என் சிறகினில்
இறகாக வேண்டும் என்ற
உன் சிறகினில்
நான் இறகானேன்
என் சிறகினில் நீ இறகானாய்

இருவரும்
உயரே உயரே எழுந்து
தளமறியாமல்
சேர்ந்தே பறந்தோம்

நீ உன் உணர்வு மூச்சால்
பறக்கும் உயரமும்
நான் என் உயிர் மூச்சால்
பறக்கும் உயரமும்
ஒரே தளத்தில்
சஞ்சரிப்பதைக் கண்டு
ஒருவருக்குள் ஒருவர்
மீண்டும் மீண்டும்
விழுகிறோம்

Comments

N Suresh said…
//என் சிறகினில்
இறகாக வேண்டும் என்ற
உன் சிறகினில்
நான் இறகானேன்
என் சிறகினில் நீ இறகானாய்

இருவரும்
உயரே உயரே எழுந்து
தளமறியாமல்
சேர்ந்தே பறந்தோம்//

நான் ரசித்தேன். இப்படி எனக்கு ஒருபோது எழுதத் தோன்றவில்லையே என்று நினைத்தேன்! ஒற்றை இறகில் நாம் எப்படி பறந்தோம் என்று இப்போதும் நினைக்க இயலவில்லை என்று எங்கோ எப்போதோ நான் எழுதின ஞாபகம்!!!

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்