*****17 

உணர்வினைத்தா

சுத்தமாய்ப்
புணர்ந்தெறியும்முன்
கட்டிக்கட்டி அணைக்கிறாய்
தொட்டுத் தொட்டு
இங்கும் அங்குமாய்
முத்தம் முத்தமாய் இடுகிறாய்
ஆனால்
அனுபவிக்கத் தெரியவில்லையே
எனக்கு

என்னை நீ
அனுபவிப்பதைப்போல்
உன்னை நான் அனுபவிக்கும்
உணர்வினைத்தா என் மரணமே

2 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கவிதைகள்

வாங்க என் பக்கத்துக்கு

சீனா said...

அன்பின் புகாரி

மாறுபட்ட சிந்தனை -

மரணத்தினை உணர்ந்து ரசித்து மகிழ் முடியுமா ? முடிய வேண்டும் என்பது கருத்தா ? மரணம் சட்டென்று வந்து உணர்வதற்குள் சென்று விடுகிறதே !

ம்ம்ம்ம்ம் - இறப்பினையும் பிறப்பினைப் போலவே அனுபவிக்க முடியுமா ?