மனித இனம்


அறைந்த
கன்னத்துக்கு
அடுத்த கன்னத்தைக்
காட்டினாலும்
அதிலும் அறையும்
ஒரே உயிரினம்
மனித இனம்

இப்படி
அவநம்பிக்கைக்
கவிதை எழுத வேண்டுமா
என்று அழுகிறது இதயம்

இல்லை
இதை வாசிக்கும் நெஞ்சம்
யோசிக்கும் என்று
சமாதானம் சொல்கிறது
நேர்மறை அறிவு

2 comments:

Cheena said...

நிச்சயம் வாசிக்கும் நெஞ்சம் யோசிக்கும்

அன்புடன் ..... சீனா

Anonymous said...

"நம்பிக்கைதான் வாழ்க்கை"

ஒவ்வொரு உறவும் பிடிமானமாகத்தான் இருக்கிறது ஆனால் அதுவே அவமானத்தை தேடித்தரும் என்று அறியாத போது நம்பிக்"கை" நொறுங்கத்தான் செய்யும்.

ஆனால், ஏமாந்துகொண்டே இருக்கின்றோம் என்றால் எம்மை நாம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.