கவிதைகள் தின வாழ்த்துக்கள்


911, செப்டம்பர் 11 பாரதியின் நினைவு நாள். அன்றுதான் அந்த உச்சி வானம் உடைந்து விழுந்தது. பாரதி நினைவு நாளுக்கு நான் கவிதை எழுதவில்லை, ஒரு காவியமே படைத்திருக்கிறேன். அந்தக் காவியம் பல்லாயிரம் வரிகளைக் கொண்டதல்ல, இரண்டே இரண்டு வரிகளையே கொண்டது. ஆனால் அந்த இரு வரிகளும் உங்கள் இதயங்களில் விழுந்ததும், ஈராயிரம் வரிகளாய்ப் பல்கிப் பெறுக வேண்டும். அதுவே என் ஆசை. இதோ அந்த இருவரிக் காவியம் உங்களுக்காக:


கவிராசன் காவியம்


செல்லம்மாள் சேலை கேட்டாள்
பாரதி நூல் கொடுத்தான்

பாட்டுக்குப் பொன்னாடை
பாடைக்குப் பதினாலேபேர்

Comments

பூங்குழலி said…
நேற்று ஒரு ஃப்.எம் அலைவரிசையில் பாரதியின் பாடல்கள் சிலவற்றை அழகாக தொகுத்து வழங்கினார்கள் .நன்றாக இருந்தது .

பாடைக்குப்
பதினாலுபேர்

பாரதியைப் போன்றோர் காலம் கடந்தே உணரப்படுகிறார்கள் .இவர்களின் சிந்தனை அந்த தலைமுறையை விஞ்சி இருப்பதே காரணமாக இருக்கலாம் .
பாரதி திரைப்படத்தில் இறுதி காட்சியில் "நல்லதோர் வீணை செய்தே"என்ற பாடலை இழைய விட்டிருப்பார்கள் ,நெகிழ்வாக இருக்கும் பார்க்கும் போதே ....
சீனா said…
அன்பின் புகாரி

சேலை கேட்டால் நூல் கொடுத்தவன் பாரதி - என்ன செய்வது - அவன் மனம் எங்கோ சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த வேளை - நால் இயற்றினான் - சேலை கேட்டது அவன் காதில் விழவே இல்லை


கவிதைக்குப் பொன்னாடை

............................ பதினாலு பேர்


ம்ம் என்ன செய்வது புகாரி - அந்தக்காலம் அப்படி - ஆய் விட்டது
ஆயிஷா said…
நல்ல கற்பனை ஆசான். சிந்தித்தேன்.
அன்புடன் ஆயிஷா

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ