**15

முற்றும் என்பதும் தொடர்தான்

எவற்றுக்கும்
முடிவு என்பது ஓர் அபத்தம்

இந்தப் பிரபஞ்சம் முடிவற்றிருக்கும்போது
அதனுள் சுழலும் யாவும்
முடிவற்றவையே

மாற்றம் பெறுவதென்பதை
முந்தைய மாற்றத்திற்கான முடிவென எண்ணினால்
நொடியின் நுண்நொடிகளில் நிகழும் மாற்றங்கள்
ஓர் அதிநுண் நிகழ்வுகள்

அதிநுண் நிகழ்வுகளின் அதிவேக ஊர்வலம்
முற்றும் என்பதையே
மகா தொடர் என்று ஆக்கிச் சிரிக்கிறது

Comments

வேந்தன் said…
எவற்றுக்கும்
முடிவு என்பது ஓர் அபத்தம்

இந்தப் பிரபஞ்சம் முடிவற்றிருக்கும்போது
அதனுள் சுழலும் யாவும்
முடிவற்றவையே

அண்டம் என்பது முடிவற்றதுதான்.
ஆனால் அண்டத்துள் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும்.

எந்த முழுமையும் சிறுசிறு கூறுகளால் ஆனது
சிறு கூறுகளுக்கு முடிவு இருக்கு. அவற்றுக்கு முற்றும் என்பது உண்மை
சிறுகூறுகள் மாறும் போது முழுமையும் மாறுகிறது எனலாமே?.

மேகங்கள் இல்லாமல் இல்லை.
ஆனால் அது இன்று போல் என்றும் இருந்தது இல்லை


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
வேந்தன்,

உங்க்ளுக்கு இந்த ஐயம் வரும் என்பதற்காகத்தான் நான் அடுத்த வரிகளை இப்படி எழுதி இருக்கிறேன்:


மாற்றம் பெறுவதென்பதை
முந்தைய மாற்றத்திற்கான முடிவென எண்ணினால்
நொடியின் நுண்நொடிகளில் நிகழும் மாற்றங்கள்
ஓர் அதிநுண் நிகழ்வுகள்
அதிநுண் நிகழ்வுகளின் அதிவேக ஊர்வலம்
முற்றும் என்பதையே
மகா தொடர் என்று ஆக்கிச் சிரிக்கிறது

அன்புடன் புகாரி
பிரபஞ்ச இயக்கத்தையே கவிதையாக கொண்டு வருகிற தங்களைப் பாராட்டுகிறேன்.,

தொடருங்கள்

வாழ்த்துக்கள்
சக்தி said…
அன்பின் புகாரி,

அருமையான ஆழ்ந்த தத்துவ விளக்கத்தை அள்ள்ளி வீசியிருக்கிறீர்கள்.


>> மாற்றம் பெறுவதென்பதை
முந்தைய மாற்றத்திற்கான முடிவென எண்ணினால்
நொடியின் நுண்நொடிகளில் நிகழும் மாற்றங்கள்
ஓர் அதிநுண் நிகழ்வுகள் >>


அன்புடன்
சக்தி
பூங்குழலி said…
தலைப்பே ஒரு தனிக் கவிதையாய் ....
சீனா said…
உண்மை உண்மை புகாரி

முற்றும் என்பதே இல்லை

ஒரு செயல் முற்றுப்பெற்றால் அடுத்த செயல் அனிச்சையாகத் துவங்கி விடுகிறதே

கருத்து - சிந்தனை - கவிதை அனைத்த்மே அருமை

நல்வாழ்த்துகள் புகாரி
சாதிக் அலி said…
ஆஹா மயக்குகிறது உமது கவிதை நடை

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ