உனக்குள்ளேயே உன் சிறையா, பெண்ணே?

கர்ப்பப் பைதான்
பெண்ணின் வீழ்ச்சியா?

நீ ஆடினால் ஆட்டம்
அவள் ஆடினால் கூட்டமா?

ஒரு புனிதத்தைப்
புற்று நோயாய் மாற்றியது
யார்?

அவளதை
அப்படியே வெட்டியெறியத்
துணிந்துவிட்டால்
மனித இனம்
முற்றாக முடிந்துபோகுமே

தேக
மூர்க்கத்தாலும்
ஆண்களே உருவாக்கிய
சமூகச் சதியாலும்
வேட்டையாடாதீர்கள்
பெண்களை

உயிர்களைப் பெற்று
உயிராய் வளர்த்தெடுக்கும்
உன்னத உயிர்கள்
பெண்கள்

No comments: