201405 குர்-ஆன் பாடல்

இஸ்லாமியப் பாடல் - குர்-ஆன் குர்-ஆன்

குர்-ஆன்.... குர்-ஆன்
ஏகனின் அருளே... ஏகனின் அருளே...

குர்-ஆன்.... குர்-ஆன்
ஏகனின் அருளே... ஏகனின் அருளே....

அருள்வழி... திருமொழி....
திருமொழி... அருள்வழி...

இறைவனின் ஒளிவழி
நபிகளின் குரல்வழி
நிறையுதே.....

*

அன்றுமுதல் இன்றுவரை
ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம்
காத்துல போச்சு

நாளும் ஓதுவார்
பொழுதும் ஓதுவார்
நூலில் ஒரு கேள்வி என்றால்
ஓடி ஒதுங்குவார்

யாரும் ஓதவே
ஓதி விளங்கவே
நாயன் குர்-ஆன்
நபிவழியே வந்ததல்லவா 

அன்றுமுதல் இன்றுவரை
ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம்
காத்துல போச்சு

உன் நாவினிலே தவழ்ந்தால்
    வெகு காலம் நெஞ்சில் வாழும்
உன் கண்களிலே நிறைந்தால்
    சிறு உள்ளம் பெரியதாகும்
உன் கருத்தினிலே பதிந்தால்
    இந்த வையம் கையில் அடங்கும்
உன் பெட்டிக்குள்ளே பூட்டியதால்
    பேரருளை இழந்தாய்

அந்த ஏக இறைவன் தந்த
    அருள் வேத நூல் இது
அட இன்று மூடி வைத்தால்
    பின் என்று திறப்பது 
ஒரு பாதை இன்றி பயணம் இன்றி
    எந்த இடத்தைச் சேர்வது

நாளும் ஓதுவார்
பொழுதும் ஓதுவார்
நூலில் ஒரு கேள்வி என்றால்
ஓடி ஒதுங்குவார்

யாரும் ஓதவே
ஓதி விளங்கவே
நாயன் குரான்
நபிவழியே வந்ததல்லவா 

குர்ஆன் வாழ்க்கை கொண்டு வருது
யாரும் வாசல்மூட வேண்டாம்
வெறும் பயத்தை நெஞ்சில் பூட்டி
யாரும் ஓடி ஒளிய வேண்டாம்

இது ஏகன் அவன் ஈகை
யாரும் விழிகள் மூட வேண்டாம்
நபி வாழ்ந்து தந்த வாழ்வை
எவரும் மறந்துபோக வேண்டாம்

அந்த வானம் திறந்த வாசல்
ஏன் சாவி தொலைக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஏன் வாழ மறுக்கிறாய்

நீ விளக்கம் தேடி ஓதும்போது
இறைவன் கண்கள் ஆகிறான்
நீ விளங்கிக் கொண்டு ஓதும்போது
இறைவன் உனக்குள் வாழ்கிறான்

நாளும் ஓதுவார் பொழுதும் ஓதுவார்
நூலில் ஒரு கேள்வி என்றால் ஓடி ஒதுங்குவார்
யாரும் ஓதவே ஓதி விளங்கவே
நாயன் குரான் நபிவழியே வந்ததல்லவா 

அன்றுமுதல் இன்றுவரை ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம் காத்துல போச்சு
அன்றுமுதல் இன்றுவரை ஆயிரம் பேச்சு
அவனருளில் வந்ததெல்லாம் காத்துல போச்சு

(பாடகர் தாஜுதீன் வேறு மெட்டில் பாடியது வெகு சிறப்பு)

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை விழா நன்றியுரை

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ