#தமிழ்முஸ்லிம்

ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?

இஸ்லாம் சகோதரத் துவத்தைப் போற்றும் ஒரு மார்க்கம்.

எல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.

அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.

இதில் பாய் எங்கிருந்து வந்தது?

ஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.

விஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.

என்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும்?
’பாய்’ ’பாய்’ என்றா?

இல்லை.

அது தவறாக அழைப்பு.

சரியான அழைப்பு ”சகோ” என்று  இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.

அல்லது அண்ணா தம்பி என்று அழைக்க வேண்டும்.

பிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?

இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.

உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.

பாய் என்று ஒரு தமிழ் முஸ்லிம் அழைக்கத் தேவையில்லை. அப்படி அழைத்தால் அது அவனைத் தமிழைவிட்டு சற்று தூரத்தில் நிறுத்துகிறது.

தமிழ் வட்டத்தில் தமிழ் நாட்டில் சகோ என்று அழைப்பதே சரி.

தமிழரல்லாத இடங்களில் Bro என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். அல்லது சகோ என்றே அழைக்கலாம். காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.

அரபு மண்ணில் அஹூ என்று அழைப்பார்கள். அஹூ என்றாலும் சகோ என்று பொருள்.

இனியாவது இந்த பாய் பாய் என்னும் நோயை விட்டுவிடுங்கள். அதைக் கேட்கும்போது தமிழ்க் காதுகள் சற்றே நெளிகின்றன?

இதில் பாயம்மா என்று அழைப்பது இதனினும் கொடுமை. பாயின் மனைவி பாயம்மாவாம்! மனிதர்கள் எப்படி பிழையாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

பாயம்மா என்றால் சகோதரி என்ற பொருளா அல்லது சகோதரனின் தாய் என்ற பொருளா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம், அதை விட்டொழிப்போம்.

3 comments:

mohamedali jinnah said...

அன்பு சகோதரர் புகாரி அவர்களுக்கு
வாழ்த்துகள்.
மிகவும் அருமையான கட்டுரை தந்துள்ளீர்கள்
எனக்கு யாராவது பாய் என்று அழைத்தால் உண்மையாக வருத்தம் வரும்.அழைப்பவர்களிடம் அன்பாக சொல்லிவிடுவேன் .விளக்கம் கொடுப்பேன் .இது சிறு வயது முதல் நான் கடமையாக பேணி வருவது.
நான் லயோலா கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாற்று மார்க்க நண்பர்கள் ‘ உங்கள் வீட்டில் தமிழ் பேசுவீர்களா? உங்கள் வீட்டில் வெஜிடேரியன் உணவு உண்டா?’ என்று கேட்டவர்களும் உண்டு.
நான் அதற்கு விளக்கம் கொடுப்பேன் . இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் அந்தந்த நாட்டில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அந்த நாட்டு மொழியே அவர்களது தாய் மொழி என்று.
உலக சரித்திரம் படிப்பார்கள் உடன் வாழும் மக்களைப் பற்றி அறியாமல் இருப்பது வேதனை .
இதனைப் பற்றி நான் பெரிய கட்டுரை விளக்கமாக எழுதி எனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.
அன்புடன்

mohamedali jinnah said...

எத்தனையோ வரலாறுகளைப் படிக்கின்றோம். ஆனால் உடன் வாழும் மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயல்வதில்லை. நான் லயோலா கல்லூரியில் படிக்கும் போது ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் "உங்கள் வீட்டில் என்ன மொழி பேசுகிறீர்கள். நீங்கள் வீட்டில் காய் கறி உண்பதுண்டா அல்லது அசைவ உணவு மட்டும்தானா" என்று.இவரின் வினா எனக்கு மிகவும் வியப்பினைத் தந்தது! இது உதாரணத்திற்கு ஒன்று ..! தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வீட்டில் வேறு மொழி பேசுகிறார்கள் என்பது சிலர் நினைப்பதுண்டு.

முஸ்லிம்கள் எல்லா நாட்டிலும் உள்ளனர் .அந்தந்த நாட்டில் உள்ளவர்களுக்கு அந்த நாட்டு மொழிதான் அவர்கள் தாய் மொழி . தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு தமிழ்தான் அவர்கள் தாய் மொழி . ஒரு சிலர் மற்ற மொழி அறிந்திருந்தால் அது அவர்கள் கற்றதனால் அல்லது மற்றவர்களிடம் பேசி பழகியதால் அறிந்திருக்கலாம். முஸ்லிம்கள் ஓதும் குர்ஆன் அரபி மொழியில் உள்ளதால் அதனை படித்து ஓத கற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு அதன் பொருள் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அரபி பேசவும் தெரியாது. இதனைப் படித்து அறிந்தவர்கள் வெகு சிலரே!

அரபு மண்ணில் அஹூ என்று அழைப்பார்கள். அஹூ என்றாலும் சகோ என்றுதான் பொருள்
உடன் வாழும் மக்களின் வாழும் முறைகளை நாம் அறிந்து வாழ்வது சிறப்பாகும்.
ஆங்கிலத்தில் Brother என்று அழைப்பார்கள்

தமிழ் வட்டத்தில் தமிழ் நாட்டில் மரியாதைக்காக அண்ணா,அண்ணன் ,தம்பி இவை அன்பின் அடையாளமாக சகோதரராக நினைத்து அழைப்பது சிறப்பாக இருக்கும் . ‘பாய்’ என்று மாற்று மார்க்க நண்பர்கள் இஸ்லாமியர்களை மட்டும் தமிழ் நாட்டில் அழைப்பது நம்மை அவர்களிடமிருந்து அன்பில் குறையாக்கி தனிமைப் படுத்தி விடுமோ! என்பது என் கருத்து . உறவுகள் நேசமாக யார் எவ்விதம் அழைப்பதை விரும்புகிறார்களோ அவ்விதம் அழைப்பது நல்லது.
உங்கள் கருத்தையும் நான் மதிக்கிறேன்

LKS.Meeran Mohideen said...

அருமையான கட்டுரை....ஆழிய சிந்தனை....பரவட்டும் உங்கள் கருத்துக்கள்..
http://lks-meeran.blogspot.in/2012/04/blog-post_30.html எனது கருத்துகள் பாருங்கள்...