என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

தமிழ் எந்த மொழிக்குள்ளும் கள்ளம் புகாதிருக்க, ஏன் பிற மொழிகள் தமிழுக்குள் கள்ளம் புகுகின்றன?

இது பிறமொழிகளின் குற்றமா
அல்லது தமிழர்களின் குற்றமா?

தமிழர்களின் குற்றமென்றே தோன்றுகிறது.

தமிழனுக்கு அந்நிய மோகம் அதிகம்.

ஒரு தமிழனால் அவனுடைய பாரம்பரியத்தையும், செழுமையான மொழி அழகையும், அதன் இலக்கிய வேர்ச் சுவையையும் சுவைக்கத் தெரிவதில்லை.

தன் சொந்த இலக்கியத்தின்மீது துளியும் காதல் இல்லாமல் அயல் இலக்கியத்துக்குள் குப்புற விழுந்து கிடக்கிறான்.

அடுத்தவர் தட்டைப் பார்த்தே எச்சில் வழிகிறான்

பேரவலமல்லவா இது?

இதிலும்கூட நான் பாரதியைப் போற்றுகிறேன். அவன் எத்தனை மொழி கற்ற முடியுமோ அத்தனையும் கற்றான். எங்கிருந்தெல்லாம் கொண்டுவந்து தமிழின் வேர்களுக்கு நீர் வார்க்க முடியுமோ  வார்த்தான். ஆனால் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் என்று தன் பாரம்பரியக் கவிஞர்களையே கண்டு பெரிதும் வியந்தான்.

ஆனால் சில மேதாவித் தமிழர்களோ இன்று அயல் இலக்கியத்தைக் கண்டல்லவா வியக்கிறார்கள். தமிழ் ஒரு குப்பை என்றெல்லவா நினைக்கிறார்கள்!

இவர்கள் தமிழர்களா?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே
அடிமையின் மோகம்தான்