08

பிச்சைக்காரர்களுக்கெல்லாம்
தேடிச்சென்று காசுபோடுகிறான்
உலக உயிர் வதைகளை
எண்ணியெண்ணி உருகுகிறான்
புல்லும் பூண்டும்கூட
காயப்பட்டுவிடக் கூடாதென்று
கதறுகிறான்

வேகமாய் ஓடிக்கிடந்தவன்
நிதானமாய் நடக்கிறான்
மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்
கனிந்து குழைகிறான்

ஈர நெஞ்சனாய்க் குமிழுடைகிறான்
கருணை விரிக்கிறான்
இவன்
காதலிக்கத் தொடங்கிவிட்டான்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

சீனா said...

காதல் வயப்பட்டவன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பது
நன்கு விளக்கப்பட்டிருக்கும் நலல் கவிதை

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

சிவா said...

மாறித்தானே ஆகணும் ஆசான்