எழுது இளையவனே எழுது


உள்ளதை உள்ளத்தை
உளறுவது கவிதை

மன்னன் நடந்தால்தான்
நடையென்றில்லை

மழலை நடந்தாலும்
அது நடைதான்

எழுது இளையவனே
எழுது

நீ உன்
கவிதையை
நிதானமாய் நிம்மதியாய்
எழுது

விமரிசனம்
உனக்கான பாதை
தடுப்பு அல்ல

பாராட்டு
உனக்கான நிதானம்
ஓட்டம் அல்ல

எழுது இளையவனே
எழுது

1 comment:

Begum said...

ஆசான்
ஆர்வத்தை தூண்டும் ஒரு கவிதை.
எனக்கும் எழுதனும் என் ஆவல் ஏற்படுகின்றது.

அன்புடன் ஆயிஷா