201202 ரிதா காதுகுத்து

ரிதாவின் காதுகுத்து

காது குத்துன நத்தக் குட்டி ஐசு திங்கிறா
ஆமா ஐசு திங்கிறா - அவ
காதப் பாத்துத் தோடப்பாத்து கண்ணு சொக்குறா
ஆமா கண்ணு சொக்குறா

மாலுவனு மாலுக்குள்ள ஆளு போனிச்சு
இந்த ஆளு போனிச்சு
குட்டி ஆளு போனிச்சு
சின்ன ஆளு போனிச்சு - அங்க
காது ரெண்டும் ஓட்டையாயி திரும்பி வந்துச்சு
ஆமா திரும்பி வந்துச்சு

கண்டதுக்கும் கத்திக் கத்தி ஊரக் கூட்டுவா
நல்லா ஊரக் கூட்டுவா - ஆனா
காது குத்தும் போது மட்டும் சிரிச்சி வெக்கிறா
இவ சிரிச்சிக் வெக்கிறா

ஊரு ரொம்ப கெட்டுப் போச்சு ஒண்ணும் புரியல
ஆமாம் ஒண்ணும் புரியல - இவ
அழகப் பாத்து ஆடும் ஆட்டம் தாங்க முடியல
அடடா தாங்க முடியல

மறத்துப் போற மருந்தத் தேடி தாயி ஓடுறா
பாவம் தாயி ஓடுறா - ஆனால்
காதுத்தோட நெனைச்சு நெனைச்சு பொண்ணு மயங்குறா
சும்மா பொண்ணு மயங்குறா

தூளியில ஆடுனவ தோடு போட்டுட்டா
ஆமாம் தோடு போட்டுட்டா - தெனம்
தோடப் பாத்துத் தோடப் பாத்துத் தூக்கம் மறக்குறா
ஆமாம் தூக்கம் மறக்குறா

நாட்டு நெலமை இப்படியா ஆயிப் போச்சுடா
ஆமாம் ஆயிப் போச்சுடா - இந்த
நண்டும் குஞ்சும் ஊரை விக்க வெக்கம் ஆச்சுடா
நமக்கு வெட்கம் ஆச்சுடா

20140222

No comments: