*வெற்றிக்கு மந்திரம் மனவீரம்*

இசை கூட்டி தமிழ்க் கவிதைகள் எழுதுவது எனக்குப் பிடித்த விசயம். 

யாப்பிலக்கண விதிகளைப்பற்றி அதிகம் நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அதன் சுவைகளைப் பெரும்பாலும் களவாடிக்கொள்வேன்.

இந்தக் கவிதை ஒவ்வொரு வரியிலும் ஒரு கருத்தைச் சொல்லி நிறைவு செய்துகொள்கிறது. 

நிறைவு செய்து கொள்வதோடு நின்றுவிடாமல் அடுத்த வரியையும் தன் கருத்தோடு கொக்கியிட்டு இணைத்துக்கொள்கிறது.

இதுபோன்ற கவிதையின் ஒரு வரியை மட்டுமே ஒரு கவிதையாய் அறிமுகம் செய்யலாம். 

சில வரிகளை மட்டும் இணைத்து ஒரு கவிதையாய்க் காட்டலாம்.

கீழிருந்து மேலாக வாசித்துச் சுவைக்கலாம் அல்லது இடையிலிருந்து தொடங்கி கீழ்நோக்கிச் சென்று பின் மேல்நோக்கிச் செல்லலாம்.

காலங்களில் அவள் வசந்தம் என்று ஒரு திரைப்பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதி இருப்பார். அந்தப் பாடலும் இவ்வகைக் கவிதைதான். ஒவ்வொரு வரியும் தனித்து இயங்கக் கூடையன


*

கோடுகள் வாழ்க்கையில் ஏராளம் - அந்தக்
         கோட்டுக்குள் நாடகம் அன்றாடம்

தாவிடும் ஆசைகள் கூத்தாடும் - இன்பத்
         தவிப்புக்குள் சிக்கியே நாளோடும்

மூடிய மாங்கனி வீடாகும் - உள்ளே
         முத்தாக வாழ்வது வண்டாகும்

கூடுகள் இன்பத்தின் ஆதாரம் - அந்தக்
         கூட்டுக்குள் அன்புதான் தேனூட்டும்

கட்டிய காலுடன் நாட்டியம் - கண்கள்
         கட்டித்தான் காட்சிகள் அரங்கேற்றம்

ஒட்டிய தேவைகள் போராட்டம் - உயிரின்
         ஓலந்தான் ஞானமாய் வேரோட்டும்

வெட்டிய கீறலாய் ஏமாற்றம் - தொடரும்
         வெற்றெதிர் பார்ப்போ ரணமாக்கும்

தொட்டது தோற்பது சிறையாகும் - தொட்டுத்
         திறவாமல் வெற்றியும் திசைமாறும்

இருட்டினில் கண்களும் கூராகும் - துயரம்
         இடைமுட்ட வாழ்வோ சீராகும்

கருத்தினில் இழையா கனவுலகம் - வெற்று
         காற்றோடு கரைந்து மணலாகும்

பருந்திடம் மாட்டிய குஞ்சாக - நாளும்
         போராடித் தவிக்கும் நன்னெஞ்சம்

விருந்தென மடிவது படுமோசம் - வாழ்க்கை
         வெற்றிக்கு மந்திரம் மனவீரம்

அன்புடன் புகாரி
பாரதியும் இஸ்லாமும் - Nov 29, 2016 by மாலன்

“மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் ‘உங்க’ பாரதியார்?” என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார்.
“சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை”
“அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?”
“சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்”
“சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்”
“நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்” என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார். கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்” என்றார்.
“பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்.”
“நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?”
நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று:
நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார். அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள் ”
பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார். “இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?” என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு.
“சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ‘பரமாத்மாவான அல்லாஹீத்த ஆலா அருள் புரிவாராக’ என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்? ”
“இது என்ன புதுக் கதை?”
“இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள். அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது.”
“படியுமேன். கேட்போம்”
“நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்”
“மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?”
” ‘மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்’ என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?”
“நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்”
நான் படித்துக் காட்டினேன்: “… எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும் கலந்தால் பொது இன்பம் ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம் முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.”
“அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?”
“படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்:
“பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், “இனி என்ன செய்வது?” என்று தயங்கினான். அப்போது நபி, “அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை. “என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்”
“கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?”
பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும் இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில் 1905 ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.
அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார் “.
“அவருக்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?”
“அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் ‘தாடி ஐயர்’ (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை ‘. ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து ‘என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் . ஆனால் அதற்குப் பின்னும் 1918 ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார் “.
“இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?”
“இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை. கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ? ‘வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்’ என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.
பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார் “.
“ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?”
“அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது:” நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும் “என்று ஓரிடத்தில் எழுதுகிறார்”.
வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர்.
“ஓ! அப்படியா! அப்ப நான் வர்ரேன். உங்க ‘பாய்’ பாரதியாரிடமும் சொல்லுங்க! என்றார் நண்பர் கிண்டலாக.
நான் புன்னகைத்தேன்.
நலமாக இருக்கிறாயா
அம்மா

ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எங்களுக்குத் தவித்தபோது
உனக்கே தவித்ததுபோலத்
தண்ணீரோடு நின்றாய்
இன்று
உன் தவித்த வாய்க்குத்
தண்ணீர்தர உன்னுடன்
ஒருவருமே இல்லை
கண்ணீரோடு நிற்கிறாய்

*

பிள்ளைகள் சுகம் மட்டுமே
போதும் என்ற தியாகத்தைப்
பொட்டலாய்ப் போன
உன் வாழ்க்கையிலும்
தீபமாய் ஏற்றிக்கொண்டாய்

ஐந்து ஆண் பெற்ற உனக்கு
பெண்பிள்ளை என்றால் உயிர்

மருமகளிடமே
இத்தனைப் பாசம் கொட்டும் நீ
மகளிடம் எத்தனைக் கொட்டச்
சேர்த்துச் சேர்த்து வைத்துக்
காத்திருந்திருப்பாய்
உன் கனவுதிர் இரவுகளிலும்
தரிசுப் பகல்களிலும்

*

இன்று உன்னோடு
சேர்ந்து வாழும் ஜீவன்கள்
நீ பெற்ற பிள்ளைகள் அல்ல
நீ பெற்ற நோய்கள்தாம்

காசுதருவோம் வீடுதருவோம்
ஸ்கைப் வழியே முத்தம் தருவோம்
வேறு எதைத் தந்துவிடப் போகிறோம்

உன் உடல் நோய்க்கு
உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
கொண்டுவரச்சொல்லி
மருந்து தருவோம்

உன் மன நோய்க்கு
பொங்கும் கண்ணீரைத் தவிர
வேறு என்ன தருவோம்

*

வெளிநாடு சென்றால்
எவனும்
பணக்காரன் ஆவதில்லை
எல்லோருமே
பிச்சைக்காரர்கள்தான்
ஆகிறார்கள்

*

விமானம் ஏற
உன் கால்களுக்கு வலுவில்லை
ஆகாயப் பயணம் செய்ய
உன் நெஞ்சுக்குள் திடமூச்சு இல்லை

தாபங்களும் தவிப்புகளுமோ
நாளும் பொழுதும்
பல்லாயிரம்கோடி மைல்களை
அநாயாசமாய்க்
கடந்து கடந்து உயிர்கடுக்கத்
தேம்பி நிற்கின்றன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எப்படி
நலமாக இருப்பாய்

நீ எத்தனைதான் சமாளித்தாலும்
உன் காயங்களை மறைத்து மறைத்து
நல்லா இருக்கேண்டா நல்லா இருக்கேண்டா
என்று நீ சொல்லிக்கொண்டே இருந்தாலும்

உன் பிள்ளைகள் எல்லோரையும்
ஒருநாளேனும் ஒன்றாய் ஒரு கூடத்தில்
ஒற்றை இரவிலாவது
வரிசையாய் மெத்தையிட்டு
அடுக்கடுக்காய்ப் படுக்க வைத்து
இந்தக் கடைசி முதல் அந்தக் கடைசிவரை
பார்த்துப் பார்த்து பேசிப்பேசி
அணைத்து அணைத்து
ஆனந்தக் கண்ணீர் உகுத்து உகுத்து
உறங்கித் தீர்க்க வேண்டும்
என்ற உன் ஆசையை உன்னால்
மறைக்கவே முடியவில்லையே
அம்மா

*
நலமாக இருக்கிறாயா
அம்மா

இதோ
இந்த மண்ணில்தான் கேட்கிறாய்
உன் சொர்க்கத்தை

அது ஒன்றும்
கிடைக்கவே கிடைக்காத
பேராசையும் இல்லை

என் வேண்டுதலும் உனக்காக
அது ஒன்றுதான் அம்மா

இதோ
வெகு பக்கத்தில் இருக்கிறது

இதோ
இப்போது வந்துவிடப் போகிறது

இதோ இதோ
எல்லோரும் ஒன்றாக
உன்னுடன் இருப்போம்

அந்த நினைவுகளில்
கனியும் கனவுகளில்
நீ நலமாக இரு அம்மா

- அன்புடன் புகாரி  நவம்பர் 5, 2016
*****

எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கிறது

வேறு எவரின் கதையோடும்
ஒன்றிப்போகாமல்
தனக்கே தனக்கான கதை என்று
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

எவ்வளவு விளக்கமாகச் சொன்னாலும்
உன்னால் புரிந்துகொள்ளவே முடியாது
என்று சத்தியம் செய்யும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

எனக்கு நடந்ததுபோல்
இந்த உலகில் எவருக்குமே
நடந்துவிடவே கூடாது என்று
கண்ணீராடிக் கேட்டுக்கொள்ளும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

என் நிலை மட்டும்
எவருக்கேனும் வந்திருந்தால்
என்றோ அவர்
மண்ணோடு மண்ணாக
மடிந்துபோயிருப்பார் என்று
திட்டவட்டமாகச் சொல்லும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

ஒவ்வொரு கையின்
ரேகைகளைப் போலவே
அத்தனைபேர் வாழ்க்கையுமே
வித்தியாசமானவைதானா

வலி என்பது
போதை தரும் சக்தியா

உள்ளுக்குள் வெகுநாட்களாய்
ஊறி ஊறிப் புளித்துப்போய்
நுரைத்துக்கொண்டு நிற்கும்
உணர்வுகளும் நினைவுகளும்தான்
வலியா வேதனையா

மதுவில் மூழ்கியவன் உளறுவதைப்போல
வலியில் மூழ்கியவனும்
தான் என்ன சொல்கிறோம்
எப்படிச் சொல்கிறோம்
என்பதையே அறியாதவனாய்ப்
பினாத்துகிறானே

ஆனாலும்
ஒருவனின் துக்கத்தைப்
போதை என்று சொல்லும்போது
உள்ளுக்குள் திரள்திரளாய்
துக்கம் பற்றிக்கொண்டு வருகிறது

துக்கத்தைவிட்டு
விலகிக்கொள்ளுங்கள்

துக்கம்
நம் உடன் பிறந்தவையல்ல

காலில் குத்திய முள்ளைக்
கையில் எடுத்துத்
தலையுல் குத்திக்கொள்வதுதான்
வலியும் துயரமும் துக்கமும்

உங்கள் கதைகளை எல்லாம்
மூட்டைகட்டிக்
குப்பையில் எறியுங்கள்

எறிந்த குப்பையை
மறக்காமல்
தீயிட்டுக் கொளுத்திவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல் நடங்கள்

பிறகும் எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கும்

ஆனால் அது
பொதுவான சுகமான
ஒரே கதையாக இருக்கும்
வெற்றிக்
கதையாக இருக்கும்

அன்புடன் புகாரி
20161105
20161028 முகநூல்



*

Jeyaruban Mike Philip 

திரு.புகாரி! மதங்கடந்த மனிதாபிமானத்தைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். மதம் என்பது மனிதாபிமானமற்ற சூழலில் அவரவர்களால் அறிவுறுத்தப்பட்ட போதனை.

ஜெயரூபன், நீங்கள் கானலைக் கண்டு நிஜமென்று நம்புகின்றீர்கள்.
மார்க்கங்களின் நோக்கம் அறம் வளர்ப்பது மட்டுமே. அது பிழையானதா?

பிழைப்புவாதிகளும், ஆதிக்கவெறியர்களும், அரசியல் சில்லுண்டுகளும் மார்க்கத்தைப் பிழையாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

நெருப்பு என்பது புனிதமானது. அதை கூரையில் வைப்பவனின் கையே வக்கிரமானது! இல்லை என்று சொல்வீர்களா?

*

முட்டி முட்டி மோதி மோதி கருகக் கருகத் துளிர்விட்டுத் துளிர்விட்டு முளைப்பதென்ன சாதாரணமா?

ஆனாலும் ஏற்க முடியவில்லையே இந்த வைரப்பயிரை, ஏன்?
உச்சகட்ட ஊழல்?
பிச்சைக்காரர்களாய்ப் பார்க்கும் பணக்காரம்?

எழுந்தால்தானே கவிழ்க்க வருவாய் என்று தரையோடு தரையாய்க் கட்டிவைத்திருக்கும் அதீத அதிகாரம்?

எல்லாம் தொலையட்டும்
மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாமே அம்மா!

ஆனாலும் நீ நலம்பெற வேண்டும் எழுந்து நடமாடவேண்டும்!

நீ இல்லாததால் மட்டுமே இங்கே தங்கம் விளையப் போவதில்லை அதே ஊழல்தான் இன்னும் அதிக விளைச்சல் காணப் போகிறது!

*

>>> மதமாகி சகமனிதனை எதிரியாக பார்க்க வைக்கும் போது அதை விமர்சிப்பது தேவையாகி விடுகிறது ஐயா!<<<

அடுத்த ஊர்க்காரனையும் எதிரியாய்ப் பார்ப்பது மனித இயல்பு. அதுதான் ஒழிக்கப்பட வேண்டும். நான் அறிந்து எந்த மதமும் இன்னொரு மதத்தவனை அழிக்கவோ வெறுக்கவோ சொல்லவில்லை. அயலானை நேசி என்பது கிருத்தவம் முஸ்லிம் இரண்டிலும் சொல்லப்பட்டவை. புத்தரோ மகாவீரரோ எவரையும் எதிரியாகப் பார்க்கச் சொல்லவில்லை. மனித வக்கிரங்களை எதனோடு முடிச்சுப் போட்டாலும் அது கெட்டது என்றாகிவிடும்.
அரசியல் அவசியமானது அதனுள் வக்கிரம் புகும்போது அது கேடுகெட்டதாகிறது. சுத்தம் செய்ய வேண்டும் அதற்குக் காமராஜர்கள் தேவையே தவிர அரசியல் ஒழிப்பால் நாடு அனாதையாகிவிடும்!

*

மூடநம்பிக்கைகளிலிருந்து தனிமனிதன்தான் திருந்த வேண்டும்.
அவன் காதுகொடுக்கத் தயாராக இருந்தால் ஒரு கோடி மூடநம்பிக்கைகளைக் கொட்டிவிட்டு ஒவ்வொன்றுக்கும் பணம் வசூலிக்க ஆட்கள் நிறையவே உண்டு. அந்தப் பிழைப்பில் வாழ்ந்தவர்கள் அன்று ஏராளம். ஆனால் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் நம் கல்வி தந்த அறிவுக்கான சவால்.

*

ஆணுக்குக் கிடைக்கும் எல்லாமும் எல்லா வயதிலும்
எல்லாப் பெண்களுக்கும் கிடைத்தலே வேண்டும்!


பிறந்தநாள் நீ மலர்ந்த நாள்

அந்த
ஒற்றை நாள் மட்டுமே
உன்னால்
தேர்ந்தெடுக்கப்படவே முடியாத
உன் சிறப்பு நாள்

உன் இறுதிநாள்
தீர்மாணிக்கப்பட்டிருக்கும்போது
அதை அறிய நீ இருக்க மாட்டாய்

ஆக...
இறைவனால் தீர்மானிக்கப்பட்டு
உன் கைகளில் தவழும் உன் நாள்
உன் பிறந்தநாள் மட்டுமே

அந்த நாளின்
மேன்மையைக் கொண்டாடு
அதைத் தந்த இறைவனிடம்
உன் அன்பை அள்ளிக் கொட்டு
சின்னச் சின்னக் கண்ணீர் முத்துக்களால்
நன்றி நதி பெருக்கு

உன்
ஒவ்வொரு பிறந்தநாளும்
இறைவனை நீ தேடிச் செல்லும்
தங்கப் படிக்கட்டுகள்

இடையிலேயே தடுக்கி விழுந்துவிடாமல்
அருளப்பட்ட இறுதிப் படிக்கட்டுவரை
இன்பமாய் இனிமையாய்
உன்னையே நீ பாராட்டி
ஊரறிய உன் வயதைச் சொல்லி
நிதானமாய் ஏறிச் செல்

எத்தனை காய்ந்த வயிறுகளை
நிறைக்க இயலுமோ
அத்தனையையும் நிறைத்துக்
கொண்டாடு

ஒரே ஒரு புது நட்பையாவது
பெற்றுப் போற்று

கசந்துபோன உறவுகளில்
ஏதோ ஒன்றையாவது
மீட்டெடுத்து அள்ளியணை

உன் ஒவ்வொரு பிறந்தநாளிலும்
உன் கசடுகளைக் களைந்த
புத்தம் புதியவனாய்ப் பிறந்து சிரி

உன்னாலும் தீர்மானிக்க முடிந்த
இன்னும் எத்தனை எத்தனை
உன் பிறந்த நாட்கள்
உன் முன் உனக்காகக் காத்திருக்கின்றன

பார் மகிழ்
கொண்டாடு குதூகலி

அன்புடன் புகாரி
20161028
எங்கே இல்லை பாம்புகள்

பாம்புகள் நெளிகின்றன
கழுத்துப்பட்டிகளுடன்
பணியிடங்களில்

நாற்காலிகளில் அமர்கின்றன
கணினி பார்க்கின்றன
புதுப்பணியாளனின்
மேலான்மைத் திறன்கண்டு
கண்கள் சிவப்பேற
நெளிகின்றன பாம்புகள்

வட்டமேசையின் இடையிடையே
ஏராளமான பாம்புகள்
வனப்பான ஆடைகளில்
துடியாகப் பேசுகின்றன

கொத்துவது தெரியாமல்
கொத்தத் தெரிந்த பாம்புகளால்
அயராப் பணிசெய்து கிடக்கும்
அபலை எலிகள் அவதியுறுகின்றன

எடு விடு என்கிற
இணைவாய்ப்புத் திட்டத்தால்
விடுபட்டு வீதியில் அலைய
வஞ்சிக்கப்படுகின்றன

எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள்

ஆப்பிளிலா இருந்தன பாம்புகள்
ஆதாமிலல்லவா இருந்தன பாம்புகள்
என்றுரைக்கின்றன இந்தப் பாம்புகள்

நாவடிக் கட்டளை ஆங்கிலத்தில்
நடிப்பறியா நடிப்புச் சாதுர்யத்தில்
கரைகண்ட பாம்புகளைக் காண
எங்கே செல்ல வேண்டும்

வயல்வெளிப் பாம்புகள்
வெட்டிக்கொண்டு சாகும்
மூர்க்க முட்டாள் பாம்புகள்

அலுவலகப் பாம்புகளின் கைகளிலோ
நஞ்சு கக்கும் கோடரியே இருக்கும்
காணும் கண்களுக்கு
வெண்ணிற ஆடை மட்டுமே தெரியும்

எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள்

இத்தனைப் பாம்புகளின்
முட்டைகளையும் யார்தான் இட்டது

அன்புடன் புகாரி
உன்னை நான்
அள்ளியெடுத்ததில்லை
ஆனால்
உன்னை என் உயிருக்குள்
மெத்து மெத்தென்று உணர்கிறேன் 
கண்ணே
நீ என்னிடம்
பேசியதே இல்லை
ஆனால்
உன் குரல் எனக்குச் சன்னமாய்
மிக அருகில்
கிசுகிசுப்பாய்க் கேட்கிறது
செல்லம்
என்னை உனக்குத் தெரியாது
நான் உன்னைக் கண்டதே இல்லை
ஆனால் உன்மீது நான்
யுகங்களாய் நீண்ட
வெறியன்பு கொண்டிருக்கிறேன்
உயிரே
*
நேற்று பார்த்த படத்தில் வந்த இந்த வசனம் தந்த பாதிப்பில்
I never held you but I feel you
You never spoke but I hear you
I never knew you but I love you

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பயணம் ஒருவழியாய்
முடியத்தான் போகிறது
வழியெல்லாம் உதிர்ந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றையும் அள்ளியெடுத்துத்
தங்கமுலாம் பூசிப் பூசி
நினைவுப் பொந்துகளில்
பத்திரப்படுத்தினேன்
ஆனால்
நொடிகளில்
தன் பித்தளை முகம் காட்டுவதை
அந்நிமிடங்கள் நிறுத்தவே இல்லை
ஆக
நான் தான் போலியாகிப்
பல்லிளித்து நின்றேன்
பித்தளை தன் நிசத்தில்
நிமிர்ந்துதான் நின்றது
என் நாட்கள்தான் போலி
பித்தளையின் நாட்களோ
அச்சு அச்சு அசல் அசல்
வெற்றிபெற்ற
மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
கண்ணதாசா அடப்பாவி
கொல்றியடா
இந்தக் கல்வியால் பயனடைபவர்கள்
பெரு நிறுவனர்கள் மட்டுமே
நம்மை அவர்களுக்காக
உழைக்கத் தயாராக்குகிறார்கள்
வாழ்நாளெல்லாம்
நாம் அவர்களுக்காகவே உழைக்கிறோம்
சின்னச் சின்னப் பகுட்டுகளை
ஜென்ம வசதி என்று
வாய்கிழியச் சொல்கிறோம்
அறம் வலியுறுத்தும் கல்வி
நம்மிடம் இல்லை
இருந்தால் மனிதநேயம் பெருகும்
மனிதம் வாழும்
அறம் வலியுறுத்த எதுவந்தாலும்
அதை அப்படியே குறைகூறித்
தூக்கி எறிந்துவிடுகிறோம்
தூக்கி எறிந்தால் மட்டுமே
நாம் பகுத்தறிவாளர்கள் என்றுவேறு
சொல்லிக்கொள்கிறோம்
மூடநம்பிக்கைகளை அழித்துப்போடும்
கல்வி நம்மிடம் இல்லை
எது அறிவு என்று சொல்லித்தரும்
கல்வி நம்மிடம் இல்லை
எது உண்மையான வாழ்க்கை என்று
வரையறுக்கும் கல்வி நம்மிடம் இல்லை
எல்.கே.ஜி க்குக் கதறிக்கொண்டுபோகும்
பிள்ளையைத் தயார் படுத்தி
படுத்தி எடுத்து அனுப்பிவைக்கும்
பெற்றோர்களின் கண்களில் மிளர்வது
டை கட்டிய உத்தியோகம் மட்டுமே
டாக்டராவதைவிட
மனிதனாவது முக்கியம்
எஞ்சினியராவதைவிட
நல்லிணக்கம் பயில்வது முக்கியம்
வக்கீலாவதைவிட
வன்முறையற்றவனாவது முக்கியம்
கணிப்பொறியாளனாவதைவிட
சக உயிர் நேசிப்பவனாவது முக்கியம்
கலெக்டராவதைவிட
ஊழலற்றவனாவது முக்கியம்
கல்வியே உனக்குக்
கல்வி கற்றுத் தரப்போகும்
கல்வி எப்போது வரப் போகிறது
வாழ்க்கைப் பெருந்தீவில்
அதிரகசிய மறைபொருள் 
மந்திரமென்று எதுவுமே இல்லை

சுவாரசியமான ஓர் உயிர்
கிசுகிசுப்புத் தூரத்திலேயே
இணக்கமாய் உன்னோடு 
இணைந்திருந்தால்

வெறுமைப் பொழுதுகளின்
எல்லையில்லா
நீளமாவது? அகலமாவது?

அவை அனைத்துக்கும்
ஆழ்கடல் நங்கூரமாய்
ஓர் இரும்பு முற்றுப்புள்ளி
அகற்றமுடியாததாய்
இறக்கப்பட்டிருக்கும்
நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும்
கோடிப் பிறப்புகள் 
குழுமிப் பூத்திருக்கும்

வேறொரு மாய மந்திர 
தேவ தத்துவதும் 
இல்லை இந்த வாழ்க்கையில்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சிரி மகிழ் பூரித்துப்போ

உன்
பிணத்தின் முன்னின்று
அழப்போவது எத்தனை பேர்
என்றெண்ணி
இன்றே வருந்துவது
மரணத்திற்கு
நிகர்

இன்று இப்பொழுது
உன்னோடு சிரிப்பவர்களும்
உன்னைச் 
சிரிக்க வைப்பவர்களும்
போலியானவர்களாய் 
இருப்பினுங்கூட
அதுதான் பிறப்புக்கு 
நிகர்

சிரி
மகிழ்
பூரித்துப்போ

எவனும் உன் மரணத்தில்
உனக்காக 
ஒரு சொட்டுக் கண்ணீர்விட்டு
அழத் தேவையில்லை
அதுவும் 
இன்று உன்னைக்
கதறக் கதற அழவைத்துவிட்டு

அன்று
அறியாமையில்
ஆயிரம் ஆயிரம் சிரிப்பு
இன்று
அறிய அறிய
அழுகை ஒன்றே அவதரிப்பு

அந்த
அரைகுறை அறிவை
பூரண அறிவாக்கு
அழாதே எழு

சிரி
மகிழ்
பூரித்துப்போ
Whenever I chat with anyone else
I feel like I am not chatting through my own language
Whenever I laugh with anyone else
I feel like I am not laughing through my own heart
Please don't ever give myself
Back to me
Though these seems to me so funny
I like them so much

Love you forever
அதேதான் என் அன்பே
உன் குரலில் நான் கரைகிறேன்
உன் குழலில் நான் கரைகிறேன்
உன் விழியில் நான் கரைகிறேன் 
உன் மொழியில் நான் கரைகிறேன்
உன் விரலில் நான் கரைகிறேன்
உன் வளைவில் நான் கரைகிறேன்
உன் இதழில் நான் கரைகிறேன்
உன் தமிழில் நான் கரைகிறேன்
உன் கழுத்தில் நான் கரைகிறேன்
உன் கவியில் நான் கரைகிறேன்
உன் அழகில் நான் கரைகிறேன்
உன் அணைவில் நான் கரைகிறேன்
இன்னும் நான் கரைகிறேன்
உன் எதிலும் நான் கரைகிறேன்
ஆயினும் என் அன்பே
இத்தனை இத்தனையாய்
நான் இப்படி இப்படியாய்
கரைந்து கரைந்து
உருகும்போதும்
எப்படி எப்படித்தான் என் ஆயுள்
இப்படி இப்படியாய்க் கூடுகிறதோ
என்று
அந்தச் செப்படி வித்தை
அறியாதவனாய் அதிசயிக்கிறேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
மகிழ்ச்சி மொட்டுகள்
பூக்களாய் உடைந்து
மகரந்தம் சிந்தும்போது
தூக்கம் 
தானே வரும்

ஆனால்
தூங்க மனம் வருமா
என்று தெரியாது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
ஹார்மோனின் தவிப்புகள்
காதலுக்கு உகந்தவை
கவிதைகளுக்கும்
ஏனென்றே அறியாமல்

ஏனென்றே அறியாமல்
விழிப்பு வந்து
உறங்காமல் கிடக்கும்
இரவுகள் எதைச் சொல்கின்றன?

ஓடு ஓடென்று பணிச்சுமையில்
ஓடித்திரியும் உனக்கு
உனக்கே உனக்காக நேரத்தை
நான் இப்போது தருகிறேன்

என்னில் படுத்துக்கொண்டு
என் மடியின் அமைதியில்
உன்னை நீ யோசி
என்று சொல்கின்றனவா?

திரும்பிப்பார்
உன் பயணத்தில் நீ
எங்குமே செல்லவில்லை

நின்ற இடத்திலேயே நிற்கிறாய்
இதற்கு ஏன் நீ ஓடவேண்டும்
என்று கேட்கின்றனவா?

எதுவும் யாருக்கும் புரிவதில்லை
அவரவர் அவரவரின்
அழிச்சாட்டியங்களைக்
கடைவிரிக்கத்தான் வருகிறாரேயன்றி
நல்லன கொள்வதற்காக
ஒருவருமே வருவதில்லை

இதில் கூடும் தளமென்ன
உரைக்கும் கருத்தென்ன
என்று புரியவைக்கின்றனவா?

பசிக்குமுன் புசிக்கிறாய்
காண்டாமிருகங்களை விழுங்கிவிட்டு
இரவின் அமைதிப் படுக்கைக்குள் நுழைகிறாய்
பட்டினியாய் வயிற்றுக்கு
ஒருநாளும் ஓய்வு தருவதில்லை

சட்டென ஒருநாள் விழுந்துவிடப் போகிறாய்
எச்சரிக்கத்தான் எழுப்பிவிட்டேன்
என்று சொல்கின்றவா?

எழுந்ததும்
மீண்டும் கண்ணிறுக்கி முயன்று உறங்காமல்
ஏன் இப்படி நடு இரவிலும் உன் எண்ணங்கள்
தறிகெட்டு ஓடுகின்றன என்ற
விமரிசனமும் கரிசனமுமாய்
என்னுடம் உறங்கத் தவிக்கின்றனவா?
இது
முறையா சொல்

இப்படித்
தட்டுத் தடுமாற
விட்டுவிட்டுச்
சட்டென
விடைபெறுவது
தேவ தேவதைகள் சாட்சியாக
சரியா சொல்

உனக்காக
ஏங்கிக் காத்திருந்த
நடுக்கப் பொழுதுகள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

உனக்காக
உறக்கம் துறந்துத் தவித்திருந்த
இரவுப் பொழுதுகள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

உன்
கதகதப்புச் சுகம்பெறக்
கடுந்தவக் கோலங்கள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

வந்தது
வந்ததாய் இல்லாமல்
மாயமாய்
மறைந்துபோகும் நிலை
துரோக இழிநிலையல்லவா
சொல்

பச்சைப்பசும் இலைகளும்
கண்ணீர் கேட்டுப்
பரிதவித்து உதிர்கின்றன
சினங்கொண்டு சிவக்கின்றன

இத்துயர் காணும் நெஞ்சின்றி
பறவைகளும் பரிதவித்து
நெடுவானம் பறக்கின்றன காண்

போதுமா போதுமா
கனடியக் கடுங்குளிரின்
கொடுந்துயரில் கிடந்துழலச்
சன்னமாய்ச் சபித்துவிட்டு

இப்படி நீ மட்டும் தப்பிப் பிழைத்து
விடைபெறுவது நியாயமா
சொல்

கோடையே கோடையே
கனடியப் பசும்பொன்னெழிற்
கோடையே

இப்படி நீ மட்டும் தப்பிப் பிழைத்து
விடைபெறுவது நியாயமா
சொல்

நினைத்துப் பார்க்கிறேன் - என் பிறந்தநாளுக்காக - 2005 08 10

** பிறந்தநாள்.... பி..ற..ந்..த..நா..ள்.. **
புகாரி
டொராண்டோ, கனடா
பிறந்த தேதி: ஆகஸ்ட் 10
புகாரிக்கு வாழ்த்தனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளவும்:
buh...@gmail.com
இதோ, அன்புடன் சார்பில், அன்புடன் அன்பர் காந்தி ஜெகநாதனின் வாழ்த்து மடலும், நம் புலவர் இரவா-கபிலன் அவர்களின் கவிதையும், புகாரியின் நெருங்கிய நண்பரான கவிஞர் சேவியரின் கவிதையும்! வாழ்த்து முத்துக்கள் தந்த மூவருக்கும் என் நன்றிகள்!
* * * * *
பிறந்த நாள் வாழ்த்து
~~~~~~~~~~~~~~~~~~
இதயங்களை 'அன்பால்' இணையத்தில் இணைத்த புகாரி அவர்களுக்கு,
உதயமாகும் இப்பிறந்தநாளில் வாழ்த்து அனுப்பவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
காண்பதற்கு மட்டும் அன்பான தோற்றமன்று,
பேச்சிலும், செயலிலும் அன்பைக் காட்டுவதில்
புகாரிக்கு நிகர், புகாரியேதான்!
வீண் வர்ணஜாலங்களை எல்லாம் காணமுடியாது
ஆனால், நகைச்சுவை உணர்வு இழையோடும்
அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்
ஒவ்வோரு நொடிப் பொழுதும்!
"தமிழை மறப்பதோ தமிழா..?" - புகாரி
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப்
போனவனன்றோ?
........
வா தமிழா...
நல்ல தமிழில் நாம்
நாளெல்லம் பேசுவோம் வா...
தமிழை நேசிக்கும்
தமிழை சுவாசிக்கும்
தஞ்சைத் தமிழனை
வாழ்த்த வார்த்தையின்றி
அன்புடன் சார்பாக நம் அனைவரின் வாழ்த்துக்களையும்
அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
~காந்தி ஜெகநாதன்~
* * * * *
புலவர் இரவா-கபிலன் அவர்களின் கவிதை:
                          வாழ்த்துகிறேன்!
                                              --- இரவா-கபிலன்

           கவிதையிலே மனமெழுதி
                           காயப் படுத்துவான்! - புகாரி,
                           காலை மாலை வேளைகளில்
                           கனவை உடுத்துவான்!
           புவியினிலே நிலவுபோன்ற
                           பொன்னு மேனிதான்! - புகாரி,
                           போகும் வழி காதல் மொழி
                           துள்ளும் கூனிதான்!
           கூவுகின்ற குயிலுபோல
                           குரலும் இனிமைதான்! - புகாரி,
                           குண்டுமேனி வண்டிபோல
                           நடையும் ஒயிலுதான்!
           காவிகட்டும் ஞானிபோன்று
                           கண்ணின் ஒளியிலே - புகாரி,
                           காட்டுகின்ற நயனமெலாம்
                           கவிதை மொழியில்தான்!

           இரவினிலே ஒளிருகின்ற
                           மின்னல் கவிதைகள் - புகாரி,
                           இதயம் மீறும் சொற்குவிப்பில்
                           மனதுள் திவலைகள்!
           அரகரவோ கரகரவோ
                           அவனுக் கில்லையே! - புகாரி,
                           ஆற்ற்ங் கரை மேட்டுக் குடி
                           மணக்கும் முல்லையே!
           பெருகிவரும் அலைவடிவாய்
                           அன்பின் வடிவுதான்! - புகாரி,
                           பேச்சுக் கலை கற்றதெலாம்
                           மூச்சு வடிவுதான்!
           கூரையிலா வானத்திலே
                           ஊரைக் கூட்டுவான்! - புகாரி,
                           கொட்டமிடும் கொட்டகையில்
                           சட்டம் இயற்றுவான்!

           கணினியிலே புகுந்துகொண்ட
                           ஒரத்த நாட்டனும் - பெற்ற
                           கல்வியெலாம் தமிழ்நிலத்தில்
                           காட்சிப் படுத்துவான்!
           பணிவுடைய புகாஅரியைப்
                           பற்றும் வயதுதான் - அவன்
                           பள்ளியிடம் தமிழகத்தின்
                           துள்ளும் உறவுதான்!
           வணிகமிலா வார்த்தைகளில்
                           வாழும் வாழ்வுதான் - புகாரி,
                           வாழ்க்கையிலே பெறற்கரிய
                           பேரும் புகழுந்தான்!
           அணியணியாய் வரிசைபெற
                           வாழ்த்து கூறுவேன்! - புகாரி,
                           ஆண்டுபல வாழ்ந்திருக்க
                           மீண்டும் கூடுவேன்!
* * * * *
கவிஞர் சேவியரின் கவிதை:
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நேசக் கோட்டைக்குப்
பரவசப் படிக்கட்டுகளில்
பாதை அமைத்திருக்கும்
இனிய புகாரி,
என்ன சொல்லி வாழ்த்துவேன்.
கலையாத
தமிழ் மூட்டைகளை
பாலைவன தேசத்தில்
அலைந்து திரிகையிலும்
சுகமெனச் சுமந்ததையா ?
கனடாவின்
அவசர வீதிகளிலும்
சிந்தாமல் சிதறாமல்
தளும்பத் தளும்ப
கவிதை சுமந்ததையா ?
காரோட்டும் நேரத்திலும்
தேரோட்டப் போய்விடுமே
அந்த
நீரோட்ட நெஞ்சையா ?
இல்லை,
யார்வீட்டுப் பூ பூப்பினும்
பாராட்டப் போய்விடும்
உனது
பார் போற்றும் குணத்தையா ?
எதைச் சொல்லினும்,
சொன்னது கையளவு
சொல்லாதது உலகளவென
எனக்குள்
மனசு அணை உடைக்கிறது.
நேசம் கரை கடக்கிறது.
உனது கவிதைகளில்
கலந்து போவேன்.
ஆயினும்
கரைந்து போவது
உன் மெல்லிய மனசில் தான்.
உன் கவிதை
கனடாக் கடலிலும்
அமிர்தம் கடைந்தெடுக்கும்.
உன் நேசமோ
உடலைக் குடைந்து
உயிரின் சொடுக்கெடுக்கும்.
அதெப்படி புகாரி
உங்களால்
கனடாவில் கால்வைத்துக் கொண்டே
இதயம் நீட்டி
இந்தியா தொட முடிகிறது.
தோளில் ஆங்கிலத்தையும்
மனசில் தமிழையும்
தொய்வில்லாமல்
தூக்க முடிகிறது.
எனில்
பழமொழி ஒன்று
செத்ததாகிறதே
ஒரு உறைக்குள் இரண்டு கத்தி
சாத்தியமாகிறதே.
அதெல்லாம் போகட்டும்
மில்லியன் டாலர் கேள்வி
மனசுக்குள் முட்டுகிறது.
கேட்கலாமா என்றால்
நாவு
உள்நாக்கில் ஒட்டுகிறது.
கேட்டு விடுகிறேன்.
அதெப்படி உங்களால் மட்டும்
ஒரு கையால் காதலை வரையும்
அதே நேரத்தில்
இன்னொரு கையால்
போர்க்களத்தையும் புரட்ட முடிகிறது ?
அதெப்படி
உங்கள் தோட்டத்தில்
மட்டும்,
காய்ந்து விடாத கவிதைகள்
காய்த்துத் தொங்குகின்றன.
அதெப்படி
உங்கள் கடிகாரம் மட்டும்
கவிதைகளை
அசைபோடும் ஆர்வத்தில்
அசையாமல் நிற்கிறதா ?
வண்ணத்துப் பூச்சியின்
மேல் அமர்ந்த
மெல்லிய மல்லிகையாய்
மிதக்கிறது உன் மனசு.
ஆனாலும் அதற்குள்
போக்ரானும்
உடைத்து விட முடியாத
உறுதியான மனது.
பனித்துளிக்குள் இளைப்பாறும்
சிறு
குளிர்த்துண்டு போல
உன் நேசத்தின் துடிப்பு.
வெளிக்காட்டினாலோ
சீனச் சுவராலும்
சிறைப்பிடிக்க முடியாத
பெருங்கடலின் வெடிப்பு.
கவிதை
உன்னை எனக்கு
அறிமுகப் படுத்திய
அடையாள அட்டை.
இப்போது
நாம் சந்தித்துக் கொள்ள
அடையாள அட்டைகள்
தேவைப்படுவதில்லை.
சந்தப் புலிக்கு
சந்தத்தில் கவியெழுதையில்
வந்த கிலிக்கு
ஆறுதல் சொல்லிவிட்டு
சந்தத்திலேயே
வாழ்த்துகிறேன்.
புன்னகை இதழ்களில் பூநீட்டும் - உன்
இருவிழி திருவிழாத் தேரோட்டம்.
உயிருக்குள் நேசத்தின் நீரூற்றும் - உன்
இதயத்தை ஊரே பாராட்டும்.
பிறப்பின் நாளது கொண்டாட்டம் - உன்
சிறப்பினை மனமது கொண்டாடும்.
இன்றைய தினத்துப் பூபாளம் - அது
என்றும் நின்றே ஆளட்டும்.
உள்ளில் கள்ளம் கொள்ளாமல் - உன்
சொல்லில் கபடம் இல்லாமல்
நெஞ்சில் வஞ்சம் எஞ்சாமல் - நீ
வாழ்வாய் என்றும் அஞ்சாமல்.
வாழ்த்துக்களுடன்
சேவியர்
* * * * *
புகாரிக்கு வாழ்த்தனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளவும்:
buh...@gmail.com


நண்பர்கள் இல்லா நேரங்களில்
தனிமையின் சோகத்தில் தவிக்கும் நேரங்களில்
அன்புடன்தான் ஆறுதலாய்
ஆன்மாவுக்குள் அமிர்தாஞ்சன் தடவுகிறது
என்னை
இணைத்ததற்காக வாழ்த்துகிறேன்
என்
வாழ்த்துக்களையும் இணைக்கிறேன்

பத்தில் பிறந்த சொத்தே!
இணையம் தாண்டி
இதயம் இணைத்தவனே
கன்னித்தமிழை
கனடாவுக்கு கடத்தியவனே
உனக்கு என்
பிறந்தநாள் வாழ்த்து
புகாரியே!
ஓரு

பூ காரியின்
கூடை மணம்போல
உன் நாவில்
கவிதை மணக்கட்டும்
தவறாக நினைக்கவேண்டாம்
கவிதைக்கு
ஒருமைதான் பெருமை
ஒன்று தெரியுமா?
நானும் ஞானி
நீயும் ஞானி
ஆம்
நான் பெயரில்
நீ கவிதையில்

குழுமம் அமைத்து
குடும்பம் கொடுத்தாய்
இந்தக்
குடும்பக் குழுமம்
ஒருநாள்
ஒன்றாய் சந்திக்கும் நாளுக்காக
அமெரிக்க விசாவிற்காக
வாசலில் காத்திருக்கும்
மாணவர்களைப்போல
ஏக்கத்தோடு காத்துக்கொண்டு இருக்கிறேன்.
நம் நட்பு
காதலும்- கண்ணீரும் போல
என்றும்
பிரியாமல் இருக்கட்டும்

           இதயம் நெகிழ்வுடன்

             ரசிகவ் ஞானியார்


(அன்பர்களே, புகாரியின் பிறந்தநாளுக்குக் கவிஞர் சேவியரிடமிருந்து இன்று
வந்த இன்னொரு வாழ்த்துக் கவிதை...)
.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தஞ்சம் என்பது தமிழில் - உந்தன்
நெஞ்சும் நேசத் தழலில்
விஞ்சும் சந்தம் சிந்தும் - உந்தன்
கொஞ்சும் தமிழின் நிழலில்.
அஞ்சும் என்ணம் என்றும் - உன்னில்
பிஞ்சும் இன்றிப் போகும்
எஞ்சும் மொழியும் கூடும் - உந்தன்
துஞ்சும் விழியும் பாடும்.
மிஞ்சும் நேசம் நோக்கின் - சர்ப்ப
நஞ்சும் தேனாய் மாறும்
பஞ்சும் பளுவாய் மாறும் - அக்கினி
குஞ்சும் இவனுள் தஞ்சம்
சேவியர்

16 இதற்கும் புன்னகைதானா



உலகத்தையே தன் அகிம்சையால் வென்றெடுத்தார் அண்ணல் காந்தி
வன்முறையோ அவரைத் தன் தோட்டாக்களால் கொன்றுபோட்டது


*
முதன் முதலின் பத்திரிகையில் வெளியான என் கவிதை இதுதான்

*

இதற்கும் புன்னகைதானா?

*
அண்ணலே
மண்ணுயிர் யாவுக்கும்
பிறவிகள் உண்டாமே

உனக்கொரு
பிறவியில்லையா

தினம்
உன்னைத் தேடித்தேடி
என் கால்களில்
பாதங்களே இல்லாமல்
போய்விட்டன

கோட்சேக்களெல்லாம்
மீண்டும் மீண்டும்
பிறவிகளெடுத்து விட்டனர்

உனக்கு மட்டும்
பிறவியே இல்லையா

அண்ணலே
இன்று
என்னுடைய மனுவையும்
கேள்

நீ
பிறவி எடுக்காதே

கோட்சேக்களுக்கே சொந்தமாகிவிட்ட
இந்த மயாணத்தில்
நீ ஜெனித்ததுமே
உன் ரோஜா இதயத்தைச்
சல்லடைக் கண்களாய்த்
துளைக்க
துப்பாக்கிகள்
துடித்துக் கொண்டிருக்கின்றன

என்ன
இதற்கும் புன்னகைதானா?



இரண்டும்
உன்னுடையவைதான்

இரண்டிற்கும்
என்மீது
கொள்ளைப் பிரியம்தான்

ஆயினும்
மேலுதடு
வசந்தநிலத் தேனாய்
வழிய...

கீழுதடு மட்டும்
ஏனடி இப்படிக் கொதிக்கின்றது
பாலைவனக் கோடையின்
பேரீச்சங்கனியாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * *

உன் கன்னத்தில்
படுத்துறங்க
முடிவெடுத்துவிட்டேன்

எந்தக் கன்னத்தில் என்று
முடிவெடுக்கத்தான்
முடியவே இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

20160925 முகநூல்

*
நாம்
நம் தமிழை
வேறு இனத்திடமும் சென்று
என்றுமே
திணித்ததில்லை

எங்களிடமே
அதைக்
கட்டிக்காக்கத்
திராணியற்றுத்
திணறுகிறோம்
*


நிசத்தில் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கைதான். ஆனால் கற்பனையில் வாழ்வது பல்லாயிரம் வாழ்க்கை அதுதான் இலக்கிய வாழ்க்கை. அப்படி வாழ்பவன்தான் கவிஞன் கலைஞன்

*

Murugan Arumugam >>>>மந்திரங்களை உச்சரிக்கும்போது நம் உள்ளுக்குள் நிகழும் அதிர்வுகள் நமக்குள் மாற்றம் உருவாக்குபவை. அதன் அர்த்தம் தெரியாவிட்டாலும் பயன் தரும்<<<<<
ஒருவரின் மனம் அப்படி ஒரு நம்பிக்கையில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அது நெடுங்காலம் நீடிக்காது.
ஒரு மூதாட்டி மருத்துவரைப் பார்க்க வந்தாள்.
என்ன செய்கிறது என்று கேட்டார் மருத்துவர் தலையில் ஒரே வலி என்றால் மூதாட்டி. சரி என்று ஸ்டெத்தை எடுத்து அவள் மார்பில் வைத்து இதயத்துடிப்பைச் சோதிக்க முயன்றார் மருத்துவர்.
டாக்டர் எனக்கு தலையில்தான் வேதனை. என் தலையில் வைத்துப் பாருங்கள். என் நெஞ்சாங்கூடு நன்றாக வே இருக்கிறது என்று கோபமாகச் சொன்னாள் மூதாட்டி.
மருத்துவரும் தலையில் ஸ்டெத்தை வைத்துப் பார்த்துவிட்டு, தலைவலிக்கு மருந்துகொடுத்தார். சட்டென்று மூதாட்டியின் தலைவலி பூரண குணமாகிவிட்டது ;-)
மருத்துவர் முட்டாள் அல்ல, மன இயல்பை உணர்ந்த சாதுர்யக் காரர் 

*
இஸ்லாம் என்பது மதம். மதத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
சாதியை மாற்றமுடியுமா?
கிருத்தவர்கள் இஸ்லாமியர்கள் போன்றே இந்துக்களும்.
ஆனால் இந்துக்களில் சாதி இருப்பதால் யாரும் இந்துமதத்துக்குள் நுழையவே முடியாது. இதுபற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
ஆரியர்களின் வருகையின் பின்னரே தமிழர்களுக்கு இந்துமதம் வந்தது.
காலகட்டம்தான் வேறே தவிர எல்லோரும் மதம் மாறியவர்களே! அதில் பிழையில்லை. இன்றும் மாறலாம். என்றும் மாறலாம். ஏனெனில்

மதம் என்பது
மூர்க்கம் அல்ல
மார்க்கம்
*

மதம்
என்பது
மூர்க்கம்
அல்ல
மார்க்கம்
*

சிலருக்குப் புகழ்ந்து தரப்பட்ட பட்டங்களும் பின்னாளில் சாதியானது. அது அந்தக் காலம்.
இந்தக் காலத்தில்...
கலைஞர் என்று ஒரு சாதி வரமுடியாது.
உலகநாயகன் என்று ஒரு சாதி வரமுடியாது
இசைப்புயல் என்று ஒரு சாதி வரமுடியாது
ஏனெனில் இன்று அறிவு வளர்ந்தவர்களே அதிகம். ஆனாலும் பழயனவற்றை மனரீதியாக்ப் பற்றிக்கொண்டு எப்படி விடுவது என்று அறியாமல் தவிக்கிறார்கள்.

*
Ananthi Ananthi இது எப்போ ! இப்படி எல்லாம் அடுத்தவர்களை வேதனைப்படுத்துவதால் இவர்களுக்கு என்ன லாபம்<<<<
மனித வக்கிரம். அறம் ஆரம்பம் முதலே அழுத்தமாகப் போதிக்கப்படாததின் காரணம். பணம் சம்பாதிக்க கல்வியைப் பயன்படுத்துகிறார்கள். உலக அமைதி வாழ்க்கைக்கு அறவாழ்க்கைக்குக் கல்வி பயன் தரவே இல்லை

*

ஒன்றாக தீண்டாமையில்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
ஆரியம் திராவிடம் மட்டுமல்ல, சீனம், ஈரோப், அரபு எல்லாம் தீண்டாமை இல்லாமல் இருக்க வேண்டும். உலகம் ஒரு குடையின் கீழ் ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருக்க வேண்டும்

*
ஆரியர் திராவிடர் கலந்து வாழத் தொடங்கிய காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், பல கலாச்சாரங்கள் பண்பாடுகள் காலப்போக்கில் கலந்தநிலை அடைவது இயற்கை.
இன்று கனடாவில் வெள்ளைக்காரனுக்கும் நம் பிள்ளைகளுக்கும் எந்தக் கலாச்சார வேற்றுமையும் இல்லாத நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள்.
என்றால் வெள்ளைக்காரனும் தமிழனும் ஒருவர்தான் என்று முறையிடலாம் சில காலத்தில்
*

கல்வி என்பது அறம் போதிக்க என்றும் ஆகவேண்டும், வெறுமனே வருமானத்திற்கான கருவியாக இருந்தால் உலகம் உருப்படாது

*
Gnana Suriyan

>>>
பிறப்பின் வம்சம் அவர்களது வாழ்வியல் முறையில் வெளியில் அடையாளம் காணப்படுகிறார்கள்
<<<

ஒரே வீட்டில் ஒரே தகப்பன் தாய்க்குப் பிறந்தவர்களின் வாழ்வியல் முறைகள் மாறுபாடானதாக இருக்கும் நண்பரே 

*
Gnana Suriyan

 >>>இரத்தமாதிரியில் தெரிவதல்ல சாதி<<<<
ஒரு பத்து பேரை உங்கள் முன் நிறுத்தினால், அவர்களைப் பார்த்து இவர் இன்ன சாதி என்று சொல்லிவிடுவீர்களா நண்பரே 

*
Gnana Suriyan யார் சொன்னாங்க நயன்தாரா இந்துவாக இடைப்பட்ட காலத்தில் மாறினாரே
எந்த சாதியில்?
Gnana Suriyan இந்துவாக சாதி என்பது தேவையல்ல
என்றால் அவர் சாதியை என்னவென்றுதான் அழைப்பீர்கள்?
Gnana Suriyan அவருக்கு சாதிய அடையாளம் இருந்தால் அதனைக்கொண்டு அழைக்கலாம்
இல்லையெனில் அழைக்க இயலாது
அவர் யாரைத் திருமணம் செய்துகொள்வார்?
Gnana Suriyan அவர் யாரை விரும்புகிறாரோ அவரை யார் விரும்புகிறாரோ அவரை
அவர் எந்தச் சாதிப் பெண்ணையும் போய் பெண் கேட்க முடியுமா?
அவருக்குத்தான் எந்த சாதி அடையாளமுமே இல்லையே ;-)
Gnana Suriyan அது அவரவர் சொந்த விருப்பம். அப்பெண்ணும் அவரின் தந்தையின் சொந்த விருப்பம்
சாதியற்றவரை மணம்முடிக்க அவர்களுக்கு விருப்பம் எனில் செய்வதில் தவறில்லை
விருப்பமில்லையெனில் அதுவும் தவறில்லை
Gnana Suriyan விருப்பமில்லை என்பது தவறில்லை என்றால் அவருக்குப் பெண் கிடைக்காத நிலையையல்லவா தரும்:-)
இந்து மதத்துக்குள் மாறி வந்தவர்கள் திருமணமே செய்யாமல் வாழ வேண்டுமா?
இதற்குப் பதில் சாதிகள் இல்லை என்றீர்கள் என்றால் அவர் எத்தனை ஆனந்தமாய் இந்துமதத்தில் இருப்பார்?
இப்போது அவரை அனாதை ஆக்குகிறீர்களே? அவர் ஏன் மதம் மாறி இந்துவாக ஆகவேண்டும்? தண்டிக்கப்படவா?












                       
;-)


*
*

20160920


நீ 
அழுக்கா புனிதமா
*
கழிப்பிடத்திற்கும்
தொழுகைக்கும்
ஒன்றே தேகம்


*
தொழுகை என்பது
உடலையும் மனதையும்
தூய்மைப் படுத்திக் கொள்வதற்கான
தொடர்ப் பயிற்சி

*
இன்றைய
உன்
வாழ்க்கை
உன்னுடையதல்ல
வணிகர்களினுடையது

*

எல்லோருமே கிழித்த கோட்டைத் தாண்டும் சீதைகளாய்.....
ராவணனுக்கு யாரைத்தான் கவர்ந்துசெல்வது என்றே அறியாத பெருங் குழப்பம்....
மூக்கறுபட்ட நிலையிலேயே வாகனச் சட்டங்கள்...
மாயமான்களாகக் கட்டற்ற மூர்க்கச் சுதந்திரம்...
வனம்தான்... வாசம்தான்... வனம்விட்டு எப்போது வருவார்களோ நாட்டுக்குள்...
ஊரும் ஊர்திகளும் நடு இரவுக் கொடுங்கனவுகளாய்...
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு எத்தனைமுறைதான் எழுவது

*
அரசியலைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அரசியலுக்குள் நல்லவர்கள் வரவேண்டும்
மதவெறிகளைச் சரிசெய்ய வேண்டுமென்றால் மதங்களுக்குள் உள்ள நல்லவர்கள் பேசவேண்டும்

*
பாரபட்சம் பார்த்து வந்தால் அது அற அன்பு கிடையாது.
நாச திசையில் பயணப்பட்டால் அது அற அறிவு கிடையாது
அறம்தான் அனைத்திற்குமான மையப்புள்ளி
அறம் சொல்லித் தருவது மட்டுமே நல்ல பாடசாலை, நல்ல மார்க்கம், நல்ல வீடு, நல்ல நாடு, நல்ல உலகம்!
*
நீரைவிட
ரத்தம்
மலிவானது
காவிரி

*
தீண்டாமை தீண்டப்படாது
சாதி சாதிக்காது
மூடநம்பிக்கை மூடப்பட்டிருக்கும்
ஏழ்மை ஏழ்மைப்பட்டிருக்கும்
இஸ்லாம்
*
குர் ஆனை பொருள் தெரியாமல் மனப்பாடமாக ஓதிக்கொண்டே இருந்தால் அதுவே சொர்க்கம் செல்லும் வழி என்று நினைப்பது மூடநம்பிக்கை!
பொருள் தெரியாமல் ஓதப்படும் எதுவும் எதையும் தராது.
பொருள் தெரிந்து ஓதப்படும் ஒற்றைச் சொல்லும் இறைவனின் அருகாமைக்கு அழைத்துச் செல்லும்

மூட நம்பிக்கை களைவோம்!
ரமதான் மாதம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களால் மீண்டும் பலமுறை குர் ஆன் பொருள் தெரிந்து ஓதப்படுகிறது. அவர்களுள் ஒருவராய் இணைவதே மார்க்கம் பேணுவது!
*
ரத்த ஆற்றிலேயே நீந்தாமல், கொஞ்சம் நல்லது கெட்டதையும் பார்த்தால்தானே ரத்த ஆறு நிற்கும்?
எந்த ஆட்சி மழை நீரைச் சேகரித்தது?
எல்லா ஏரிகளையும் பிளாட் போட்டுத்தானே விற்றது?
குழியை நீங்களே தோண்டிக்கொண்டு, பழியை யார் மீதும் போடவேண்டாம்
*

*
கருநாகங்களை முடக்க வேண்டியவர்கள் அறம் சார்ந்து ஆட்சியில் இருப்பவர்கள்.
இன்று அறம் சார்ந்த ஓர் அரசைச் சொல்லுங்கள் நண்பரே
இன்று எல்லாமே கருநாகங்களில் பிடியில்தான். அதில் மயங்கித்தான் நீங்கள் பேசுகிறீர்கள்>
கருநாகங்களை எதிர்த்து அதை அழிக்க எது சரியான வழியென்று அறிந்து அதையே உலகுக்குச் சொல்லும் நல்ல மனம் உங்களிடம் வளரவேண்டும்.
அதை விட்டுவிட்டு அறம் சொல்ல வந்த மார்க்கம்மீது எகிறுவது கருநாகங்கள் உங்களை ஆளுகின்றன என்பதையே காட்டுகின்றது
*
வேலு.ஞானம். பெருஞ்சேரிரி >>>>கருநாகங்கள் நாச வேலைகளுக்கான பயிற்சியில் ஈடுபடும்போது அல்லாஹூஅக்பர் என்று முழங்குகிறார்கள்.
நாச வேலைகளுக்கான ஆயத்த பணிகளின் போது அல்லாஹு அக்பர் என்றே முழங்குகிறார்கள்.
நாசவேலைகளை செய்து முடித்துவிட்டும் அல்லாஹூ அக்பர் என்றே முழங்கிறார்கள்.
நாச நிகழ்வுகளில் பலியாகிறவர்களும் அல்லாஹூ அக்பர் என்று முழங்கியபடியே பலியாகிறார்கள்.
பலியானவர்களுக்கான சிறப்பு தொழுகையிலும் அல்லாஹூ அக்பர் என்றே முழங்குகிறார்கள்.
என்னங்க இது.
யாருங்க இந்த அல்லா?
எதை தவிர்க்கலாமோ
எதை தடுக்கலாமோ அதையெல்லாம் விட்டுவிட்டு ...
போங்க.. போங்க.<<<<
நீங்கள் குழந்தைத்தனமாகக் கேட்கிறீர்களா? அல்லது உங்களின் சிந்தனையின் உயரமே அவ்வளவுதானா?
பசுத்தோல் போர்த்திய புலி தன்னைப் பசு என்று அழைத்துக்கொள்ளுமா அல்லது புலி என்று அழைத்துக்கொள்ளுமா?
அடிப்படையே தெரியவில்லையே உங்களுக்கு நண்பா, வருந்துகிறேன்.
விழித்துக்கொள்ளுங்கள்!
எது சரி எது பிழை என்று அறிவது பகுத்தறிவு. அது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் வேண்டும்

*