அண்ணல் காந்தி
சுட்டுக் கொல்லப்பட்டார்

மறந்தே போன
ஒரு பழைய செய்தி

கட்டிக்காக்கும்
காவலர்கள் சுடப்பட்டு
தெருக்கள்தோறும் ஜோம்பிகளாய்

கண்கள் கட்டப்பட்ட
நீதி தேவதைகள் சுடப்பட்டு
முச்சந்திகளில் சவப்பெட்டிகளாய்

மனிதநேயம் தேடும்
நல்லிணக்கங்கள் சுடப்பட்டு
நட்டநடுவீதிகளில்
உறை ரத்தக் குன்றுகளாய்

மொத்தத்தில்
இந்தியா சுடப்பட்டு
குற்றுயிரும் குறையுயிருமாய்

கேட்டுக் கேட்டுப் பழகிப்போன
செய்திகளால்
எந்தப் புதுச்செய்திகளும்
அதிர்ச்சி அளிப்பதாகவே
இல்லை

இந்தியா வாழ்கிறது
இந்தியர்கள் மாண்டுவிட்டார்கள்No comments: