01


உன் கண்களை ஒருநாள்
என்னிடம் கொடு
அதனுள் இருக்கும்
கனவுகளை எல்லாம்
வேடிக்கை பார்த்துவிட்டு
திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

காந்தி said…
அல்டிமேட், புகாரி.......
சீனா said…
அருமை அருமை - கற்ப்னை வளம் கொடி கட்டிப் பறக்கிறது

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

நட்புடன் ..... சீனா
----------------------------------
நினா. கண்ணன் said…
வேடிக்கை உண்மையை உணர்த்தும் கவிதை
ஹரன் ஜாபர் said…
திருப்பிக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை..

ஆழும் மனம், காணும் சுகம் இருக்கிறதே... அப்பப்பா வார்த்தைகளில் விளக்க முடியாது.. ஆனால் உங்களால் முடிகிறது.

மனம் கரைந்த அந்த மௌனம், ஒரு தேவ சுகம்..
அது காதலின் வரம்.

(மீனாவின் கண்கள்தானே.. புகாரி?)
மீரான் said…
கவிதைக்கு நல்லா இருக்கு.

ஆனால் பொருளில்,

கண் பார்வை இல்லாதவர்களுக்கு அல்லது கண்களே இல்லாதவர்களுக்கு கனவுகள் வருவது இல்லையா?

--
நட்புடன்
மீரான்
சீதாம்மா said…
கண்ணைப் பிடுங்கிப் பார்ப்பதில் என்ன இருக்கின்றது
மூடிய விழிகள்
கவிஞன் நிறைய நேரங்களில் மயங்கி விடுகின்றான்
கனவுகள் தங்கும் இடத்தைக் கேட்க வேண்டும்.
நடராஜன் said…
அன்புடன் புகாரியா !
ஏன் மாறினாரோ ?
அன்பிலா அகோரியா !
Anonymous said…
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
விஷ்ணு said…
உன் கனவு
பெட்டகத்தில்
என் கண்களை
அடகு வைத்துவிட்டேன்
மீட்டு தர என்று வருவாய்
நேரில்....

நல்ல கவிதை புகாரி அவர்களே ...


விஷ்ணு
பூங்குழலி said…
அல்டிமேட், புகாரி.......

அதே தான் ..அருமையான கற்பனை
கிரிஜா மணாளன் said…
என்ன புகாரி சார், இப்படி தொடர்ச்சியாக "காதல்" கவிதைகளை இழைகளில் அள்ளி
வழங்கி, என்போன்றவர்களின் இரவுத்தூக்கத்தைக் குறைத்துவிட்டீர்களே!

- கி.ம.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை விழா நன்றியுரை

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ