கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

கள்ளக்காதல் என்றதும் சிலர் சதையையே பிரதானமாக வைத்துப் பார்க்கிறார். ஏக்கங்களையும் தனிமையையும் ஈர்ப்பையும் ஆறுதலையும் முன்னிலைப்படுத்திய உறவைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறார்கள்

காமம் நோக்கமில்லை என்றாலும் உயர்வான நட்பும் காதலும்தான் நோக்கம் என்றாலும். கள்ளக்காதல் காமம் கொள்வதை மெல்ல மெல்ல அங்கீகரித்துவிடும். பின் எல்லாம் சரி என்றே ஆகிவிடும். இது இயல்பு.

மனம் கட்டிய துணையுடன் ஒட்டாமல் இன்னொரு இடத்தில் ஒட்ட்ட்ட்டிக்கிடக்கும். காமத்தால் அல்ல, காதலால். இதனால் பாதிப்பில்லை என்கிறார்கள் சிலர். தவறு பெரிய பாதிப்பு இதில்தான் உண்டு. தன் கட்டிய துணையோடு ஒரு நிமிடமும் பேசத் தோன்றாதவராய் இவர்கள் ஆவர். கட்டிய துனையோடு கொள்ளும் உடலுறவையும் வெறுப்பர். சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும்தான் கணவன் மனைவியாய் இருப்பர். தான் நேசிக்கும் துணையுடன் கணவன் மனைவியாகவே இருப்பர். காமம் இல்லாமலேயே இருப்பர். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த மனோநிலை உள்ளவர்கள் காமத்திலும் விழுவர்.

எப்படியானாலும் கள்ளக்காதல் தவறு. அதை எப்படி தடுப்பது. சிலர் சொல்வது விவாகரத்து செய்துவிட்டு விரும்பியவரோடு வாழு என்பது. விவாகரத்து என்பது எல்லா குடும்பங்களிலும் நடக்காது. சமாதானம் செய்வார்கள். மீண்டும் இய்ந்திர வாழ்க்கை. மீண்டும் தேடல் ஏக்கம் மீண்டும் கள்ளக்காதல்தான்.

சிலர் கள்ளக்காதல் என்று தன் காமத்தேவைக்கு கையில் கிடைத்தவர்கலையெல்லாம் அனுபவிப்பது என்று தவறாக நினைத்திருக்கிறார்கள். அதன் பெயர் காசு பெறாமல் நடத்தும் விபச்சாரம். கள்ளக்காதல் என்பது ஒரே ஒருவரிடம் மட்டுமே வரும். அப்படி இல்லாமல் ஊர் மேய்ந்தால், அது விபச்சாரமே!

ஒரே ஒருவரிடம் மட்டும் யாவுமாகி வந்த கள்ளக்காதல் விவாகரத்து செய்துவிட்டு மணப்பதை விரும்புகிறது என்றாலும், அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கலாம், குடும்ப கௌரவம் இருக்கலாம். அவளையும் கட்டிக்கோ என்னையும் வெச்சிக்கோ என்று சில துணைகள் சொல்லலாம். சூழல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் மாறும். பலதாரமணமும் தலை தூக்கும்.

இள வயதில் பல பெண்களோடும் பல ஆண்களோடும் காமம் காதல் நட்பு என்று லூட்டி அடித்துவிட்டால், அது ரத்தத்தில் ஊறிவிடும். பிறகு கல்யாணம் ஆகி சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் அது தலைட்காட்டாமல் இருக்கலாம். ஆனால் ருசி கண்ட பூணை மீண்டும் பால் தேடும்.

கள்ளக்காதல் எல்லோரும் செய்வதில்லை. தன் தாம்பத்தியத்தில் 50 சதம் திருப்தி கொண்டாலே போதும் கள்ளக்காதல் தலை தூக்காது. ஆனால் நிர்கதியற்ற நிலை, தனிமை மண்டிக்கிடக்கும் அவலம், ஏக்கங்களால் ஆன இதயம் என்பன கள்ளக்காதலுக்கான இலகுவான தூண்டில்கள்

கள்ளக்காதல் என்பதும் சின்னவீடு என்பதும் ஒரே பொருள்தான். சின்னவீடு என்பதும் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். பலபேருடன் கொட்டமடிக்கும் இடத்தில் காதலுக்கு வழியே இல்லை. அங்கே காமம் மட்டுமே இருக்கும். அதை கள்ளக்காதல் என்று சொல்லக்கூடாது. விபச்சாரம் என்றே கூறவேண்டும்.

உண்மையான கள்ளக்காதல் பரிதாபத்துக்குரியது. தவிக்கின்ற இதயம் தேடும் வாழ்க்கைதான் அது. கள்ளத்தனம் நோக்கமல்ல. தன் வாழ்வைத் தேடுவதன் நீட்சிதான் அது. எனக்கு நீயே ஆரம்பத்திலேயே துணையாய் வந்திருக்கக்கூடாதா என்று சொல்லாத கள்ளக்காதல் இருக்கவே முடியாது. இருவரோடு வாழவேண்டும் என்பது அவர்களின் நோக்கமே அல்ல. அதைப் புரிந்துகொள்ளாவிட்டால், கண்டபடி சிலபேரைப்போல வேறு வழியற்று கள்ளக்காதலில் சிக்கியவர்களை வசைபாடவே தோன்றும் எவருக்கும்.

எப்படியானாலும் கள்ளக்காதல் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. அதை ஒழிப்பது என்பது நம் வாழ்க்கைத் தரத்தையும் திருமண முறைகளையும் மாற்றாமல் நிகழவே நிகழாது.

14 comments:

பூங்குழலி said...

சிலர் கள்ளக்காதல் என்று தன் காமத்தேவைக்கு கையில் கிடைத்தவர்கலையெல்லாம் அனுபவிப்பது என்று தவறாக நினைத்திருக்கிறார்கள். அதன் பெயர் காசு பெறாமல் நடத்தும் விபச்சாரம். கள்ளக்காதல் என்பது ஒரே ஒருவரிடம் மட்டுமே வரும். அப்படி இல்லாமல் ஊர் மேய்ந்தால், அது விபச்சாரமே!

ரொம்ப சரி புகாரி .

நம் வாழ்க்கைத் தரத்தையும் திருமண முறைகளையும் மாற்றாமல் நிகழவே நிகழாது

முற்றிலும் உண்மை .
ஆனால் உணர்ந்து காதலித்து திருமணம் செய்ததாக சொல்லப் படுபவர்களும் மகிழ்ச்சியாக இல்லையே ?
காதல் என்பது என்ன என்று சரியாக உணரப்படுமானால் .......


(நான் முன்பு படித்த ஒரு கதையை நினைவுபடுத்தியது உங்கள் பதிவு புகாரி ...கணவனின் அன்பை பெற முடியாத ஒரு பெண் ,கனவில் ஒரு கற்பனை கணவனுடன் வாழ்கிறாள் .அவனுக்கு அமர் என்று பேர் சூட்டுகிறாள் .தன் கணவன் இறந்த போது எந்த சடங்குக்கும் உட்படாத அவள் ,அமர் என்ற பெயரில் வரும் ஒரு இரங்கல் அறிவிப்பைப் பார்த்து தன் கற்பனைக் கணவனின் வாழ்வை முடிப்பதாக வரும் கதை )

சாந்தி said...

மிக சரியாக சொன்னீர்கள்... சாவின் விழிம்பிலேயே பலர் இப்படி ஒரு துடுப்பு கிடைத்து தப்பிப்பார்கள் கொடுமையிலிருந்து..அவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள்..


இதையெல்லாம் பார்த்தே இக்கால இளஞர்கள்/இளைஞிகள் பலர் திருமணமே வேண்டாமென்கிறார்கள்...

எங்க வீட்டில் ஒரு இளவரசி இருக்கிறாள் நடிகை போல் மிக அழகோடும் , படிப்போடும் , கை நிறைய சம்பளத்தோடும்... மாப்பிள்ளைகள் பல ரெடி.. பெண் மாட்டேன் என்கிறாள் திருமணத்துக்கே.. காதல் ஏதவாதா ன்னு கேட்டால் ஆண்களையே வெறுக்கிறாள்.. கேட்டால் அவள் தோழியரின் மண வாழ்க்கை அவளை மிக பாதித்துள்ளது...




அதனால் பேருக்கு திருமணம் , படுக்க , பிள்ளை வளர்க்க , சமைக்க மனைவியும் , ஆஸ்திக்கு குழந்தையும் பெற்று வாழ்நாளை ஓட்ட நினைக்கும் ஆண்களும் ,

தன் பொழுதுபோக்குக்காகவும், பேருக்கு குழந்தையும் ( பாலூட்ட கூட மாட்டாள் ) , ஆடம்பரத்துக்காக , பணச்செலவுக்காக திருமணம் செய்யும் பெண்களும் தயவுசெய்து திருமணம் செய்து துணையை , அவர்களின் குடும்பத்தை , உற்றார் உறவுகளை நரகத்தில் தள்ளிவிடாதீர்கள்...

வனம் said...

வணக்கம்

மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்

முதலில் கள்ளக்காதல் எனும் சொற்பதமே தவறு என்பதே என் கருத்து.

இராஜராஜன்

நான் said...

என்னை ஒப்புகொள்ள வைத்த கட்டுரை........உண்மை ,நிதர்சனம் ...

சீனா said...

அன்பின் புகாரி

கள்ளக்காதல் என்ற பெயரே ஒரு வெறுப்பினை ஏற்படுத்துகிறது - இருவர் மனம் ஒப்பி காதல் கொண்டு - மணம் புரியாமல் - சேர்ந்து வாழ்வது என்பது அங்கீகரிக்கப்படாத வாழ்வெனச் சொல்லப்படுகிறது. அதிலும் ஆண்கள் - மணமான ஆண்கள் இது மாதிரி வாழ்வது கொச்சையாக சின்ன வீடு என்றோ வைத்துக் கொள்வது என்றோ வழங்கப்படுகிறது. மணமான ஆண்கள் மட்டும் தான் சமுதாயத்தில் இது மாதிரி இன்னொரு பெண்ணுடனும் வாழுகிறார்கள். மணமான பெண்கள் இன்னொரு ஆணுடன் வாழ்வதாக சரித்திரம் இல்லை.

இப்படியாக இரு பெண்களுடன் சேர்ந்தோ தனித்தனியாகவோ குடும்பம் நடத்தும் ஆண்கள் இருக்கிறார்கள்.

இதனால் பிரச்னை ஒன்றுமில்லை. இரு பெண்களின் இணக்கத்துடன் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்வது ஒரு வகை. இரு வேறுபட்ட குடும்பமாக வாழ்வது மற்றொரு வகை.

மற்றொரு பெண்ணுடன் காமமில்லாத வாழ்க்கை வாழ்வது என்பது அரிது

இக்கட்டுரை என்ன சொல்ல வருகிறது

கள்ளக்காதல் - கள்ளக்கனி - அள்ளச் சுவை எனில் அங்கு காமம் தானே முன்னிலைப் படுத்தப் படுகிறது

நீயே துணையாக வந்திருக்கக் கூடாதா எனச் சொல்லாத கள்ளக் காதல் இருக்கவே முடியாது என்னும் வாதம் ஏற்புடையதாக் இல்லை.

கட்டுரை கள்ளக்காதல் எனச் சொல்லப்படும் காதலை அங்கீகரிக்கிறதா இல்லை தவறெனச் சொல்கிறதா

இறுதியில் கள்ளக்காதல் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றெனக் கூறி - அது வாழ்க்கைத்தரத்தின் மாறுதலாலும் திருமண முறைகளின் மாறுதலாலும் தான் ஒழியும் என முடிப்பது பொருந்தாத வாதம்.

வாழ்க்கைத்தரம் - என்ன மாற்றம் வேண்டும் - இதற்கும் கருப்பொருளுக்கும் தொடர்பே இலலையே

திருமண முறைகள் மாற்றம் - இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு

எனன் விதமான மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்

கட்டுரையின் நோக்கமே புரியவீல்லை புகாரி

நட்புடன் ..... சீனா
-----------------------------

Unknown said...

அன்பின் சீனா,


மணமான ஆண்கள் மட்டும் தான் சமுதாயத்தில் இது மாதிரி இன்னொரு பெண்ணுடனும் வாழுகிறார்கள். மணமான பெண்கள் இன்னொரு ஆணுடன் வாழ்வதாக சரித்திரம் இல்லை.

பெண்களும் கள்ளத் தொடர்பில் வாழ்கிறார்கள் சீனா!


இப்படியாக இரு பெண்களுடன் சேர்ந்தோ தனித்தனியாகவோ குடும்பம் நடத்தும் ஆண்கள் இருக்கிறார்கள்.

இதனால் பிரச்னை ஒன்றுமில்லை. இரு பெண்களின் இணக்கத்துடன் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்வது ஒரு வகை. இரு வேறுபட்ட குடும்பமாக வாழ்வது மற்றொரு வகை.

இது பலதாரமணம். இதையும் ஏற்காதவர்கள் இருக்கிறார்கள்.


மற்றொரு பெண்ணுடன் காமமில்லாத வாழ்க்கை வாழ்வது என்பது அரிது

உண்மைதான். ஆனால் அப்படியான சூழலும் சிலருக்கு வாய்க்கிறது சீனா. இன்று இணையம் என்று ஒன்று இருக்கிறதே. இதில் முகம் தெரியாத காதல்களும் இருக்கின்றன சீனா.



இக்கட்டுரை என்ன சொல்ல வருகிறது

கள்ளக்காதல் - கள்ளக்கனி - அள்ளச் சுவை எனில் அங்கு காமம் தானே முன்னிலைப் படுத்தப் படுகிறது

இல்லை சீனா. காமமும் உண்டு, காதலும் உண்டு என்பதுதான் கட்டுரை வாசித்து முடித்தபின் வரும் கருத்தாக இருக்கும். தலைப்பு ஒரு சுவாரசியத்துக்காகவே. ஒரு திரைப்பாடலின் ஒரு வரிதான் அது.


நீயே துணையாக வந்திருக்கக் கூடாதா எனச் சொல்லாத கள்ளக் காதல் இருக்கவே முடியாது என்னும் வாதம் ஏற்புடையதாக் இல்லை.

அப்படி அல்லலுறுபவர்கள் உலகில் எங்கும் இருக்கிறார்கள் சீனா. அவற்றை அறியாதிருப்பது உங்களின் நல்ல மனதையும் நல்ல வட்டத்தையும் காட்டுகிறது.


கட்டுரை கள்ளக்காதல் எனச் சொல்லப்படும் காதலை அங்கீகரிக்கிறதா இல்லை தவறெனச் சொல்கிறதா

கள்ளக்காதல் எப்படியெல்லாம் வருகிறது என்று சொல்கிறது. அது கூடாது என்றும் சொல்கிறது.



இறுதியில் கள்ளக்காதல் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றெனக் கூறி - அது வாழ்க்கைத்தரத்தின் மாறுதலாலும் திருமண முறைகளின் மாறுதலாலும் தான் ஒழியும் என முடிப்பது பொருந்தாத வாதம்.

வாழ்க்கைத்தரம் - என்ன மாற்றம் வேண்டும் - இதற்கும் கருப்பொருளுக்கும் தொடர்பே இலலையே

காதல் திருமணங்கள் வளரவேண்டும். அந்தக் காதலும் ஓரக்கண்ணால் பார்த்து வருவதாக இருக்கக் கூடாது. நல்ல நட்பிற்குப்பிறகு வரவேண்டும். இதுவே கள்ளக்காதலின் 9 சதவிகிதத்தை அழித்துவிடும்.


திருமண முறைகள் மாற்றம் - இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு

நிச்சயிக்கப்பட்ட மணம் பல பிரச்சினைகளை தம்பதியருக்கிடையில் உருவாக்குகிறது என்பதை பல பட்டிமன்றங்கள் பேசி முடித்துவிட்டனவே சீனா.

--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

Unknown said...

Sorry for writing in English, Your analysis is excellent, however, I would like to read your and othber readers' views and analysis of a woman having two men in HER life; one legally married man, and the other one is a "Chinna Veedu."

I wish that happens soon so that MEN are taught some lessons about their behavior and attitude about woman...

Unknown said...

http://anbudanbuhari.blogspot.com/2008/02/2050.html

இங்கே சென்று பாருங்கள் ThanDaVaalapPudukku. அதென்னங்க பேரு?

Unknown said...

//"http://anbudanbuhari.blogspot.com/2008/02/2050.html இங்கே சென்று பாருங்கள் ThanDaVaalapPudukku.//

Dear Buhari,

Browsed all of them. Excellent work and please do keep it up.

//அதென்னங்க பேரு?//

Yes, quite an unusual name but this is my nickname. Since this nickname was given to me by my wife, I use it... Hope this helps...

Thanks!

Unknown said...

thambathyathil 50% thripthi kidaithal kallakadhal thalai thukkadhu enbathu ennal yerkamudiyavillai..enadhu sondha anubavathinal..thambayathil mattume thripthi padutha nenaikum kanavarhalal velaivadhe indha muraiyatra uravu..masayu parunga...

Anonymous said...

I have adoubt, if a famous people like cini actors have extra marital relation, the news paper never say "kalla kathal" but if ordinary person have extra marital releation then the news paper names it "kalla kathal".

ஈரோடு காக்கா said...

வணக்கம்

கல்யாணத்திற்கும் காதலுக்கும் ஏதவாது சம்மதம் உண்டா?

காதலிதவர் கல்யாணதிற்ப் பிறகு தனது துணயுடன் எவ்வளவு நாள் காதலுடன் இருக்கிரார்?

கல்யாணதிற்கு முன் வந்தால் நல்ல காதல் ? கல்யாணத்திரற்கு பிறகு வருவது நல்ல காதல் இல்லையா?

//கள்ளக்காதல் அங்கீகரிக்கப் படுகிறதா இல்லை தவறெனச் சொல்கிறதா?//

நல்ல காதல் மட்டும் அங்கீகரிக்கிறதா?

//
நிச்சயிக்கப்பட்ட மணம் பல பிரச்சினைகளை தம்பதியருக்கிடையில் உருவாக்குகிறது //

காதல் திருமணத்தில் வரும் பிரச்சினைகளை விட குறைவு.



நல்ல கட்டுரை.

ஈரோடு காக்கா

Anonymous said...

பாதி ஆதரிப்பதுபோன்ற மாயையை எற்படுத்துகிறது உங்கள் எழுத்து,அப்படியல்ல என்பது உங்கள் கருத்து,மிகச்சுலபமான நபி(ஸல்)அவர்களின் சீரிய ஒரு கருத்து என்னவென்றால்:-எந்த தவற்றை நீ விரும்புகிறாயோ அதை உன் குடும்பத்தில் நிகழ அணுமதிப்பாயா? என, தவறை நியாயப்படுத்துகிறவரை கேட்டார்கள்.அதற்கு அவர் நான் அணுமதிக்க மாட்டேன் என்றார். அப்படியானால் ,நீ அந்த தவற்றை செய்ய, அவர்மட்டும் அணுமதிக்கவேண்டும் என்கிறாயே,என உளவியலாக"டச்" பண்ண , என் வாழ்நாள் முழுக்க இத்தவற்றை செய்யமாட்டேன் என்றார்,
கள்ளக்காதல் மட்டுமின்றி பிற எந்த தவறும்"தன்குடும்பம் நன்றாக இருக்கவேண்டும்,பிறகுடும்பம் எப்படியோ போகட்டு எனும் இந்தமனோநிலைதான், முதல் மற்றும் முழு தவறாகும்,

நண்பன் said...

பாதி ஆதரிப்பதுபோன்ற மாயையை எற்படுத்துகிறது உங்கள் எழுத்து,அப்படியல்ல என்பது உங்கள் கருத்து,மிகச்சுலபமான நபி(ஸல்)அவர்களின் சீரிய ஒரு கருத்து என்னவென்றால்:-எந்த தவற்றை நீ விரும்புகிறாயோ அதை உன் குடும்பத்தில் நிகழ அணுமதிப்பாயா? என, தவறை நியாயப்படுத்துகிறவரை கேட்டார்கள்.அதற்கு அவர் நான் அணுமதிக்க மாட்டேன் என்றார். அப்படியானால் ,நீ அந்த தவற்றை செய்ய, அவர்மட்டும் அணுமதிக்கவேண்டும் என்கிறாயே,என உளவியலாக"டச்" பண்ண , என் வாழ்நாள் முழுக்க இத்தவற்றை செய்யமாட்டேன் என்றார்,
கள்ளக்காதல் மட்டுமின்றி பிற எந்த தவறும்"தன்குடும்பம் நன்றாக இருக்கவேண்டும்,பிறகுடும்பம் எப்படியோ போகட்டு எனும் இந்தமனோநிலைதான், முதல் மற்றும் முழு தவறாகும்,