08

உன் சோலையில்
என் கிளிகள் சிறகடிக்கின்றன

உன் சங்கினில்
என் காற்று இசைக்கின்றது

உன் குளத்தினில்
என் மீன்கள் குதிக்கின்றன

உன் வானத்தில்
என் நட்சத்திரங்கள் மினுக்குகின்றன

உன் பஞ்சினில்
என் நெருப்பு பத்திக்கொள்கிறது

நீயோ
ஏதுமறியாதவள் போல்
என்னிடம்
பொய்யாய்க் காட்டித் திரிகிறாய்

போதுமடீ
என் பொல்லாதவளே

காலமும் காதலும்
சேர்ந்திருந்தால்தான்
அதன் பெயர்
பிரபஞ்சம்

வா வா
வாழ்வோம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

அன்புடன் மலிக்கா said...

/போதுமடீ
என் பொல்லாதவளே
காலமும் காதலும்
சேர்ந்திருந்தால்தான்
அதன் பெயர் பிரபஞ்சம்
வா வா வாழ்வோம்/

ஆசான் உங்களின் கவிகளுக்கு கண்ணிமைகள் கட்டுண்டு கிடக்கிறது..

பூங்குழலி said...

நீயோ
ஏதுமறியாதவளாய்
என்னிடம் காட்டித் திரிகிறாய்

அழகு

சிவா said...

உன் சோலையில்
என் கிளிகள் சிறகடிக்கின்றன
உன் சங்கினில்
என் காற்று இசைக்கின்றது
உன் குளத்தினில்
என் மீன்கள் குதிக்கின்றன
உன் வானத்தில்
என் நட்சத்திரங்கள் மினுக்குகின்றன
உன் பஞ்சினில்
என் நெருப்பு பத்திக்கிடக்கிறது
நீயோ
ஏதுமறியாதவளாய்
என்னிடம் காட்டித் திரிகிறாய்

மிகவும் அருமை ஆசான்

போதுமடீ
என் பொல்லாதவளே
காலமும் காதலும்
சேர்ந்திருந்தால்தான்
அதன் பெயர் பிரபஞ்சம்
வா வா வாழ்வோம்


அதானே :)

விஷ்ணு said...

ஏதும் அறியாதது போல நடிப்பவர்களை என்ன செய்வது ???

கவிதை அருமை ஆசானே .

அன்புடன்
விஷ்ணு ..