தனித்தமிழா? தனித்துவிடப்பட்ட தமிழா?
மொழி, கவிதை, அன்பு, அறிவு என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்கள்
அதை எந்தத் தமிழனும் மொடி, கவ்டை, ஆன்பே, அடிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. சரியாகத்தான் எழுதுகிறான்.
கிருஷ்ணன், ஜெயபாரதன், ஜான், ஹரிஹரன் என்பதெல்லாம் தனிமனிதனின் பெயர்கள்.
அவை தமிழ்ச்சொற்கள் அல்ல.
ஒருவன் தன் பெயரைவிட அதிகம் இன்னொரு சொல்லை ரசிக்க மாட்டான். அந்தப் பெயரை கொலைசெய்ய எவருக்கும் உரிமை இல்லை.
மொழி இலக்கணம் என்ற எந்தப் போர்வையைப் போற்றிக்கொண்டும் அதைச் செய்ய எவருக்கும் உரிமை இல்லை.
இலக்கியத்திற்கே இலக்கணம்
இலக்கணத்திற்காக இலக்கியம் இல்லை
இலக்கியமே காலங்கள்தோறும் காய்த்துக் கனிந்து கொத்துக் கொத்தாய்ப் பூத்து மொழியைச் செழுமையாக்குவது
மைக்ரோசாஃப்ட், விண்டோஸ், ஹோண்டா, ஹெவ்லட் பாக்கார்ட், பஹ்ரைன் என்பனவெல்லாம் நிறுவனம், மென்பொருள், நாடு போன்றவற்றின் பெயர்கள்.
இவை எதுவுமே தமிழ்ச்சொல் இல்லை.
இதையும் ஒரு கொலைவெறியோடு அனுகுவது நிச்சயமாகத் தமிழ்ப்பற்று இல்லை
என்றால் உண்மையான தமிழ்ப்பற்று என்பது என்ன?
தமிழை வளர்த்தெடுக்கும் வழிகளைக் காண்பதே தமிழ்ப்பற்று.
வீட்டில் தமிழில் உரையாடவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் அழிந்துபோய்விடும்.
இப்படி வீட்டுக்குள் வந்து தமிழ்த்தமிழ் என்று தமிழ் பேசுவோரைக் குறை சொன்னாலும் தமிழ் அழிந்துபோகும்
தமிழனின் கலைகள் எல்லாம் தமிழையே மொழியாகக் கொண்டு வளரவேண்டும்
உலகின் இன்றே தோன்றிய அறிவியல் புரட்சியெல்லாம் அந்த நொடியே தமிழில் மொழியாக்கம் செய்யப்படல் வேண்டும். அப்படியான தொரு மென்பொருள் உருவாக்கத் தமிழன் பாடுபடவேண்டும்
உலகின் அனைத்துக் கலைகளையும் இலக்கியங்களையும் அறிவியல் நுட்பங்களையும் பொருளாதாரப் புரட்சிகளையும் கல்வி ஆவனங்களையும் தமிழுக்குள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.
அதைச் செய்யாமல் வசதியாக அடுத்தவரைக் குறைகூறித் திரிய எளிய வழியான எழுத்தை எடுத்துக்கொண்டு குசுப்பு, கரிகரன், சானு, சாருசு என்றெல்லாம் பேசித்திருவது தமிழை புதைத்துப் புல் முளைக்கச் செய்துவிடும்
தமிழால் எதுவும் முடியும் அது எப்படியும் வளையும் என்று நிறுவ இங்கே எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள், அவர்களே உண்மையான தமிழ்ப்பற்றாளர்கள். மற்றோர் போலிகளே

2 comments:
////இலக்கியத்திற்கே இலக்கணம்

மைக்ரோசாஃப்ட், விண்டோஸ், ஹோண்டா, ஹெவ்லட் பாக்கார்ட், பஹ்ரைன் என்பனவெல்லாம் நிறுவனம், மென்பொருள், நாடு போன்றவற்றின் பெயர்கள். இவை எதுவுமே தமிழ்ச்சொல் இல்லை. இதையும் ஒரு கொலைவெறியோடு அனுகுவது நிச்சயமாகத் தமிழ்ப்பற்று இல்லை
என்றால் உண்மையான தமிழ்ப்பற்று என்பது என்ன?
தமிழை வளர்த்தெடுக்கும் வழிகளைக் காண்பதே தமிழ்ப்பற்று.
வீட்டில் தமிழில் உரையாடவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் அழிந்துபோய்விடும்.
இப்படி வீட்டுக்குள் வந்து தமிழ்த்தமிழ் என்று தமிழ் பேசுவோரைக் குறை சொன்னாலும் தமிழ் அழிந்துபோகும்
தமிழனின் கலைகள் எல்லாம் தமிழையே மொழியாகக் கொண்டு வளரவேண்டும்
உலகின் இன்றே தோன்றிய அறிவியல் புரட்சியெல்லாம் அந்த நொடியே தமிழில் மொழியாக்கம் செய்யப்படல் வேண்டும். அப்படியான தொரு மென்பொருள் உருவாக்கத் தமிழன் பாடுபடவேண்டும்
உலகின் அனைத்துக் கலைகளையும் இலக்கியங்களையும் அறிவியல் நுட்பங்களையும் பொருளாதாரப் புரட்சிகளையும் கல்வி ஆவனங்களையும் தமிழுக்குள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.///
நூற்றுக்கு நூறு மதிப்பெண் அளிக்கிறேன். என் கருத்துக்களும் இவையே.
இக்கருத்துக்களை வலியுறுத்திய உங்களுக்கு என் பாராட்டுகள்.
சி. ஜெயபாரதன்
++++++++++++++++
////இலக்கியத்திற்கே இலக்கணம்
இலக்கணத்திற்காக இலக்கியம் இல்லை////
உண்மை, உண்மை, உண்மை.
இலக்கியம், இலக்கணம் இவற்றில் முதலில் தோன்றியது இலக்கியமே; இலக்கணம் பின்னால்தான் வந்திருக்க வேண்டும்.
முதன்முதலில் இலக்கணம் தோன்றியிருக்க முடியாது.
சி. ஜெயபாரதன்.
Post a Comment