07

கடும்பாலை வனத்தில்
கண்ணயர்ந்து உறங்கலாம்
கொடும்பனி பொட்டலில்
ஆடையின்றி கிடக்கலாம்
கரை தெரியா நடுக்கடலில்
நீச்சல் தெரியாமல் விழலாம்
கிரகங்கள் தென்படாத வானில்
ராக்கெட் இன்றி பறக்கலாம்
இன்னும்
பார்க்க ஒளி
பருக நீர்
நிற்க நிலம்
சுவாசிக்கக் காற்று
எதுவும் தேவையில்லை
ஆனால்
காதலில்லாமல் எப்படி
ஒரு நொடி நகர்த்துவது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

பூங்குழலி said...

காதல் இல்லாமல் எதுவும் இல்லை ..

சீனா said...

அன்பின் புகாரி

காதலில்லாமல் ஒரு நொடிகூட நகராதா - பாலைவனம் - பனி - கடல் - வானம் - நெருப்பு இவைகளின் அழுத்தத்தைக் கூட தாங்கி விடலாமா

காதல் காதல் காதல் - இல்லையா - சாதல் சாதல் சாதல்

நன்று நன்று நண்ப புகாரி நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
-------------------------------