இன்று காலை 2014 07 17


இன்று காலை என்னை ஒரு கவிதை முட்டியது. விடுவதாய் இல்லை என்று முடிவெடுத்தேன்.

வாகனத்தில் அலுவலகம் செல்லும்போது எழுதத் தொடங்கினேன். கண்கள் சாலையைப் பார்க்க விரல்கள் காகிதத்தைப் பார்த்தன.

கோ ரயிலில் ஏறியதும் வசதி பெற்றேன் எழுதுவதற்கு. அப்போதும் கவிதை தீரவில்லை.

அதன்பின் நடந்தேன் கோ-ரத நிறுத்தத்திலிருந்து அலுவலக வளாகம்வரை.

நடக்கும்போதெல்லாம் கிறுக்கியதால், 15 நிமிடத்தில் முடியவேண்டிய நடை முப்பது நி...மிடங்கள் எடுத்தன.

ஒருவழியாய்ப் போதும் என்று நிறுத்திக்கொண்டேன் அலுவலக வாயிலி படிகளில்.

இப்போது அசைபோட்டவண்ணம் எழுதியதை செதுக்கிக்கொண்டிருக்கிறேன் உங்கள் எல்லோருக்கும் படைப்பதற்காக.

காத்திருங்கள் அன்பர்களே, கட்டாயம் வருவேன். இன்றே செதுக்குதல் முடியவேண்டும் என்றில்லை. செதுக்கியவரை சிலை என்று முகநூலில் இடுவதாய் இருக்கிறேன்.

என் கவிதைகளை நேசிக்கும் அனைவருக்கும் என் கோடிப்பொன் நன்றி.

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே