சிரியா காட்சிகள்

முஸ்லிம்
முஸ்லிமைப்
பிய்த்துத்
தின்கிறான்

பச்சிளம்
பிள்ளைகளைக்
கொத்துக் கொத்தாக
கொன்று
புதைக்கிறான்

வேதியல் வெடியால்
திணறிச்சாகிறான்

சீறிப் பாயும் பூனைகள்
இரட்டைக்
காட்டேறிகளின்
நெருப்பு நாக்குகளில்

சோதிக்கப்படும்
ஆயுதங்கள்
யாருக்கோ விடும்
சவால்களாய்
இருக்கலாம்

நாடுபிடிக்க
நடக்கும்
ஓநாய்க் கூத்தாய்
இருக்கலாம்

சாவதென்னவோ
சிரியாதானே

சிரியா போன்ற
சிந்தனை சிதைந்த
தேசம்தானே

அன்புடன் புகாரி

ஸ்ருதி மணநாள்

திருநெல்வேலி திருநிறைச் செல்வன்
கார்த்தி கார்த்தி
உன்
பருவ ஆகாயத்தில்
பறந்து வந்தாள்
ஒரு பட்டு நிலா
அவள்
தாளலயம் கூட்டி
ராக மழை சிந்தும்
ஸ்ருதி ஸ்ருதி
*
வானம் வையம் நெடுகிலும்
நறுமண மலர்கள் தூவி
என் நெஞ்சின்
நிறைவான வாழ்த்துகள்
குற்றாலம் வற்றலாம்
வற்றாது உங்கள் தேனருவி
கார்முகில் கலையலாம்
கலையாது உங்கள் கனவுகள்
வானவில் நிறம்மாறலாம்
மாறாது உங்கள் காதலுயிர்
வானச் சூரியனும் அணையலாம்
அணையாது உங்கள் வாழ்க்கைத்தீபம்
அன்று
தகவலும் புறாவும்போல
இன்று
செல்பேசியும் செவியும்போல
அன்று
வனமும் வேட்டையும்போல
இன்று
முகநூலும் லைக்கும்போல
அன்று 
கவிதையும் அரசவையும் போல
இன்று
கூகுளும் தேடமும் போல
அன்று
அறிவிப்பும் முரசும்போல
இன்று
வாட்ஸப்பும் ஃபார்வர்டும்போல
காலத்திற்கேற்ப
காதல் வாழ்வைப்
புதிப்பித்துக்கொண்டே
வாழ்க வாழ்க
பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு
நீக்கமற நிறைந்த நிம்மதிச் செல்வத்தோடு
கனவோடு நிறைவோடு கலையாத அன்போடு
வாழ்க வாழ்க
- அன்புடன் புகாரி
(அமெரிக்காவில் அழகாக நடந்த கார்த்திக் + ஸ்ருதி திருமண வரவேற்பில் நெஞ்சம் நிறைந்ததால் நிரம்பி வழிந்த வாழ்த்துச் சொற்கள்)
கடவுள் மாறிவிட்டாரா?

ஒருவர்
மதம் மாறினால்
அவர் கடவுளை
மாற்றிக்கொண்டதாக
நினைக்கிறார்

கடவுள்
ஒருவர் என்றால்
அவர் எப்படி மாறுவார்

செல்லும்
மார்க்கம்தான்
மாறும்

எல்லா நதிகளும்
கடலுக்கே

ஆனால்
அது செல்லும் வழியைச்
செம்மையாக்குவதே
மனதிற்கு
ஏற்றதாக்குவதே
வாழ்விற்கு
உகந்ததாக்குவதே
மதமாற்றம்

அன்புடன் புகாரி
பூவுலகம் நிறைத்துப்
புலம்பெயர்ந்து வாழும்
புதுப்பிஞ்சுகளின் நாவிலும்
தமிழ்
சர்க்கரைப் பொங்கலாய்ப்
பொங்கவேண்டும்

அதுவே எங்கள் திசை
அதுவே எங்கள் தேடல்
அதுவே எங்கள் பயணம்
அதுவே எங்கள் இலக்கு
அதுவே எங்கள் வெற்றி

அன்புடன் புகாரி
இன்று ஜனவரி 27
யூத இனப்படுகொலையின் நினைவு நாள்
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படையினரால், இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள்:
60 லட்சம் யூதர்கள்,
2 லட்சம் ரோமா ஜிப்சி நாடோடிகள்,
2.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள்,
9000 ஓரினச் சேர்க்கையாளர்கள்
உலகில் முற்றாக சர்வாதிகாரம் ஒழிய வேண்டும் சமத்துவமும் சகோதரத்துவமுமே பெருக வேண்டும்
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் அதிகார, அக்கிரம வர்க்கங்களும் வக்கிரங்களும் முடிந்துபோக வேண்டும்
அன்புடன் புகாரி
மிக நெருங்கி வந்துவிட்டோம் தமிழர்களே
தமிழ் இருக்கை இதோ இதோ
தமிழ் இருக்கையால் ஹார்வர்ட் பெருமையடையப் போகும் நற்பொழுது இதோ இதோ
இந்த அளவிற்கு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தை இதற்கு முன் யாரும் உலகறியப் பேசி இருக்க முடியாது என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு தமிழால் தமிழ் இருக்கையால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இன்று பேசப்படுகிறது.
உலகத் தமிழர் அனைவரின் விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி நிமிரும் ஆய்வுகளை ஹார்வர்ட் இருக்கை தரவேண்டும்.
அதை அறிவுசால் நம் தமிழ் உலகம் ஒவ்வொரு நொடியும் கவனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கும்.
தமிழைப் பற்றிப் பிடித்து ஹார்வட்டின் பெருமை இவ்வுலக அரங்கில் மேலும் உயர்ந்து வளரும் என்று நான் முழுதாக நம்புகின்றேன்
அன்புடன் புகாரி
Between 13th and 19 th century there are huge changes in tamil script, which we have accepted as evolution. Between now and 25th century, if there's further evolution to write க ங ச ஞ as "k" "n" "cha" or as क ण च or anything else, who is to say it won't happen.. -Sathis Toronto
சதீஸ், இந்து இந்தி இந்தியா என்ற திசையில் செல்லும் உங்கள் பேராசை அப்பட்டமாய்த் தெரிகிறது.
தமிழன் தமிழ் தமிழ்நாடு என்பதை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாற்ற முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விரைவில் புரிந்துகொள்வீர்கள்.
இந்த க ங ச ஞ வும் சரி क ण च வும் சரி எல்லாம் திசை மாறி abcd என்ற 26 எழுத்துக்குள் முடங்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம்.
அதற்குக் காரணம் பிஜேபி போன்றவர்களின் மொழி வெறியாட்டங்கள்தாம்.
இரண்டுபேர் அடித்துக்கொள்ளும்போது மூன்றாவது அறிவாளிதான் பயன்பெறுவான். இதை தமிழ்க் குழந்தைகளுக்கான கதை ஒன்றில் அழகாகச் சொல்லி இருப்பார்கள். குரங்கு பூனை அப்பம் கதை இங்கு எவருக்காவது தெரிந்திருக்கலாம்.
இந்தி ஒரு மூலையில் வாழட்டும் தமிழ் ஓரு மூலையில் வாழட்டும் தெலுங்கு ஒரு மூலையில் வாழட்டும் கன்னடம் ஒரு மூலையில் வாழட்டும் என்று மத்திய அரசு என்று உறுதியாய் முடிவெடுக்கிறதோ அன்றுதான் மாநில மொழிகள் எல்லாம் சிறப்படையும் பாதுகாக்கப்படும் மக்களாலும் உணர்ந்து போற்றி பயன்பாட்டில் நிலைக்கும்.
இந்திக்கும் தமிழுக்கும் இந்திக்கும் மலையாளத்திற்கும் இந்திக்கும் தெலுங்குக்கும் இந்திக்கும் பஞ்சாபிக்கும் சண்டை என்றால் அன்று வெள்ளைக்காரன் வந்ததுபோல இன்று ஆங்கிலம் உள்ளே வருகிறது.
இந்தியர்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் வேறென்ன நடக்கும்?
அன்புடன் புகாரி
அடுத்தவன்
பற்றையும்
பற்றென
நினைக்காதவனின்
பற்று 
பற்றே அல்ல
பற்றி எரியும்
கொடும் நெருப்பு
அன்புடன் புகாரி
ஹார்வர்டில் மட்டுமல்ல உலகின் அத்தனைப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்
தமிழ் இருக்கையின் பலன் என்ன என்று தமிழர்களாகிய நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் இருக்கை பலன் தந்துவிடப் போகிறது அதைத் தடுத்துவிட வேண்டும் என்று யாரெல்லாம் சிந்தித்துச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்
*
எங்கள்
உணர்வில்
உயிரில்
கலந்திருப்பது
தமிழ்
அதை
உங்கள்
சின்னஞ்சிறு
கைக்குட்டையால்
துடைத்தெறிந்துவிட
முடியாது
வீழ்வது
எதுவாக இருப்பினும்
வாழ்வது
தமிழாகவே இருக்கும்
தமிழர்தம்
நெஞ்சாங்குழிப்
பேழைகளில்
கவிஞர் புகாரி
அடுத்தன்
பற்றையும்
பற்றென
நினைக்காதவனின்
பற்று 
பற்றே அல்ல
பற்றி எரியும்
கொடும் நெருப்பு
அன்புடன் புகாரி
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

-பாரதியார்

201206 நெல்லை சந்திப்பு சினிமா பாடல்

விழிகளில் உதிருதே கனவும் துளியாக
உயிருமே சிதறுதே மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியே
    இவன் சிலுவை என்றானால்
அந்த கடவுள் கூட சிறையிலே 
    ஒரு கைதியாவானோ
            ...விழிகளில் உதிருதே


உண்மை இங்கே ஊனமோ
   கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
   முழு நிலவின் கற்பும் ஏலமோ



விதி செல்லும் பாதை மாயம்
  அதன் காலில் இவன் ஜீவன்

இவன் கூடு எங்கே கிளிகள் எங்கே
   வாழ்ந்த வாழ்வெங்கே
போதும் இது போதும்
   இந்தத் துன்பச் சுமை போதும்     
                              ...விழிகளில் உதிருதே

கலைந்து மாறும் காட்சியோ
   நிஜம் புதைந்துபோகும் சாட்சியோ
மாயம் நியாயம் ஆனதோ
   இவன் தெய்வம் தூங்கிப் போனதோ

கடல் நீரைப் போல கண்கள்
   அதில் கரையும் கனவுகளே
இவன் கனவு எங்கே காதல் எங்கே 
    உறவின் வாழ்வும் எங்கே

போதும் இது போதும்
   இந்த மரண நிழல் போதும்



==========================
பழசு:

விழிகளில் உதிருதே உயிரும் துளியாக
கனவுகள் சிதறுதே மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியே
    இவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் இருளிலே
    மனித வாழ்வு என்னாகும்
            ...விழிகளில் உதிருதே

உண்மை இங்கே ஊனமோ
   கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
   கவரி மானின் கற்பும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
   அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
   வாழ்ந்த வாழ்வெங்கே
போதும் இது போதும்
   இந்தத் துன்பச் சுமை போதும்     
                              ...விழிகளில் உதிருதே

தாழை மடலோ தீயிலே
   தாய் ஜீவன் சருகாய் சாயுதே
காலம் கோலம் போடுதே
   கண் நீரும் கடலை மூடுதே

சிறு ஓடைத் தென்றல் மீது
   சுனாமி மோதுவதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
   வாழ்ந்த வாழ்வெங்கே
போதும் இது போதும்
   இந்தத் துன்பச் சுமை போதும்     
                              ...விழிகளில் உதிருதே

=======================

உண்மை இங்கே ஊனமோ
கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
முழு நிலவின் கருவும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
வாழ்ந்த வாழ்வெங்கே

போதும் இது போதும்
இந்த துன்பச் சுமை போதும்          
                             
*

விழிகளில் உதிருதே வலியும் துளியாக
உயிருமே சிதறுதே மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியில்
அவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் விதியிலே
இவன் வாழ்வு என்னாகும்
           
*

தாழை மடலோ தீயிலே
தாய் ஜீவன் சருகாய் சாயுதே
காலம் கோலம் போடுதே
கண் நீரும் கடலை மூடுதே

சிறு ஓடைத் தென்றல் மீது
சுனாமி மோதுவதோ


200206 காமெடி பிரியாவிடை ரஹ்மதுல்லா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா
பாஸ்டனுக்குத் தான் போறியலா - இல்லை
பாஸ்டனையே வாங்கப் போறீயலா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா - நீங்க
நெனைச்சதெல்லாம் இப்ப நடக்குதய்யா
மனசு நெறஞ்சி போச்சு மாஷால்லா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா -                        (தனனானா தானேனனா....
ரஹ்மத்தெல்லாம் வந்து கூடுமய்யா - நல்ல
பரக்கத்த்தும் வந்து சேரும்மய்யா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா
வாழ்க்கை இன்னும் நல்லா ஒசரட்டும்யா - உங்க
வீட்டுக்குள்ள சொர்க்கம் பூக்கட்டும்யா - அதுக்கு
சொல்லிருங்க ஒரு பிஸ்மில்லாஹ் - சொல்லிப்
போய் வாங்க அந்த காஃபத்துல்லாஹ்

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா -                         (தனனானா தானேனனா....
ஒமரு பக்கம் நீங்க ஒதுங்காதீங்க - இந்த
ஒமரு சொல்லை நீங்க கேக்காதீங்க - அவரு
ஓடி வரச்சொன்னா வாராதீங்க - சொல்லும்
ஒரு பேச்சுக்கும் காதைத் தாராதீங்க 

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா
அப்போ அப்போ கனடா வாங்கய்யா - வந்து
அமெரிக்கா பரிசைத் தாங்கய்யா - உங்க
வாழ்க்கையெல்லாம் இனி நலம்தாய்யா - நாங்க
வாழ்த்துகின்றோம் இன்ஷால்லா

ரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா
செய்யது ரஹ்மதுல்லா (தனனானா தானேனனா....

201302 குழந்தை பாடல் - நத்தக்குட்டி

அஞ்சு குட்டிக் குரங்கு குதி குதின்னு
அத்தா மெத்தை மேல குதிச்சிருச்சாம்
ஒத்தை குட்டிக் குரங்கு காலொடஞ்சி
  ஓரமா உக்காந்து அழுதுடுச்சாம்

அத்தா வந்து அதட்ட
அம்மா குச்சை எடுக்க
ஆம்புலன்சு வண்டியும்
வந்துடுச்சாம்

ரெண்டு தையல் போட்டு
நாலு ஊசி குத்தி
எட்டு நாள் மருந்து
முழுங்குனுச்சாம்

இனி எந்தக் குரங்கும் மெத்த மேல
எப்பவும் குதிக்கக் கூடாதுன்னு
மாமா வந்து மடியில அள்ளியெடுத்து
அன்பா பண்பா சொல்லிட்டாராம்

நாலு குட்டிக் குரங்கு குதி குதின்னு
அம்மா மெத்தை மேல குதிச்சிருச்சாம்

மூணு குட்டிக் குரங்கு குதி குதின்னு
மாமா மெத்தை மேல குதிச்சிருச்சாம்

ரெண்டு குட்டிக் குரங்கு குதி குதின்னு
டாடி மெத்தை மேல குதிச்சிருச்சாம்

ஒத்தைக் குட்டிக் குரங்கு குதி குதின்னு
நத்தக்குட்டி மெத்தை மேல குதிச்சிருச்சாம்
 

201609 கேங்பிங் - காமெடி - ரசியா பிரியாணி பாட்டு

பட்டாசா வெடிச்சிக்கிட்டு
பல்லெல்லாம் இளிச்சிக்கிட்டு
பிரியாணிக் குயினுன்னா
மெட்ராசு ரசியாவாம்

ரிய்யாசுத் தட்டுல
ரெண்டு ரெண்டா இட்டாராம்

முண்டாசுக் கட்டிக்கிட்டு
மலையாளம் பறஞ்சிக்கிட்டு
நெஞ்சையெல்லாம் நிமித்திக்கிட்டு
நிஸ்ஸாரு வந்தாரம்

காட்டோரக் கரடிய
கண்டதும் ஒண்ணுக்குப் போனாராம்

மலக்கோட்டத் தங்கச்சி
மட்டன்கறி என்னாச்சு
பீப்புக்கு சிம்பூன்னா
ஆப்புக்கு அண்ணாச்சி

தாளாத பயத்துல
டெண்ட ரெண்டா பிச்சாச்சு

201607 கேம்பிங் - காமெடி - குழந்தைகள் கரடி பாட்டு

கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா (2)
ரக்கூனு மூஞ்சில - ரசத்த ஊத்தி உட்டோண்டா(2)
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா

சியானுக்கே தண்ணிகாட்டும் அயானப் பாருங்க - இவன்
ஆட்டத்தைப் போட்டிபோடும் ஹீரோ சொல்லுங்க
ஆஹா ஆஆஆ.... ஓஹோ ஓஓஓ..... (சியானுக்கே தண்ணிகாட்டும்...)
சின்னக் கையாட்டி சிரிக்கின்ற சிரிப்பப்பாருங்க (2)
இவனால-ரெஸ்டோலே-அட-ரெண்டுபட்டுப் போச்சுங்க

ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா

ஸ்மார்ட்போனும் ஸ்டுபிட்போனா - மாறிப்போச்சுடா - அந்த
வாட்ஸ்ஸ்ஸப்பும் ஃபேஸ்ஸ்புக்கும் ஊத்திக்கிச்சுடா
ஆஹா ஆஆஆ.... ஓஹோ ஓஓஓ..... (ஸ்மார்ட்போனும்...)
மடிக் - கம்ப்யூட்டர் மடியவிட்டு இறங்கிப்போச்சுடா(2)
அதனால-படுஜோரா-தினம்-ஆட்டம் பாட்டம் போட்டோண்டா

ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
குத்தாட்டம் போட்டோண்டா - மல்லாந்து கெடந்தோண்டா (3)
குத்தாட்டம் போட்டோண்டா...........
குத்தாட்டம்-குத்தாட்டம்-குத்தாட்டம் போட்-டோண்-டாஆஆஆ

201607 கேம்பிங் - காமெடி - கரடி பாட்டு

1
கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா (2)
     ரக்கூனு மூஞ்சில - ரசத்த ஊத்தி உட்டோண்டா(2)
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
2
பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா (2)
     தட்டானப் பாத்து - தெருப்பேரு கேட்டோண்டா(2)
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
1
நண்டோட கால ஒடச்சி - வறுத்த ஆத்தாவாம் - முத்துப்
பேட்டைக்கே புத்திசொல்லும் - குட்டி ராத்தாவாம்
ஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (நண்டோட கால ஒடச்சி)
பட்டுக் - கோட்டைக்கே ராணி மட்டும் - சும்மா உட்டுருமா (2)
     கொடுவாவ-கொழம்பாக்கி-கரடி-மூக்கக்கோணல் ஆக்கிருச்சாம்
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
2
தரையோடு நிலவும் வந்தா - சொர்க்கம் இல்லியா - கீழக்
கரையோடு கோழி வந்தா - சூப்பர் இல்லியா
ஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (தரையோடு நிலவும் வந்தா)
    சுட்டக் - காலோடு சுடுநாயச் - சுட்டுக்கிட்டோண்டா (2)
    பத்தாம-பரோட்டாவ-சரி-பொறட்டிப் பொறட்டி எடுத்தோண்டா
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
1
ராலோட தோலவுறிக்க - ராஜா வந்தாரம் - அதை
ராவோட ராவாக - வறுத்தும் தந்தாரம்
ஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (ராலோட தோலவுறிக்க )
மல்லிப் - பட்டீண அக்காவுக்குக் - கரடி பயமாம் (2)
     ஆனாலும்-படுஜோரா-புது-டெண்டுக்குள்ள தூக்கமாம்
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
2
மலக்கோட்டக் கறியாணம் - டேஸ்டப் பாருங்க - மதுர
முனியாண்டி ஓட்டாண்டி - ஆவப்போறாங்க
ஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (மலக்கோட்டக் கறியாணம்)
முழுத் - தேங்காய தொம்சம் பண்ணிச் - சட்னி ஆச்சுங்க (2)
     நெய்ஊத்தி-சோறாக்கி-படு-டாப்பு டாப்பு டக்கருங்க
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
1
கம்பத்தில் கட்டியிருக்குங் - கொடியப் பாருங்க - அந்தக்
கருவாட்டில் நெய்வாசம் - வருதாச் சொல்லுங்க
ஆஹா ஆஆஆ.... ஓஹோ ஓஓஓ..... (கம்பத்தில் கட்டியிருக்குங்)
முட்ட - ஆம்லெட்டும் டூனாவும் சண்டை போட்டுச்சாம் (2)
     முழுசாக-வேகாத-அந்த-முட்டதானே ஜெயிச்சிச்சாம்
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா
2
ஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு
மேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா
1+2
ஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு
கரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா

குத்தாட்டம் போட்டோண்டா - மல்லாந்து கெடந்தோண்டா (3)
குத்தாட்டம் போட்டோண்டா...........
குத்தாட்டம்-குத்தாட்டம்-குத்தாட்டம் போட்-டோண்-டாஆஆஆ

201607 கேம்பிங் காமெடி நண்டு

நண்டுக்கு குட்டி நண்டுக்கு
மச்சி மசாலா அறைக்குது
சொந்தங்கள் அதன் பந்தங்கள்
ஒண்ணு சேந்து வேகுது

மச்சானே வந்து நின்னானே - அவன்
மார்பிலே நண்டின் பாசமே
வச்சானே கைய வச்சானே - துப்பும்
ஓட்டையும் கூட காணோமே

தட்டையில் இட்டதென்ன
முத்துப்பேட்ட நண்டா
கொட்டிவிட்டு எட்டிப்பாக்க
செத்துப்போன துண்டா

201801 ஜல்லிக்கட்டு

தொறடா வாடிய விடுடா காளைய
தொறடா வாடிய விடுடா காளைய

கெழக்காலதாம் பாயுது மேற்காலயுந் தாவுது
கெழக்காலதாம் பாயுது மேற்காலயுந் தாவுது

இதமா பதமா அணைச்சி தழுவோணும்
மெதுவா முறையா வீரம் காட்டோணும்
இதமா பதமா அணைச்சி தழுவோணும்
மெதுவா முறையா வீரம் காட்டோணும்

ஆ... அஹ.... ஆ...... அஹ......

பீட்டா வர்ராண்டா
நோட்டம் விட்றாண்டா
நாட்டுக் காளைங்களை
ஓட்டத் துணிஞ்சாண்டா

நாட்டுடமை பாடிக்கிட்டு பீட்டாவப் பாடகட்டு
மறத்தமிழன் வீரம்கேட்டு மறுபடியும் ஜல்லிக்கட்டு

உரமா தரமா தமிழன் காளைங்கடா
ஓடிப் போடா வெள்ளைக் காரைங்களா
ஒண்ணாக் கூடும் சென்னைச் சொந்தமடா
உலகே கேட்கும் உரிமைக் கோசமடா

201707 சாலிகா பாட்டு

என் சிட்டு என் செல்லம் 
என் லட்டு என் லொல்லு
என் சாலி...கா

சட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ
செந்தூரச் சந்தனக் கட்டி
சின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்
தாங்கலியே தங்கக்கட்டி

ஊரெல்லாம் உன்னோட பாட்டக்கேட்டு
சும்மா மயக்கமே போட்டுருச்சு (2)
உனக்காக நான்போட்ட பாட்டெல்லாம்
அட ஒண்ணுமத்துப் போயிருச்சு
கொய்யால....
உனக்காக நான்போட்ட பாட்டெல்லாம்
அட ஒண்ணுமத்துப் போயிருச்சு

சட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ
செந்தூரச் சந்தனக் கட்டி
சின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்
தாங்கலியே தங்கக்கட்டி

நெஞ்செல்லாம் தேனூறிக் கொட்டுறாரு
உன்னைத் தொட்டதுமே சஃபிக் கமாலு (2)
கண்ணெல்லாம் பொன்னாகிப் போறாங்க
உன்னைக் கண்டதுமே சல்வா சஸ்பி
மெய்யாலும்
கண்ணெல்லாம் பொன்னாகிப் போறாங்க
உன்னைக் கண்டதுமே சல்வா சஸ்பி

சட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ
செந்தூரச் சந்தனக் கட்டி
சின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்
தாங்கலியே தங்கக்கட்டி

நீ எப்போதும் எல்லோருக்கும் உயிராக
பெரும் நலமோடு வாழ்வாய் சாலி....

என் சிட்டு என் செல்லம் 
என் லட்டு என் லொல்லு
என் சாலி...ஹா

சட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ
செந்தூரச் சந்தனக் கட்டி
சின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்
தாங்கலியே தங்கக்கட்டி

செல்லக் குட்டியே
சாலிகா சாலிகா
சாலி சாலி
சாலி சாலி...கா

கண்ணுக் குட்டியே
சாலிகா சாலிகா
சாலி சாலி
சாலி சாலி...கா

தங்கக் கட்டியே
சாலிகா சாலிகா
சாலி சாலி
சாலி சாலி...கா


201407 ஒரில்லியா பீச்சுடா

ஒரில்லியா பீச்சுடா... ஊரு பட்ட லூட்டிடா
வூட்டுக்கு வர மன்சே இல்லையடா

ஏரிக்குள்ள ஓட்டண்டா... ஏகப்பட்ட ஆட்டண்டா
முக்கி முக்கி மூச்சே போனதடா

First First பிக்னிக் the Best Best - இதுதான்
First First பிக்னிக் the Best Best

இது டீமாக்கின் சங்கண்டா... பேட்மிட்டன் Club-புடா
தூளு கெளப்ப வேற யாருடா.... ஹோ ஹோ ஹோய்....

* ஒரில்லியா....

காத்தால கரீட்டா ஏழரைக்கே கெளம்பிட்டோம்
-- சூப்பரு அதுதான் சூப்பரு

காடு மேடு கரைகளெல்லாம் சுத்திச் சுத்தி ஓட்டினோம்
--சூப்பரு அதுவும் சூப்பரு

முத்துப் பேட்ட கைலி மடிச்சிகட்டி
ரரா ராஜா டீயாத்துன கெத்து தாங்கல
சுட்டக் கோழி கடிச்சிழுக்கும்போதும்
நுநு நூஹு விட்டடிச்ச ஜோக்கு தாங்கல

அட எல்லாமே... டக்கரு டாப்புடா
நெஞ்சக் கூட்டுல... நிக்கிற நெனப்புடா

அட
குளிக்கக் குளிக்கக் குளிரு போச்சுடா
சுட்டக் கோழி ராலைக் கடிக்கக் கடிக்க சொர்க்கம் ஆச்சுடா

* ஒரில்லியா....

ஆட்டுக்கறி வறுத்துவந்த அன்ஹர்தீனைக் காணல
--புரியல இன்னமும் புரியல

ஆளும்பேரும் பிரிச்சுக்கிட்டு சேவை செஞ்சோம் ஜாலியா
--சூப்பரு அதுதான் சூப்பரு

நண்டையும் குஞ்சையும் அள்ளிக்கிட்டுப் பொண்டுக
சில்லு... தண்ணிக்குள்ள அடிச்ச கொட்டம் ஏரி தாங்கல

அந்த தயிரு சோறே தாங்க முடியா ஜோரு
அட அதுக்குமேல கட்டுச் சோறு கெட்டித் தேனடா

ஆகஸ்டும்... பிக்னிக் போவோணும்
போவாட்டி... டாக்டரைப் பாக்கோணும்

அந்த வாலிபாலு கிரவுண்டுல
படு ஜாலியான ரவுண்டுல
சேட்டை பண்ணி ஆட்டம் போட்டமடா
ஹோ ஹோ ஹோய்

* ஒரில்லியா

201111 நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன் (2)

நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்
நம் நீதி நாளின் அதிபதியே

அவன் ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்பவனில்லை
யா அல்லாஹ் நீயே!

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லாயிலாஹா இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வளில்லாஹ் இல்ஹம்த்

ஈர மண்ணில் ரூஹை ஊதி உயிரைத் தந்தானே
வாழ்வதற்கு வானம் பூமி அமைத்து வைத்தானே
மனப் பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தான்
அந்த மார்க்கத்தை ஏற்பதற்கு நபியை ஈந்தான்

ஒரெழுத்தும் கற்றிடாத உம்மி நபியை
ஹிராவில் இக்ராஹ் என ஓதச் செய்தான்
குர்’ஆன் வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஆற்றல் தந்தான்
அந்த வேதமே மனிதனுக்குப் பாதையாக்கினான்

தனக்கான தேவை  இல்லாதவன்
நம் தேவை தீர்க்கும் வல்லோனவன்
அவன் அகிலத்தின் அருளாக நபியைத் தந்தான்
நபி வழியே இஸ்லாம்

ஆதாம் ஹவ்வா இருவரையும் படைத்துச் சேர்த்தவன்
அவர்கள் வழி மனித இனம் பெருகச் செய்தவன்
நாம் மற்றவரை அறிவதற்கு வேற்றுமை கலந்தான்
உயர்ந்தோர் நம்மிடையே அவனை உணர்ந்தோர் என்றான்

இன்னல்களும் இன்பங்களும் நேரும் வாழ்விலே
நேரடியே தன்னை நாட நீதி விதித்தான்
அகில உலகமெங்கும் அடங்கும் யாவும் உரியவன்னல்லாஹ்
யாவும் தன்னிடமே திரும்பிட விதி செய்தான்

இசை - முபீன்
பாடல் - அன்புடன் புகாரி
பாடகர் - எர்பானுல்லாஹ்
அரபிக் கோரஸ்    - முஹமது அலி, ரஷித், அஜிஸ், மலேசியா முஹமது அலி, அன்சாரி, அப்துல்லாஹ், பராஸ், பைசல், மஹ்புஸ் & சலாம் எக்ஸ்பிரஸ்
முகப்பு ஓவியம் - நசிருதீன் மாலிக்

(நான் அனுப்பி வைத்த இறுதிப் பாடல் வரிகள்)

201111 ஈர மண்ணில் ரூகை ஊதி (இறுதி)

ஈர மண்ணில் ரூகை ஊதி வாழ்வைத் தந்தானே
வாழ்வதற்கு வானம் பூமி அமைத்து வைத்தானே
மனப் பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தான்
அந்த மார்க்கத்தை ஏற்பதற்கு நபியை ஈந்தான்

ஓரெழுத்தும் கற்றிடாத உம்மத்து நபியை
ஹீராவில் கூராக்கள் ஓதச் சொன்னான்
குர்-ஆன் வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஊக்கம் தந்தான்
அந்த வேதமே மனிதனுக்கு பாதையாக்கினான்

தனக்கான தேவை இல்லாதவன்
நம் தேவை தீர்க்கும் வல்லோனவன்
அவன் தீனோரின் வரமாகத் தொழுகை தந்தான்
நம் நன்றி அதுதான்

பெண்ணின்றால் போகப் பொருள் என்ற பூமியில்
பெண்ணுரிமைக் கொண்டு வாழ நீதி விதித்தான்
அன்று அவதியிலே அடிமைகள் மூழ்கிய பொழுது
எங்கும் அடிமைகளே இல்லையென்று விலங்கை நீக்கினான்

மக்காவில் தீனோர் கண்ணீரில் உருக
குறைசியின் கொடுமை அந்த மண்ணில் பெருக
மதினா நகர் நோக்கி ஹிஜ்ராவின் கட்டளை இட்டான்
எளிய தீனோரை தன் பார்வையில் கொண்டு சேர்த்தான்

நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்
நம் நீதி நாளின் அதிபதியே
அவன் ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்பவன் இல்லை
நம் பிறப்பும் அவன் கருணை

(சில மாற்றங்களை இசையமைப்பாளர் செய்திருக்கிறார்)

201111 தக்பீர் பாடல்

            கோரஸ்: அல்லாஹு அக்பர்....

பாலைவனம் பால்பொழிய ஏற்றம் வைத்தானே 
   பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தானே - என்றும்
ஏழைகளைச் செல்வருடன் சேர்த்து வைத்தானே - தொழும்
   ஏகனவன் பள்ளியிலே பேதம் கொன்றானே

மாநபிகள் நாயகத்தை மண்ணில் ஈந்தானே
   ஹீராவில் சூராக்கள் ஓதச் சொன்னானே - அவரோ
ஓரெழுத்தும் கற்றிடாத உம்மத்து நபியே - குர்-ஆன்
   வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஊக்கம் தந்தானே

தனக்கான தேவை இல்லாதவன்
   நம் தேவை தீர்க்கும் வல்லோனவன்
வழி காட்டும் வரமாக அவன் தொழுகை தந்தான்
   நம் நன்றியே அதுதான்

      கோரஸ்: அல்லாஹு அக்பர்....

பெண்ணென்றால் போகப்பொருள் என்ற பூமியில்
   பெண்ணுரிமை கொண்டுவாழ சட்டம் தந்தானே - அரபியர்
அடிமைகளைக் கொடுமைசெய்த கோர நாட்களில் - எங்கும்
   அடிமைகளே இல்லையென்று விலங்குடைத்தானே

மக்கத்தின் வீதிகளில் கொடுமை எழுந்ததால்
   குறைஷிகளின் அகங்காரம் விஷத்தை உமிழ்ந்ததால் - மதினா
நகர்நோக்கி பயணமாக கட்டளை இட்டானே - எளிய
   முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கருணை ஈந்தானே

நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்
   நம் நீதி நாளின் அதிபதியே அவன்
ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்வபவன் இல்லை
   நம் பிறப்பும் அவன் கருணை


      கோரஸ்: அல்லாஹு அக்பர்....