நாளைய குடும்பம் - ஓர் அமெரிக்க வாழ்வுக் காட்சி


1. 16 லிருந்து 18 வயதுக்கும் ஆணும் பெண்ணும் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்.

2. எங்கேயாவது அறை எடுத்து காம சூத்திராவின் சந்துபொந்துகளிலெல்லாம் சிந்து பாடுகிறார்கள்

3. சில பெண்கள் வயிறு தள்ளிவிடுகிறார்கள் பலர் தப்பித்துக்கொள்கிறார்கள். வயிறு தள்ளியவர்களின் குழந்தைக்கு அரசும் தள்ளவைத்த பையனும் பொறுப்பு. குழந்தையின் 14 முதல் 16 வயதுவரை பையன் பெண்ணுக்குப் பணம் தரவேண்டும். பெண்ணும் மாட்டிக்கொள்கிறாள் ஆணும் மாட்டிக்கொள்கிறான்.

3. பள்ளிக்கூட படிப்பும் முடிவடையாத நிலையில் வால்மார்ட் போன்ற பெருங்கடைகளில் வேலை செய்கிறார்கள். பியர் குடிக்க வழியில்லாமல் சாலை முக்குகளில் நின்று காலணா காலணா என்று பிச்சை எடுக்கிறார்கள்.

4. கல்லூரிப் படிப்பிற்கு வட்டியில்லா காலவரையில்லா கடன் தருகிறேன் என்கிறது அரசு. ஆனால் அதைக் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை. வாழ்க்கை பலரோடும் படுக்கையில் விழித்திருக்கிறது

5. இப்படியே ஒரு 30 வ்யதாகிவிடுகிறது. பின் மெதுவாக உணர்கிறார்கள். அரசு தரும் சலுகைகளை ஏற்றுக்கொண்டு சிலர் மட்டும் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். வேலையும் படிப்புமாய் அது பல வருடங்கள் முதியோர் கல்வியாய் ஓடுகிறது

6. 40 வயது ஆகிறது. படுக்கையறை காலியாகக் கிடக்கிறது. எல்லா பறவைகளும் ஓடிவிடுகின்றன. அதே போல காய்ந்துகிடக்கும் இன்னொருவரை கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.

7. பலருக்குக் குழதைகள் கிடையாது. சிலருக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகளை அரசு தரும் பணம் கொண்டு வளர்க்கிறார்கள். பள்ளிக்கூடும் இலவசம். குழந்தைகள் 16 முதல் 18 வயது ஆவதற்குள் வீட்டைவிட்டு அடித்துத் துறத்திவிடுகிறார்கள்.

8. மனிதார்கள் தனித்தனியே தீவுகளாகவே காலமெல்லாம் வாழ்கிறார்கள். எந்த ஒட்டும் எந்த உறவும் இல்லை. சந்திப்போரிடம் பொய்யாய் ஒரு ஹாய் ஹலோ அவ்வளவுதான்.

9. சேமிப்பு கிடையாது, எனவே நாட்டின் பொருளாதாரத்துக்கு இவர்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. நாடு வெளிநாட்டில் அணுகுண்டு வித்து சம்பாதிக்கிறது. ஆயில் மொண்டு வாழ்கிறது.

10. 35 வயதுக்குள் பலரும் மனநோயாளியாகிறார்கள் ஆண்மை குறைவடைகிறார்கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.

1 comment:

நிகழ்காலத்தில்... said...

\\சேமிப்பு கிடையாது, எனவே நாட்டின் பொருளாதாரத்துக்கு இவர்களால் ஒரு பிரயோசனமும் இல்லை.\\

கையில் பணம் இல்லை என்றாலே விரக்திதான்..

உடல்சார்ந்த வாழ்வு எங்கு போய் முடியும் இறுதியில் என்று சரியாக சொல்லி இருக்கிறீர்கள்