05

என்னைப் பார்த்து
அசைகிறது
என்னை நினைத்து
எரிகிறது
அருகில் சென்றால்
சுடுகிறது

அதன் வேரில் நிரம்பும் எண்ணெய்
என்னைப் பற்றிய நினைவுகள்

அதன் திரியில் எரியும் தீபம்
என் மீதான காதல்

அதைச் சூழ்ந்து உணவாகும் காற்று
என் மீதான கனவுகள்

அது வீசும் ஒளியில்
 எனக்கான ஏக்கம்
 வெளிச்சமாய் இருக்கிறது

 அது ஆடும் நடனத்தில்
 எனக்கான கண்ணீர்
 சிதறித் தெறிக்கிறது
என்னைப் பார்த்து
அசைகிறது
என்னை நினைத்து
எரிகிறது
அருகில் சென்றால்
சுடுகிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

சீதாம்மா said...

இன்பம் கொடுப்பதும் காதல்
. துன்பத்தால் துளைப்பதும் காதல்
அருகில் சென்றால் சுடும்
அந்த சூட்டுக்குத்தானே மனம் ஏங்குகின்ரது
கணினியை மனிதன் பார்த்து வியக்கின்றான்
மனத்தின் விளையாட்டுக்கு முன்னால் கணினி ஓர் அணு
காதல் கல்யாணத்தில் செத்துவிடும்
ஆனால் தோல்வியில் காத்ல் வாழும்
காதலின் சக்தி மகத்தானது

சீனா said...

ம்ம்ம் - மலரும் நினைவுகளை மறக்க இயலாதவன்

நலல் கவிதை

நட்புடன் ..... சீனா

பூங்குழலி said...

அதன் வேரில் நிரம்பும் எண்ணெய்
என் நினைவுகள்

வேரில் என்று சொன்னதன் மூலம் நினைவுகள் உயிரூட்டுபவையாக இருக்கின்றன என்று உணர்த்தினீர்கள் .
அழகான கவிதை

விஷ்ணு said...

கவிதை மிக அருமை புகாரி அவர்களே ...
உணர்வுகளை சொன்னவிதம் மிக அருமை ..
உவமைக்கு எரியும் தீபத்தை கருவாக்கி ...

நன்றிகள் நல்ல கவிதை
விஷ்ணு ...