09

உயிரின் சூடு
உதடுகளில் முகாமிட்டு
உணர்வுகளை வேட்டையாடி
உள்ளத்தைச் சமைக்க
ஒரு மலைப்பிரதேசத்தின்
பனி மூடிய உச்சியில்
உன்னைத் தொட்டு
நான் முதல் முத்தமிட்டேன்

எத்தனையோ
முத்தங்களுக்குப் பின்னும்
பத்திரமாய் பதுக்கிவைத்து
என்னிடம் சொல்லி சிலிர்க்கும்
உன் ஞாபகங்களுக்குள்
என் காதல் கூடுகட்டி
குஞ்சு பொரித்து
தலைமுறைகள் காணும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சாந்தி said…
பத்திரமாய் பதுக்கிவைத்து
என்னிடம் சொல்லி சிலிர்க்கும்
உன் ஞாபகங்களுக்குள்
என் காதல் கூடுகட்டி
குஞ்சு பொரித்து
தலைமுறைகள் காணும்அழகு...

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
சீனா said…
முதல் முத்தம் - இருவராலும் மறக்க முடியாது
அதுவும் இந்தச்சூழ்நிலையில் பெற்ற முத்தத்தினை மறக்க முடியுமா என்ன

முத்ததினை இவ்வளவு அழகாக வர்ணித்தது புகாரி மட்டுமே

நன்று நன்று நல்வாழ்த்துகள் புகாரி

நட்புடன் ..... சீனா
---------------------------------
பூங்குழலி said…
உயிரின் சூடு
உதடுகளில் முகாமிட்டு
உணர்வுகளை வேட்டையாடி
உள்ளத்தைச் சமைக்க

அழகான வர்ணனை ..

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே