ஒரு மதமாற்ற கருத்தாடல்

மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம் என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை இணையத்தில் வந்தது. அதைத் தொடர்ந்து என் கருத்தாடல்:

நான்:
ஒரு முஸ்லிம் அல்லது கிருத்துவன் அல்லது யூதன் இந்து மதத்துக்கு மாற் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

நண்பர்:
அரசாங்க கெஜட்டில் தனது மதம் இந்துமதம் என தெரிவித்தால் போதும்.

நான்:
சர்டிபிகேட் கேட்பார்களே!

நண்பர்:
இந்துமதத்துக்கு மாறுகிறேன் என ஒரு அபிடவிட்டும், ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் காப்பியும் கொடுத்தால் போதும்

நான்:
புரியல. நானே எழுதி நானே கையெழுத்துப் போட்டுக்கொடுக்கணுமா? எந்த பூசாரியும் எனக்கு சர்டிபிகேட் தரமாட்டாரா?

நண்பர்:
அபிடவிட் என்பது எழுத்துபூர்வமாக தரும் தாள்.நீங்களே எழுதி கையெழுத்து போட்டுதரலாம். பூசாரியின் சர்ட்டிபிகேட் வேண்டியதில்லை.பூசாரி சான்றிதழ் கொடுத்தால் செண்டிமெண்டாக நல்லது என நினைத்தால் எந்த கோயிலிலும் போய் நிர்வாக அதிகாரியிடம் / பூசாரியிடம் போய் என்னை ஆசிர்வதித்து ஒரு வரவேற்பு சான்றிதழ் எழுதிகொடு என கேட்கலாம்.கொடுப்பார்கள்:-)

நான்:
நான் ஒரு பிராமன ஜாதியில் சேர்ந்துகொள்ளலாமா?

நண்பர்:
எதாவது ஜாதியில் சேரவிரும்புகிறவர்கள் தயவு செய்து இந்துமதத்துக்கு வரவேண்டாம். மனிதனாக இருக்க விரும்புகிறவர்கள் மட்டும் வரவும். இருக்கும் ஜாதி வெறியர்களை திருத்துவது எப்படி என்பதே பெரும் சிக்கலாக இருக்கிறது.புதுசா எதுக்கு அந்த கூட்டத்துக்கு ஆள் சேர்க்கணும்?

நான்:
நான் அப்படி வந்தால் புதிய சாதியைத் தோற்றுவித்து அதனுள் தனியே நிற்பேன். எவளும் என்னைக் கட்டிக்கொள்ள மாட்டாள். குலம் கேட்பாள் கோத்திரம் கேட்பாள். தனிமனிதனாக இருந்து சாவதற்கு நான் மதம்மாற வேண்டுமா? எந்த சாதியும் என்னை ஏற்றுக்கொள்ளாது. இந்த ஜாதி இருக்கும்வரை இந்து மதத்துக்கு யாரும் மாறமாட்டார்கள். இருப்பவர்களும் ஓடுவார்கள் என்பதே நான் கண்ட உண்மை. நான் இந்து மதத்துக்கு எதிரியல்ல. எனக்கு மதவெறி கிடையாது. மதமாற்றம் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அதன் சாராம்சத்தை அறிவிப்பதே என் நோக்கம்.

கிருத்தவர்கள் மிகுந்த சேவை செய்கிறார்கள்:

1. அனாதைகளுக்கு அனாதைவிடுதி உலகமெங்கும் வைத்டிருக்கிறார்கள் கிருத்தவர்கள். இந்த சேவைக்கு இணை வேறு எதுவும் கிடையாது. நான் ஒரு முஸ்லிம் இந்து நாட்டில் பிறந்து இந்துக்களோடு வாழ்ந்தவன். ஆனால் கிருத்துவர்களைப்போல ஆனாதை விடுதி சேவைகளை முஸ்லிம்களோ இந்துக்களோ செய்வதில்லை. மனிதம் போற்றினால்தான் அது மதம். இல்லாவிடால் அது ஒரு புண். கடந்த முறை இந்தியா சென்றபோது மாதாகோவில் சென்று அனாதைகளுக்கு பிரியாணி கொடுத்தேன் என் பிறந்தநாளுக்கு. அந்த சுகம் இன்னும் என் நெஞ்சில் ஒட்டிக்கிடக்கிறது.

2. சிறந்த கல்வி கொடுக்கிறார்கள் கிருத்தவர்கள். அனாதைகளை அப்படியே விட்டுவிடுவதில்லை. அருமையான ஒழுக்கம் சொல்லித் தருவார்கள்.என் தம்பி மாதாகோவில்தான் படித்தான். நல்லொழுக்கம் என்று ஒரு தனி வகுப்பே நடக்கும். இளய வயதில் ஆழமாக நல்லொழுக்கத்தைப் படிப்பிப்பார்கள். ஆயிரம் கோவில் கட்டுவதைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றானே பாரதி அதைச் செய்வது கிருத்துவ மதம்தான். இஸ்லாமோ இந்து மதமோ அல்ல.

3. அளப்பரிய கருணையைக் கற்பிக்கிறது கிருத்துவம். சிறு வ்யது முதலே ஏசு நாதரின் படஙக்ளைப் போட்டுக்காட்டி. கருணையாக இருங்கள் பாவம் செய்யாதீர்கள் என்று ஒவ்வொரு நாளும் சொல்ல்லித் தருவார்கள். மனதில் ஒரு இரக்க குணத்தை எப்படியும் வரவழைத்துவிடுவார்கள். உண்மையான கிருத்துவன் - True Christian என்று பெருமையாக சொல்வதையே விரும்புவார்கள். மாதா கோவில் சென்று நான் நிறைய ஏசுநாதர் படம் பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறேன். மனம் அப்படியே பண்படும். இரக்க குணம் பொங்கும்.

4. சகிப்புத் தன்மையை கிருத்துவம் கற்பிக்கிறது. இந்தியாவில் எப்போது பார்த்தாலும் இஸ்லாம் வெறியனும் இந்து வெறியனும் அடித்துக்கொண்டு செத்து மடிவான்கள். அந்த அளவுக்கு கிருத்துவர்களின் கதை வருவதில்லை. மிகக் குறைவாகவே அதை நான் கேள்வியுற்றிருக்கிறேன்.

இத்தனையையும் தந்துவிட்டு அவர்கள் கேட்பது என்ன மதம் மாறுகிறாயா என்றுதான். விரும்பாவிட்டால் கட்டாயப்படுத்த மாட்டார்கள். இஸ்லாமும் கட்டாயப் படுத்தாது. இந்துமதமோ மதம் மாறு என்று கேட்கவே கேட்காது. ஏனெனில் மதம் மாறுவதென்பது மிகுந்த குழப்பம் உள்ள ஒரே மதம் இந்துமதம்தான். அதில் பிற்ப்புதான் எல்லாம். பிரமணனாய்ப் பிறந்தால் மட்டுமே பிராமனன். தலித்தாய் பிறந்தால் தலித்தான். ஒரு தலித் பிரமணாய் மாறவே முடியாது. ஒரு பிராமணன் கல்லனாய் மாறவே முடியாது. மற்ற மதங்கள் அப்படியல்ல, ஒருவனின் நடத்தையால்தான் அவன் அந்த மதத்தவன்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால், மதஙக்ள் அத்தனையிலிருந்தும் மனிதனுக்கு விடுதலை வேண்டும். அதற்கான தொடக்கம் மதமாற்றம்தான். மதங்கள் இப்போதைக்கு ஒளியாது. ஆகவே பிடித்த மதத்துக்கு மாறிக்கொண்டே இருங்கள். இன்று இது பிடிக்கவில்லை என்றால் நாளை இன்னொன்று. மதம் மாறும்போது மதவெறி அழிகிற்து. மதப்பற்று சிதைகிறது. வாழ்வும் வசதியுமே பிரதானமாய் ஆகிவிடுகிற்து.

நாம் ஏன் கொத்தடிமைகளாக கீழ் சாதியினராக ஒரு மதத்தில் இருக்க வேண்டும்? உடனே மாறவேண்டியதுதானே? ஒரு மதத்தில் மேல் ஜாதியாக நான் இருந்தால் எல்லா மரியாதையும் எனக்கு இருக்கிறது. நான் மாற வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் என்னை அடிமையாக்கி ஒரு மதம் வதைக்கிற்தென்றால் நான் ஏன் அதில் இருக்க வேண்டும். இப்படியாய் மாறிக்கொண்டே சென்றால் ஒரு நாள் மதம் என்பது கேலிச்சித்திரங்களாய் ஆகிவிடும். அது ஒரு வகையான மார்க்கம் அதாவது வாழ்க்கை நெறி மட்டுமே என்பது உறுதிபடும். எனக்குப் பிடித்த மார்க்கத்தில்தானே நான் வளமோடு வாழமுடியும்

7 comments:

கோவி.கண்ணன் said...

இன்றைய காலகட்டங்களில் மதமாறுவதற்கு அல்லது மாற்றுவதற்கு முன்வைக்கப்படும் பழைய காரணங்கள் எதுவுமே இல்லை. அதனால் தான் மதங்கள் புனிதப் பூச்சு பூசிக் கொண்டு பல் இளிக்கின்றன என்பது என் கருத்து. நான் தனிப்பட்ட எந்த மதத்தையும் குறிப்பிட வில்லை. மதமில்லாமல் மாண்டு போவதால் நஷ்டமில்லை என்பேன்.

சாந்தி said...

நிஜம்தான் கிறுஸ்துவ மதத்தில் " நீ கிறுஸ்துவன் என பெயரளவில் சொல்வதை இறைவன் விரும்பமாட்டார்.. உன் ந்அடத்தையின் மூலம் நிரூபி என சொல்லுது வேதாகமம்..


ஆகையால் முடிந்தளவு செயலில் செய்கிறார்கள்..

என் வீட்டில் பஅட்டியும் பேத்தியுமாய் இருவர் வேலை செய்தார்கள்.. அந்த பேத்திக்கு காக்கா வலிப்பு நோய் உண்டு.. அது வரும்போது வீட்டிலேயே மூத்திரம் போய்விடுவார்... வாயில் நுறை தள்ளும்..

எங்க மாமா பெரிய மருத்துவர் என்பதால் அவளுக்கு பல வைத்தியங்கள் செய்தோம்.. குறைந்ததே தவிர நிற்கவில்லை..

இவரை ஒரு மிஷனரி சபைக்கு அழைத்து சென்று அவருக்கு வேதகாம பயிற்சி கொடுத்து உணவு உடை கொடுத்து அவள் தன்னம்பிக்கையை அதிகரித்ததும் அவள் இப்போது ஒரு மிஷனரி...

நிமிர்ந்து நிற்கிறாள்... எனக்கு அவள் வாழ்க்கை குறித்த பயம் முன்புண்டு இப்போது இல்லை...


இப்படியாக பலரின் வாழ்வு மேன்மையடைய செய்கிறார்கள் மிஷனரிகள் பணம் பெற்றுக்கொண்டோ இல்லமலோ மகிழ்வாயிருக்கிறார்கள்..

மகிழ்ச்சி , மரியாதை தானே முக்கியம் மனிதனுக்கு.. அதை தருவது எந்த மதமாய் இருந்தால் என்ன?

(ஆனா எனக்கு 100 கோடி டாலர் வேணும் நான் மதம் மாற..)

Colvin said...

நல்ல கருத்தாழம் மிக்க கட்டுரை நன்றி சகோதரரே. கிறிஸ்தவர்கள் எப்போதுமே மதம்மாற்ற செய்ய மட்டுமே இத்தகைய சேவைகளை பயன்படுத்துவார்கள் அதுவும் உள்நோக்கத்துடன்தான் செய்வார்கள் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நிற்க பல வித கோணத்தில் இந்து சாதிப் பாகுபாடுகளை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி

சமயங்கள் மனிதனை நல்வழிப்படுத்தவே உள்ளன. ஆனால் இந்தியர்களோ சாதி, சமய பாகுபாடுகளினால் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்கிறார்கள். அதைவிட நாத்தீகனாக இருப்பது எவ்வளவோ மேல்.

அன்புடன்
கொல்வின்
இலங்கை

ஹரன் ஜாபர் said...

நான் அப்படி வந்தால் புதிய சாதியைத் தோற்றுவித்து அதனுள் தனியே நிற்பேன். எவளும் என்னைக் கட்டிக்கொள்ள மாட்டாள். குலம் கேட்பாள் கோத்திரம் கேட்பாள். தனிமனிதனாக இருந்து சாவதற்கு நான் மதம்மாற வேண்டுமா?

மதம் மாறவும் வேண்டாம்; புதிய சாதியைத் தோற்றுவிக்கவும் வேண்டாம். எனக்கு இனி ‘மதம்’ இல்லை என்று நம்மை நாமே விடுவித்துக்கொண்டாலே போதும்.

புதிதாய் தோன்றும் அனைத்து மதங்களுமே, முதலில் சிறுபான்மை மக்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும். அப்போது திருமணக் கொடுக்கல்-வாங்கலில் சில சிக்கல்கள் வரும். நாளடைவில் எல்லை விரியும்; எண்ணிக்கைப் பெருகும். நாளை உருவாக இருக்கும், ’மதம் அற்ற’ அன்பர்களுக்கும் இவ்விதி பொருந்தும் அல்லவா?

அன்புடன்
ஹரன்

Unknown said...

மதம் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாத

mohamedali jinnah said...

சிந்தனைக்கு வருபவர் சாதாரண கவிஞன் அல்ல கவிஞர்களிலிருந்து உயர்ந்தவர்கள்

Unknown said...

கவியே..உமது கட்டுரை அரைப்பகுதி வரை நன்றாக வந்து இறுதியில் மதங்கள் பற்றிய உமது அறிவின்மையை காட்டி முடிகிறது.எனக்குப் பிடித்த மார்க்கத்தில்தானே நான் வளமோடு வாழமுடியும் என்று நீர் சொல்லும் போது எனக்குப் பிடித்த சரியான மார்க்கத்தில்தானே நான் வளமோடு வாழமுடியும் என்று கூறியிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியும்.அனால் நீர் அப்படி சொல்ல வில்லையே.
முதலில் நாம் உணர வேண்டியது, பிரச்சினைகளுக்கு காரணம் மதங்கள் அல்ல,அதை பின்பற்றும் மனிதர்களே.உண்மையான இந்துவுக்கு தெரியும் ஜாதி என்பது இந்து மதத்தில் உள்ளதன்று.ஜாதி என்பது இந்து மதத்தை பின்பற்றியவர்கள் தோற்றுவித்தது.
உண்மையில் நீ இந்துவாக மாற விரும்பினால், மற்றவை பற்றி நீ கவலைப்பட மாட்டாய்.மற்றவை பற்றி கவலைப்பட்டால் நீ உன் சுய நலத்துக்காகவே மதம் மாறுகுறாய்.
முதலில் நீர் சார்ந்திருக்கும் மதத்தை பற்றியாவது பூரண அறிவை பெற்று இது போன்ற கட்டுரைகளை எழுது.ஏனெனில் உன் எழுத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான்.
இப்படிக்கு
கல்முனை அமீனுல்லாஹ்