கனடாவின் ஜூலைச் சூரியனே

இரவு தரும் அந்தரங்கத்தில்
நிர்வாணமாய்ச் சுழலும்
பூமியின் பொன்னழகை

வெளிர் மஞ்சள்
விழி விரித்து விழுங்க

அதிகாலை
ஐந்தரைக்கே
வந்துவிடுகிறாய்

போதாதென்று
இரவு ஒன்பதானாலும்
அப்படி ஏன்தான்
விரட்டித் திரிகிறாயோ
விடலைப் பொடியன்கள்
துப்பட்டா விரட்டும்
வீரியத்தோடு


No comments: