இணையப் படைப்பாளிகளுக்கு ஓர் வேண்டுகோள்

இணையத்தில் ஒரு நல்ல கட்டுரையை வாசிக்கத் தொடங்கினேன், நேரமில்லாமல் துரிதமாக வாசிக்க வேண்டிய கட்டாயம் வந்தது.

இது காலைப்பொழுது. அலுவலகம் ஓடுகிறேன். ஆகையால் பிறகு வந்து மீண்டும் வாசிக்கலாம் என்றுதான் கட்டுரையை விட்டுவிட்டுச் செல்ல வேண்டியதாகிறது.

மீண்டும் வாசிக்க வரும்போது ஏதேனும் புதியவை இருக்கும். அதைத் தொடுவேன். பிறகு இது வாசிக்கப்படாமலே போய்விடும். ஏனெனில் எல்லாம் வாசிக்க ஆசை இருந்தும் நேரமே இல்லையே இந்த வட அமெரிக்காவில்?

இந்தக் கட்டுரையின் சாரத்தை தோட்டாக் கருத்துக்களாய் (புல்லட் பாயிண்ட்ஸ்) துவக்கத்திலேயே கொடுத்து இணையத்தில் எழுதுகின்ற வழக்கம் உருவாக வேண்டும்.

ஒரு கட்டுரை சுருக்கமாகவும் முன்பகுதியில் வேண்டும், அதன் பின் மிக விரிவாகவும் வேண்டும்.

இணையத்தில் வந்து கொட்டும் எல்லாவற்றையும் வாசிக்க முடியாது. வாசிக்க வேண்டியவற்றைத் தீர்மாணிப்பதற்கு இந்தத் தோட்டாக் கருத்துக்கள் நிச்சயம் பயன்படும்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல யோசனை நண்பரே