ஓடிவரும் கன்றுதான் உறவு


ரத்தத்தில்
பிணைக்கப்பட்டதென்றாலும்
தொப்புள் கொடி
அறுந்தால்தான்
குழந்தை
உயிர் வாழும்

உயிர்கரைத்து
வளர்த்தெடுத்தாலும்
பெற்றோர் பந்தம்
தளர்ந்தால்தான்
பிள்ளை வாழ்வு
சிறக்கும்

கயிறவிழ்ந்த பின்னர்
சுற்றித்
திரிந்துவிட்டு
ஓடிவரும் கன்றுதான்
உறவு

3 comments:

Begum said...

உறவின் மகிமைய அழகாய் சொல்லியிருக்கின்றீர்கள் ஆசான்.
என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆயிஷா

M Gurumoorthy said...

அன்புள்ள புகாரி,
பெற்றோர் பந்தம் தளர்ந்தால்தான் பிள்ளை வாழ்வு சிறக்கும்-எல்லா உயிர்களுக்கும்-மனிதனைத்தவிர- இதுவே நடைமுறை வாழ்க்கை.
மனிதப்பிறவி மட்டுமே கடைசிவரை கட்டிஅழும் பிறவி.
அன்புடன்,
மு.குருமூர்த்தி

Selvi Shankar said...

புகாரி,

அறுவடை நாள்தான் நிலத்திற்குச் சிறந்த நாள்!
மரத்தின் கனிகள் மக்களிடம் வந்தால் தான் மரத்திற்குச் சிறப்பு!
பயன்கள் பரவினால் தான் விளைவுகளின் விதை வளரும்!

மலையில் பிறந்த சந்தனமும்
கடலில் பிறந்த முத்தும்
மண்ணில் பிறந்த பொன்னும்
மாற்றிடம் சென்று தானே சிறக்கின்றன!

இடநிகழ் மாற்றங்கள் இயற்கையில் ஏற்றம்.

அன்புடன் ..... செல்வி ஷங்கர்