09

என்
இதயச் சுடுகாட்டில்
உன்
நினைவுச் சடலங்களைப்
புதைக்க
பிஞ்சு விரல்களுடன்
சென்றேன்

முட்கள் கிடந்தன

*

இரும்புக் கம்பிகளுடன்
சென்றேன்

இரத்தம் கசிந்தது

*

வெப்பக் கண்ணீருடன்
சென்றேன்

புதைந்து கொண்டன

*

ஆனால்
என்
பிரியமானவளே

வினாடி இமைகள்
நிமிசக்கண்
தழுவும்முன்
செத்த சடலங்கள்
சிலிர்த்துக் கொண்டன

பிசாசுகளாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

அற்புதமாக நினைவுகளின் வலியின் நிஜம் சொல்லும் கவிதை....அலையும் பிசாசுகளுடன் வாழ்வதும் சுகம் தான்...
பூங்குழலி said…
வினாடி இமைகள் நிமிசக்கண் தழுவும்முன்
செத்த சடலங்கள் சிலிர்த்துக் கொண்டன


அருமை
புன்னகையரசன் said…
அட்டகாசம் ஆசான்
ஆயிஷா said…
ஆசான்

புதைக்கத் தான் முடியுமா? நினைவுகள் வரும் போதெல்லாம் கண்ணில் கண்ணீர் துளிகள் பொசுக்கென்று வந்து விடுமே.
நல்ல கவிதை. யதார்த்தமானது.
அன்புடன் ஆயிஷா
ஆயிஷா said…
ஆசான்

புதைக்கத் தான் முடியுமா? நினைவுகள் வரும் போதெல்லாம் கண்ணில் கண்ணீர் துளிகள் பொசுக்கென்று வந்து விடுமே.
நல்ல கவிதை. யதார்த்தமானது.
அன்புடன் ஆயிஷா
சிவா said…
நினைவுகளை புதைக்க முடியாது ஆசான்

புதைத்து விட்டது போல் கண்பித்து கொள்ளலாம்
சிவா said…
நினைவுகளை புதைக்க முடியாது ஆசான்

புதைத்து விட்டது போல் கண்பித்து கொள்ளலாம்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்