16
கடவுளைக் கண்டுகொண்டேன்

முன்பே நிகழ்ந்துவிட்டதல்ல
தொடக்கம் இனிதான் வரவேண்டும்

இனிதான் வரப்போவதல்ல
முடிவு எப்போதோ வந்துவிட்டது

இரு வேறு புள்ளிகளல்ல
தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளிதான்

தொடக்கமும் முடிவும்
அறியத் தராத மாயம் பிரபஞ்சம்

பிரபஞ்சமே இறைவன்

12 comments:

cheena (சீனா) said...

அருமையான சிந்தனை
துவங்குவதும் முடிவதும் நம் கையில் இல்லை - ஆட்டுவிப்பவன் யாரோ - அவனே பரம்பொருள்

விசாலம் said...

அன்பு புஹாரி மிக அருமையாக வேதாந்தம் கவிதையில் தெரிகிறது
மிக உண்மையான ஒன்று "பிரபஞ்சமே இறைவன் "

சாதிக் அலி said...

புஹாரி ... அஸ்ஸலாமு அலைக்கும்...


உங்கள் எழுத்தும், கையாண்ட பாணியும் வெகு ஜோர். ஆனால் கவிதையை முடித்தது... சரியல்ல. பிரபஞ்சம் எப்படி இறைவன் ஆவான்.
பிரபஞ்சம் என்பது universe. இந்த உலகத்தை இறைவன் படைத்தது போல் பிரபஞ்சத்தையும் படைத்தான். உலகத்தை இறைவன் என்பீர்களா


-----------அன்புடன் சாதிக் அலி

சாந்தி said...

ம். எல்லாம் மாய மயம்..

நிகழ்காலத்தில்... said...

தன்னையும் இயக்கி நம்மையும் இயக்கும் (பிரபஞ்சம்)இறைவனைப் பற்றி அருமையான கவிதை

காமேஷ் said...

தினம் காண்கிறேன்
கடவுளை
எங்கள் வீட்டு கண்ணாடியில்.
~காமேஷ்~

அன்புடன் புகாரி said...

உண்மை. அது மட்டுமா?

தினம் என்ற பொழுது கடவுளின் பகுதி
காண்கிறேன் என்ற செயல் கடவுளின் பகுதி
கடவுளை என்று சொல்லும் பெயரும் பெயரிடலும் கடவுளின் பகுதி
எங்கள் என்ற அனைவரும் கடவுளின் பகுதி
வீடு கடவுளின் பகுதி
கண்ணாடி கடவுளின் பகுதி

அன்புடன் புகாரி

வில்லன் - திருநிறைச்செல்வன் said...

H ம் O2ம் இணைஞ்சதுதான் H2O வாட்டர் என்ற வேதியல் சமன்பாடு,


அது போலத்தான் மிச்ச நாலு பூதங்களிம் பிரபஞ்சமோட இணைந்து உருவானதுதான் இந்த பூலோகம்,


பிரபஞ்சம் மட்டும் கடவுள் இல்லை,


அது இல்லாம எதும் இல்லை, அது மட்டும் இருந்தும் ஒன்னும் பிரயோசனம் இல்லை,


இந்த வகையிலே நீங்க ஏன் சிந்திக்க கூடாது,

அன்புடன் புகாரி said...

>>>H ம் O2ம் இணைஞ்சதுதான் H2O வாட்டர் என்ற வேதியல் சமன்பாடு, <<<

ரொம்பவும் சரி>>>அது போலத்தான் மிச்ச நாலு பூதங்களிம் பிரபஞ்சமோட இணைந்து உருவானதுதான் இந்த பூலோகம்,<<<<

நாலு பூதமும் பிரபஞ்சத்தோட பகுதிகள்தானே? எங்கேருந்து வந்தன நாலு பூங்கள்?


>>>பிரபஞ்சம் மட்டும் கடவுள் இல்லை,<<<

பிரபஞ்சம் என்பது ஒன்றே ஒன்று. எல்லாம் அடங்கப்பெற்ற ஒன்று. ஆகையால் அது கடவுள்.

>>>அது இல்லாம எதும் இல்லை, அது மட்டும் இருந்தும் ஒன்னும் பிரயோசனம் இல்லை,<<<

அது மட்டும்தான் இப்போ இருக்கு. என்ன பிரயோசனம் மிஸ்ஸிங்?

வில்லன் திருநிறைச்செல்வன் said...

>>>>நாலு பூதமும் பிரபஞ்சத்தோட பகுதிகள்தானே? எங்கேருந்து வந்தன நாலு பூங்கள்?<<<<<

அப்போ நாலு பெருங்கடவுளர்கள், ஒரு மஹா கடவுள் அப்படி சொல்லலாம் இல்லையா

அன்புடன் புகாரி said...

>>>>அப்போ நாலு பெருங்கடவுளர்கள், ஒரு மஹா கடவுள் அப்படி சொல்லலாம் இல்லையா<<<<

நாலு பூதமும் அந்த பிரபஞ்சத்தின் அங்கம் என்று கூறுகிறேன். ஒரு மனிதனாக கற்பனை செய்தால். கை கால் தலை உடல் என்று கொள்ளுங்கள். தனித்தனியே மனிதன் அல்ல. அத்தனையும் சேர்ந்தால்தான் மனிதன்.

அன்புட்ன புகாரி

சக்தி said...

அன்பின் புகாரி,


>> இரு வேறு புள்ளிகளல்ல
தொடக்கமும் முடிவும்
ஒரே புள்ளிதான்


தொடக்கமும் முடிவும்
அறியத் தராத மாயம்
பிரபஞ்சம் >>


அற்புதமான வரிகள்

அன்புடன்
சக்தி