ஊடல் வெடிப்பில் அணைப்பூ பூக்குமே அது வரம்.

காதல் கல்யாணத்தில் முடிந்தபின் அன்பின் அபரிமிதமான எதிர்பார்ப்பால் மீண்டும் விரிசல் வருவது சகஜம். ஆனால் ஒரு நாள் சூழல் சரியாக அமையும்போது, காதலனைப்போலவே கணவனின் அக்கறையும் பாசம் அன்பும் வெளிப்படும்.

உரிமை என்று ஆனதும் பலரும் மெத்தனமாய் இருந்துவிடுவது இயல்பு. கிணற்று நீருக்கும் ஆற்று நீருக்கும் உள்ள வித்தியாசம்.

ஆற்றுநீர் நம்நீரல்ல பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஓடிப்போய்விடும். கிணற்றுநீர் சலனமற்றுக்கிடந்தாலும் நம் முகத்தையே பிரதிபளிக்கும்.