எங்கே செல்கிறது இயல்விருது?

எங்கே செல்கிறது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின்
பொன்னான இயல்விருது?

வானுயர்ந்து
தாய்த்தமிழ் வாசம் சுமந்து

புலம்பெயர்ந்தும் ...
தமிழ்த்தேன் வேர் பெயரா
கர்வத்தோடு

உயர்ந்து உயர்ந்து
பறக்கப் பிடிக்கப்பட்ட பட்டம்

ஓரிரு வாசல்களின் முன் மட்டும்
மண்டியிட்டுத் தாழ்ந்து
பின்னெலும்பு மடிந்து

அந்நிய மோகத் தனலில்
தானே வலிந்து விழுந்து
கருகிக் கருகி

சிதையும் சிறகுகளோடு
கீழ்நோக்கிப் பறக்கும்
அவலம் ஏன்?

நெஞ்சு
பொறுக்குதில்லையே!

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

//ஓரிரு வாசல்களின் முன் மட்டும்
மண்டியிட்டுத் தாழ்ந்து
பின்னெலும்பு மடிந்து//
மனம் வருந்துகின்றது
/