புதிய சொர்க்கம்


எண்ணங்களை
வானத்தில்
முடிச்சுப் போடு
அந்த மேகத்தையேனும்
தொட்டுவிடலாம்

உடலை
உழைப்பில்
வருத்தி வை
நல்ல நித்திரையையாவது
பரிசாகப் பெறலாம்

கைகளைக்
கொடுக்கப்
பழக்கிச் செல்
நிம்மதிச் செல்வம்
வாசல்வரக் காணலாம்

மனதைக்
காலடியில்
கட்டி வை
பழைய நரகங்களை
விற்றுவிட்டு
புதிய சொர்க்கம்
வாங்கிவிடலாம்

2 comments:

Cheena said...

உண்மை புகாரி - படம் - கவிதை அருமை. உள்ளம் உதட்டிற்கு வந்து விட்டது.

//கைகளைக்
கொடுக்கப்
பழக்கிச் சென்றால்
நிம்மதிச் செல்வம்
வாசல்வரக் காணலாம்//

இது எனக்குப் பிடித்தது. ரசித்தேன். மகிழ்ந்தேன் !

அன்புடன் ..... சீனா

aruna said...

//மனதைக்
காலடியில்
கட்டி வைத்தால்
பழைய நரகங்களை
விற்றுவிட்டு
புதிய சொர்க்கம்
வாங்கிவிடலாம்//

இந்த வித்தையைத் தாங்க கத்துக்கிறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கிறோம்!
அன்புடன் அருணா