பெண்ணுரிமை

குளிரும்போது
பாதம் தேடி ஓடும்
நீர்தான்
கொதித்ததும்
வானம் ஏறுகிறது

9 comments:

சாந்தி said...

எத்தனை அருமையா சொன்னீங்க...சில வரியில்..

குளிர்வித்தால் அவள் அன்பானவள். கொதித்தால் வம்பானவள்னு..

கிரிஜா மணாளன் said...

"நாம் களிப்பூட்டும்போது, நம் 'பாதங்களிலேயே' விழுந்துகிடக்கும் ஒரு
பெண்ணானவள், கோபப்பட்டுக் கொதித்தெழும் வேளையில் 'வானத்தின் உச்சி'க்கே
போய்விடுகிறாள்!"
.........என்று இதற்குப் பொருள்கொண்டேன் தலைவரே!

சரியா?

- கி.ம.

Unknown said...

நீங்க சொன்னா தப்பாகுமா கி ம சார்

ஒரு கவிதை முடிந்தபின் நாம் மேலும் சிந்திக்கக்கூடியதாய் இருப்பது நலம் என்பார்கள்.

கொதித்து வானம் ஏறினாலும், நம் மீது மழையாய்ப் பொழிய ஒரு குளிர் வருடலுக்காக காத்திருக்கிறாள் பெண்.

அன்புடன் புகாரி

பூங்குழலி said...

கொதித்து வானம் ஏறினாலும், நம் மீது மழையாய்ப் பொழிய ஒரு குளிர் வருடலுக்காக காத்திருக்கிறாள் பெண்.

அழகான பின்னுரை

சீனா said...

அன்பின் புகாரி

கவிதையும் - கி.மவின் கருத்தும் அதற்குப் புகாரியின் பதிலும் - கவிஞர்களிடம் சொல்லாடி செயிக்க முடியாது எனபதைக் காட்டுகிறது.

அனைத்துமே அருமை அருமை - மிகவும் ரசித்தேன்

நட்புடன் ..... சீனா

சக்தி said...

அன்பின் புகாரி,

அற்புதமான ஒரு கருத்தைச் சுருக்கமாய் செவ்வனச் சொல்லியிருக்கிறீர்கள்

அன்புடன்
சக்தி

சக்தி said...

அன்பின் புகாரி,

அற்புதமான ஒரு கருத்தைச் சுருக்கமாய் செவ்வனச் சொல்லியிருக்கிறீர்கள்

அன்புடன்
சக்தி

துரை said...

அருமை ஆசான் ,


பெண்ணின் பன்முகத் தன்மை
பளீரென வெளிப்படுகிறது
பத்தே வார்த்தைகளில் !

விஷ்ணு said...

அன்பின் புகாரி ..
நல்ல கவிதை ....ஆழ்ந்த கருத்துடன் ...

அன்புடன்
விஷ்ணு