எல்லாவற்றுக்கும் பொதுவான கடவுள்

பிரபஞ்சத்தின் புரிதல்களோடு இறைவன் பற்றிய அறிதல்கள்


1. இறைவன் என்பவன் ஒருவன்தான் - பிரபஞ்சம் என்பதும் ஒன்றே ஒன்றுதான்

2. பிரபஞ்சம்தான் இறைவன் - இறைவன்தான் பிரபஞ்சம்

3. பிரபஞ்சம் எல்லாவற்றையும்விட பெரியது - இறைவன் எல்லாவற்றையும்விட பெரியவன்.

3. பிரபஞ்சம் எல்லை இல்லாதது - இறைவன் எல்லையற்றவன்

4. பிரபஞ்சம் தொடக்கமும் முடிவும் அற்றது - இறைவன் தொடக்கமும் முடிவும் அற்றவன்

5. பிரபஞ்சம் இணையென்று தனக்கு ஏதும் இல்லாதது - இறைவன் இணையென்று தனக்கு ஏதும் இல்லாதவன்

6. பிரபஞ்சத்தின் வெளித்தோற்றத்தைக் காணமுடியாது. அது கற்பனைக்கும் எட்டாத பிரமாண்டம்.

7. பிரபஞ்சத்தின் உள் தோற்றத்தை காணமுடியும். ஆனால் காணவேண்டியது இன்னும் ஏராளம் உண்டு.

8. பிரபஞ்சம் உருவமும் அருவமும் கொண்ட கலவை.

9. பிரபஞ்சம் சக்தியாலும் பொருளாலும் ஆனது. இறைவன் சக்தி + பொருள் இரண்டையும் கொண்டவன்.

10. பிரபஞ்சத்துக்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. அது அஃறிணையும் அல்ல. இவை மூன்றையும் உள்ளடக்கிய ஒன்று. அப்படியே இறைவனும்.

11. பிரபஞ்சத்துக்கு உயிர் உண்டு - இறைவனுக்கும்

12. பிரபஞ்சம் எப்போதும் இயக்கத்திலேயே இருக்கிறது - இறைவனும்

13. கல் மண் நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் புல் பூண்டு பூச்சிகள் விலங்குகள் மனிதர்கள் இருட்டு வெளிச்சம் வெளி வெற்று அசைவுகள் ஆக்கங்கள் செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் கொண்டது பிரபஞ்சம் அதாவது இறைவன்.

14. மஞ்சள் கரு மட்டும் தனியே எப்படி முட்டை ஆகாதோ, வெள்ளைக்கரு மட்டும் தனியே எப்படி முட்டையாகாதோ அதே போல பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களோ செயல்களோ இறைவன் ஆகாது. ஒன்றையும் விட்டுவிடாத அனைத்தையும் சேர்ந்த ஒரே மகா சக்தியும் செயலுமே இறைவன்.

14. பிரபஞ்சத்துக்கு தனியே ஒரு நிறம் தனியே ஒரு குணம் என்று தனியே ஒரு பால் (ஆண் பெண் அலி அது) என்றெல்லாம் கிடையாது. அனைத்து நிறங்களையும் அனைத்து குணங்களையும் அனைத்து ஆண் பெண் அது என்ற அனைத்தையும் கொண்டது.

15. பிரபஞ்சம் எப்படி படைக்கப்பட்டது என்பதை அறிய முடியாது

16. பிரபஞ்சம் ஓர் ஒழுங்கில் இயங்கிக்கொண்டிருக்கும் உயிர் மற்றும் உயிரல்லாத பொருள் + சக்தி

17. பிரபஞ்சம் தீராத கேள்விகளை என்றென்றும் கொண்டதாய் இருக்கிறது

18. பிரபஞ்சத்தின் காலம் தொடக்கமும் முடிவும் அற்றது

19. பிரபஞ்சத்தில் அனைத்தும் மாற்றங்களையே அடைகின்றன. எதுவுமே அழிவதில்லை.

20. பிரபஞ்சத்தில் மிகச் சிறியதும் மிகப்பெரியதும் பிரபஞ்சமே அதை கற்பனையால் மட்டுமே அனுமானித்துக்கொள்லுதல் வேண்டும்

3 comments:

மதுவர்மன் said...

இதென்ன கொடுமை சரவணா?

கற்பனைக்கு ஒரு அளவேயில்லையா?

ந.நாகராஜன் said...

> 1. கடவுள் என்பது ஒன்றே ஒன்றுதான் - பிரபஞ்சம் என்பதும் ஒன்றே ஒன்றுதான்
>
> 2. பிரபஞ்சம்தான் கடவுள் - கடவுள்தான் பிரபஞ்சம்


அருமையான் தொடர், ஆழ ஊன்றிப் படிக்க வேண்டியது, ஆரம்பமே அசத்தல், அத்வைத
மகா வாக்கியங்கள், வாழ்த்துக்கள் புகாரி, தொடருங்கள், யாமும் பின்
தொடர்வோம்

பிரபஞ்சம் வேறு கடவுள் வேறு என்ற துவைத பாவமே
மற்றெல்லா பேதங்களுக்கும் மூல காரணம்

பிரம்மமே பிரபஞ்சமாய் விரிந்த உண்மையை
பிரக்ஞை மறந்ததாலே பேதம்


> 3. பிரபஞ்சம் எல்லாவற்றையும்விட பெரியது அதாவது கடவுள் எல்லாவற்றையும்விட
> பெரியவன்.


ஆம், பிரபஞ்சம் புலப்படாக் கடவுளின் பிரம்மாண்டமான வெளிப்பாடு,
ஒவ்வொன்றும் பிரபஞ்சக் களனில் நடமாடும் கடவுளின் துகள், துகள்
ஒவ்வொன்றிலும் பெரிய கடவுள் அடக்கம், எனவே நாம் துகள் ஒவ்வொன்றையும் பேத
பாவம் இன்றி அப்பெரிய கடவுளாகவே பார்க்க வேண்டும்

பெரிய கடவுள் யாவிலும் அடக்கம்
புரிந்தால் விரியும் நேசம்

நேரங் கிடைக்கும் போது என் கருத்துக்களை வைக்கிறேன் புகாரி

அன்புடன்
நான் நாகரா(ந. நாகராஜன்)

mohamedali jinnah said...

வாழ்த்துகின்றேன் இன்னும் மென்மேலும் நல்ல ஆன்மீக கவிதைகளை நலமாக படைத்து மனிதர்களுக்கு உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்று புரியவைத்து ஒவ்வொருவரையும் உயர்த்துகின்ற மாபெரும் கடமை