நெஞ்ச மரக்கிளைகளிலெல்லாம்
சினேகக் கிளிகளின்
கீச்சுக்கீச்சுகள்

விரும்பினால்
இப்படியா
இடைவெளியே இன்றி
விரும்பும் இந்த இதயம்

நானே அறியாப் பொழுதொன்றில்
என் உயிருக்குள்
உன் உயிரிழைகளால்
கோட்டை கட்டிக்கொண்டவளே

காட்டாற்றில்
இழுத்துக்கொண்டு போகும்
சிறு படகைப்போல
தரிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது
உன் பின்னால் என் நெஞ்சு

இதுவரை
உன் கண்களைத்தான்
பார்த்துக்கொண்டே இருந்தேன்

இப்போது
நான் பலகீனமாய்
ஆகிக் கொண்டிருக்கிறேன்
என்று
புரிந்துகொள்கிறேன்

நீயும்
புரிந்து கொள்கிறாய்
காத்திருந்தவளைப் போல

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சீனா said…
அன்பின் புகாரி


விரும்பினால் முழுவதுமாக விரும்புதல்
தறிகெட்டு ஓடும் மனது - காதல் வயப்பட்ட மனது
ஓடுவதின் மூலம் தெரியாமல் தவித்தல்
கண்களையே பார்த்துப் பார்த்து இய்ற்கையாகவே
உடல் பலமிழந்து விடுகிறது

உண்மை உண்மை புகாரி
அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும்
அதன் அவஸ்தை

நன்று நல்வாழ்த்துகள் புகாரி

நட்புடன் சீனா

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே